ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2022

துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா...? என்று கேட்டார் குருநாதர்

பாம்பினங்கள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது தான். அந்த விஷம் அதிகமாக அதற்குள் வளர்ச்சி அடையப்படும்பொழுது அது வைரக்கல்லாக... நாகரத்தினமாக மாறுகின்றது.
1.ஆண் பெண் என்ற உணர்வுகள் கொண்டு ஈர்க்கப்பட்டால்
2.அது வைரமாக நாகரத்தினமாக மாறுகின்றது.

இதே போன்று தான் மனிதனின் உணர்வுகள் உணர்ச்சியின் தன்மை கொண்டு இரண்டும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உயிரணுவாக மாறுகின்றது. மனிதனுக்கு அடுத்து உடல் இல்லை.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இப்படித்தான் உணர்வின் தன்மை ஒன்றாகி ஒளியின் சரீரம் பெற்றுத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் குருநாதர் என்னை அங்கத்தினராக இணைத்தார். அங்கத்தினராக இணைத்து அதனைப் பின்பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி அகற்றுவது...? என்றும் உணர்த்தினார்.

புலி குகைக்குள் சுற்றுவது போல 20 வருடம் காடு மேடெல்லாம் அலைந்து... புலியும் பாம்பும் தாக்கிக் கொள்ளும் இடங்களிலும்... புலியும் பன்றியும் தாக்கும் இடங்களிலும் என்னைச் செல்லும்படி செய்து... காட்டு விலங்குகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தப்பிக்கின்றது...? என்று சில உண்மை உணர்வுகளை நேரடியாகக் காணும்படி செய்தார். தெரிந்து கொண்டேன்.

அந்த மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கி இறக்கப்படும் போது அதனின் உடல்கள் எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று
1.மனிதன் பிறிதொரு வேதனையை நுகரப்படும் பொழுது தாக்கி... இந்த உடலை உருமாற்றச் செய்து விடுகின்றது
2.மனிதன் அல்லாத உருக்களாக மாற்றி விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட நீ துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா...? என்று கேட்டார்.

இருளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைந்துவிடு என்றார்.

1.உன் ஆயுள் முழுவதற்கும்... எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றாயோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த உணர்வை வளர்த்து
3.உன் உடலுக்குள் தீமைகளை மாற்றி அமைக்கும் சக்தியாக நீ பெற வேண்டும்.

ஏனென்றால் எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.
1.ஆகவே அதனை நீ பெறு... அதன் வழி நீ வாழ்...! என்று
2.இந்த உண்மையின் தன்மையை குருநாதர் உணர்த்தினார்.

எமது குருநாதர் என்னை எப்படி ஆயுள் கால மெம்பராக அங்கே இணைத்தாரோ... அதன் வழியில் தான் உங்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணையச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் தவறுகள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் மீட்டிக் கொள்ள முடியும்.

பிறர் படும் வேதனைகளையோ துயரங்களையோ கோபங்களையோ நுகர நேர்ந்தாலும் அது உங்களுக்குள் உருப்பெறாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து புருவ மத்தியில் நீங்கள் எண்ணப்படும் பொழுது தீமைகள் உட்புகாது தடுக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்தப்படும் பொழுது இது வலிமை கூடக் கூட நோயாளியின் உணர்வைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகளைப் பிளந்து விடுகின்றது... ஆன்மாவைத் தூய்மையாக்குகிறது.

துணியில் அழுக்குப்பட்ட பின் அது போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கை வெளியேற்றி அதை எப்படித் தூய்மையாக்குகின்றோமோ அதே போன்று தான் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதைத் தூய்மையாக்க முடியும்.

அது உடலில் பெருகப் பெருக...
1.இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைய முடியும்
2.அதற்குத்தான் உங்களை ஆயுள் கால மெம்பராக இணைப்பது.