துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் நவக் கோள்களின் உணர்வுகளையும் அவைகளின் செயல் மாற்றத்தையும் அகஸ்தியன் உற்று நோக்கி நுகர்கின்றான்.
தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த உணர்வின் அறிவை இவனால் முழுமையாக அறிய முடிகின்றது.
1.துருவம் கவரும்... துருவத்தின் வழி பூமிக்குள் வரும் உணர்வுகள்
2.எவ்வாறு எங்கே எதன் வழியில் இங்கே உருப் பெறுகின்றது...?
3.கலவையாகி அந்த உணர்ச்சிகள் எப்படி எல்லாம் மாறுகின்றது என்பதை அறிந்தான்.
அந்த எல்லையில் இருந்தே அவன் பிரபஞ்சத்தின் ஆற்றல்களை நுகர்ந்தான். அங்கிருந்து பூமி கவர்வதற்கு முன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டான்
27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது எதனின் ஒளிக் கற்றைகள் மாறுகின்றதோ அந்த ஒளிக்கற்றைகளையும் மின்கதிர்களையும் நுகர்ந்து தனக்குள் வளர்த்தவன் தான் அந்த அகஸ்தியன்.
துருவத்தின் நிலைகளில் எதை எதை எல்லாம் நுகர்ந்தானோ இன்று அதே எல்லையில் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கின்றான். பூமிக்குள் வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.
பாம்பு தன் உடலுக்குள் விஷமான உணர்வுகளைத் தான் வளர்த்து வைத்துள்ளது. அது தன் உணவுக்காக மற்ற உயிரினங்களின் மீது விஷத்தைப் பாய்ச்சி அதை மயங்கச் செய்து விழுங்குகிறது. விழுங்கும் போது தனக்கு இணையாக அது கரைக்கச் செய்யும் சக்தியும் பெறுகின்றது.
அதே போல் மாடு ஆடு இவையெல்லாம் இயற்கையில் விளைந்த தாவர இனங்களை உட்கொண்டாலும் அதிலுள்ள விஷத் தன்மையைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு... நல்லவைகளை மலமாக மாற்றுகின்றது.
விஷத்தின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி இந்த உணர்வின் தன்மைகொப்ப வரப்படும் பொழுது ஒரு கடினமான தட்டையாக இருந்தாலும் பிஸ்கட் போன்று அது எளிதில் கரைத்து உணவாக அதை உட்கொள்கின்றது.
பாம்பினமோ மற்றதை விழுங்கும் போதே உடனடியாக நீராக மாற்றும் தன்மை பெற்றது.
1.ஒவ்வொரு உடல்களிலும் பல பல விஷத் தன்மைகள் இருந்தாலும்
2.பாம்பினங்கள் முழுமையாக அது விழுங்கப்படும் பொழுது அதனின் உணர்வின் தன்மை பட்டபின்
3.அது சிறுகச் சிறுகக் கரைந்து நீராக மாறி... அதனுடைய உணவாக மாறி இரத்தங்களாக மாறி
4.இந்த உணர்வின் தன்மை ஒன்றாகித் தன் கருத்தன்மையாக... (தன் இனமாக வளரும்)
5.மற்ற உயிரினங்களின் தன்மையை இதன் உணர்வுபடி அதைக் கவர்ந்து கொள்கின்றது.
ஆனால் மனிதனை இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது. மனிதன் இறந்தால் இந்த விஷத்தின் உணர்வுகள் சேர்த்து உயிருடன் ஒன்றிச் செல்லப்படும் பொழுது எங்கே... எப்படிச் செல்கிறது...?
பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் தூசுகள் மோதும் போது வெளிப்படும் மின்னல்களிலிருந்து “வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ... அதில் வரும் விஷத் தன்மைகளைக் கேதுக் கோள் எப்படி எடுத்துக் கொள்கின்றதோ...” அதைப் போல்
1.பாம்பால் தீண்டப்பட்ட மனித ஆன்மா
2.தரையில் ஊர்ந்து செல்லும் உணர்வுகள் (பாம்பு) அதனுடைய காந்தம் - மேக்னட் அதற்குள் ஈர்க்கப்பட்டு
3.இதை ஒத்த உயிரினமாக இருந்தால் தனக்குள் அதைக் கவர்ந்து... தன் உடலில் சேர்த்துக் கருவாக்கி
4.மனிதனைப் பாம்பினமாக மாற்றிவிடுகிறது.
ஏனென்றால் உயிரின் உணர்வுகள் எதைக் கவர்ந்ததோ... அதன் வலிமை கொண்டு மற்ற... அதற்கொத்த இனத்தின் ஈர்ப்புக்குள் சென்று... அதன் கருத்தன்மை அடையும் தன்மை பெறுகின்றது.
சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.
ஏனென்றல் இயற்கை எப்படி இயக்குகின்றது...? என்பதை அகஸ்தியன் கண்டவன். அதைத்தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம் (ஞானகுரு).