ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2016

குரு காணிக்கை எது?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற சக்தியை அதன் வழி எனக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

அந்த ஞானிகளின், மகரிஷிகளின் சப்தரிஷிகளின் உணர்வலைகளையும்,
சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
பெறும் தகுதியை எற்படுத்தினார்.

நான் பெற்றேன், உங்களுக்கும் அதைச் சொல்கிறேன்.

ஒரு வித்தினை விளையை வைத்து அதில் வரும் பல வித்துகளாக உருவாக்கி நாம் நிலத்தில் ஊன்றினால் எந்த வித்தினை உருவாக்கினோமோ அதன் சக்தியைப் பெறுவது போன்று உங்களில் இதைப் பெறவேண்டும் என்ற பேராசையில் தான் நான் இதைச் செய்கின்றேன்.

எமது குரு காட்டிய நிலைகள் இங்கே யாரெல்லாம் வந்தீர்களோ, உபதேசத்தைக் கேட்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

·         எங்கள் குடும்பத்திலிலுள்ளோர் நலமாக இருக்கின்றோம்,
·         குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கின்றது,
·         குடும்பத்தில் சகோதரத்துவம் வளர்ந்திருக்கின்றது என்று
நீங்கள் எல்லாம் எப்பொழுது எம்மிடம் சொல்கின்றீர்களோ அப்பொழுதுதான் எமக்குள்ளும் அந்தப் பேரின்ப உணர்வுகள் வளரும்.

·         எங்கள் குடும்பத்தில் தொழில் வளர்கின்றது.
·         குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழ்கின்றோம்,
·         மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறுகின்றோம்
·         எங்கள் பார்வையால் தீமைகள் போகின்றது என்று
எப்பொழுது சொல்கின்றீர்களோ அதைத்தான் குரு காணிக்கையாக நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

அந்த நல்ல உணர்வுகள் எனக்குள் வளரப்படும் பொழுது தீமையற்ற நிலைகளை எனக்குள் உருவாக்குகின்றது. அருள் மகரிஷிகளின் உணர்வுகள் எனக்குள் பெருகவும் செய்கின்றது.

ஏனென்றால், சூரியன் தனக்குள் மற்ற நட்சத்திரங்களின் நிலையும் விஷத் தன்மை கொண்ட கோளின் உணர்வுகளையும் தனக்குள் எடுத்து
நஞ்சின் தன்மையை மாற்றிவிட்டுத்
தனக்குள் ஒளியின் சுடராகி உலகையே காக்கின்றது.

அதைப் போன்று உங்களுடைய உணர்வுகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று உங்கள் பார்வையால் பேச்சால் மூச்சால்
கேட்போர் உணர்வுகளில் இந்தத் தீமைகளை அகற்றி
அதைக் கண்டு நீங்கள் சந்தோசப்படும் நிலைகள் என்று பெறுகின்றீர்களோ
அது உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் ஞானம் வளர்ந்து
இனி பிறவியில்லா நிலையை அடைய உதவும்