ஆயுள் மெம்பராகச் சேரக்கூடியவர்கள் ஒவ்வொருவருமே குருநாதராக மாற வேண்டும். உங்கள் பார்வையில் தீமையைப் போக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும். உங்கள் எண்ணம் உலகத்தை நல்லதாக்கும் அந்த உணர்வுகளாக விளைய வேண்டும்.
அருள் ஞானச் சக்கரம் இருக்கும் வீடுகளில் எல்லாம் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி அந்தச் சக்கரத்தை பார்த்து...
1.யாராக இருந்தாலும் சரி.. அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்...
2.lஅவர் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
இதைச் செய்தால் மற்றவருடைய துன்பங்களோ நோய்களோ துயரங்களோ நமக்கு வருவதில்லை.
ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்.
1.எப்படி இருந்தாலும் உடலை விட்டுப் போவது உறுதி தான்
2.அதற்காக வேதனைப்பட வேண்டியது அவசியம் இல்லை.
உடலில் நோய் இருந்தால் அது நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள். ஆனால் நோய் நீங்கி அவர்கள் வாழ்ந்தாலும் “எத்தனை வருடம் வாழ்கின்றார்கள்...!”
டாக்டரிடம் சென்று காசைச் செலவழித்து எல்லா மருத்துவமும் பார்க்கத்தான் செய்கின்றோம். உயிருடன் முழுமையாக இருக்கின்றார்களா...? இல்லை...!
நான் அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்... கடைசியில் இறந்து விட்டார்களே...! என்று எண்ணி வேதனைதான் படுகின்றோம்.
அப்படி எண்ணாதபடி...
1“எப்படி இருந்தாலும்” மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்களுக்குள் வளர வேண்டும்... உயர்ந்த நிலை பெற வேண்டும் மட்டும் எண்ணுங்கள்.
2.உடலை விட்டுப் போய்விட்டார்கள் என்றால் உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
3.உடலில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்கி அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “இப்படித்தான் நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்...”
ஏனென்றால் அவர்களுடன் நாம் பழகியிருக்கிறோம். அவர்களுடைய உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு. மேலே சொன்னபடி எண்ணிச் செய்தால் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்துக் கொள்ளலாம்.
ஆகவே சக்கரத்திற்கு முன் நீங்கள் தியானம் செய்து
1.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும்
3.என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்
4.குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ வேண்டும் என்று வரிசைப்படுத்தி நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்
5.குறை என்ற நிலைகள் வரவே கூடாது.
ஏனென்றால் இந்தச் சக்கரத்தில் அவ்வளவு சக்திகள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அது வரும்.
துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த உணர்வோடு நாம் ஒன்றி வாழ வேண்டும்.
1.நம் குருநாதர் அதைக் கவர்ந்தார்... அதன் வழி அங்கே இருக்கின்றார்.
2.அதன் வழியில் நாமும் முயற்சி எடுக்கும் பொழுது அந்த உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக வரும்
3.துருவ நட்சத்திரத்தின் பால் நம்முடய பற்று அதிகமாகும்
4.வாழ்க்கையில் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்... சங்கடங்கள் உட் புகாது தடுக்கும்.
அத்தகைய உணர்வுகளை நாம் பெற வேண்டும்.