ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2016

மகாபாரதத்தின் கடைசி நிகழ்வுகள், மனித உடலின் கடைசி முடிவு - விளக்கம்

இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைக் காட்டுவதற்காக காவியங்களைப் படைத்தனர் ஞானிகள்.

பல கோடித் தீமைகளை வென்று நன்மைகளின் உணர்வுகள் நமக்குள் உருவாகி நன்மை செய்யும் உணர்வின் அணுக்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.

இதில் ஆயிரத்து எட்டு குணம் உண்டு. பத்து குணங்கள் சேர்த்து ஒரு உணர்வின் குணமாகின்றது. நூறு குணங்கள் என்ற நிலைகள் வரும்போது அந்த நூறின் தன்மை பெறுகின்றது.
ட்டு என்பது அஷ்ட திக்கின் உணர்வை நுகர்வது.
பத்து என்பது அந்த உணர்வின் நிலையானது.

தைத்தான் மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர். பஞ்ச பாண்டவர்களின் நிலையில் நுகரப்படும்போது திரௌபதிக்கு இந்த ஆறு பேரும் இந்த ஐந்து பேரின் உணர்வுகளை அதை இயக்குகின்றது.

நாம் எதன் உணர்வை சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அது நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மை மணமும் இதைச் சேர்த்து  புலனறிவு ஐந்து.

ந்த உணர்வின் தன்மை நாம் எக்குணத்தை நுகர்கின்றமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது. துதான் கண்ணனின் சகோதரி திரௌபதி.

தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது - புற நிலை.

சகோதரி திரௌபதி - தன் உடலுக்குள் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது.

கண்ணன் கண்கள் அது எதை எண்ணுகின்றனரோ அதன் உணர்வின் தன்மை உட்புறமாக அதை எப்படி ஊட்டுகின்றது என்பதனைக் காட்டுகின்றார்கள்.

கௌரவர்கள் - அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வை வளர்த்து வளர்த்து வளர்த்து தனக்குள் அது கௌரவர் (கௌரவம்) என்ற நிலை வருகின்றது.

உண்மையின் உணர்வை நாம் நுகர்ந்தால்
தனக்குள் பஞ்ச பாண்டவர்களைத் தன் சூதின் நிலை கொண்டு
திசை திருப்புகின்றனர்.

தன் உணர்வின் வலிமை கொண்டு உட்புகாது அந்த நன்மையின் நிலை பெறாது நம் உடலில் உள்ள கௌரவர்கள் தடைபடுத்துகின்றனர் என்றும், பஞ்ச பாண்டவர்களுக்குப் போர் முறை என்று காட்டுகின்றனர்.

ஆனால், உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ச்சன் என்றும் அதன் உணர்வின் தன்மை கொண்டு நம்மை மாற்றுகிறான் என்றும் இதைத் தெளிவாக உணர்வின் செயலாக்கங்களும் வலுவின் தன்மை எதுவாகின்றது என்றும் காட்டுகின்றார்கள்.

உணர்வின் உணர்வுகளை நமக்குள் எடுக்கும்போது ஆன்மா
கெடுமதி என்ற உணர்வோ அல்லது
கெடுமதியை நீக்கும் உணர்வு வரும்போது
அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பீமன்
நமக்குள் வலுகொண்ட உணர்வுகள் ஆன்மாவாகின்றது.

இந்த ஆன்மாவிற்குள் இந்த வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றார்கள்.

ஆனால், இவர்கள் அனைத்தும் வலு கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலைகள் கௌரவர்கள்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மகா போர்கள் என்ற நிலைகள் நடந்தாலும் அந்த உணர்வுகள் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் போது இவர்கள் ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான்.
கண்ணன் மடிவதற்கு முன் பலராமன் மடிகின்றான்
கடைசி முடிவு.

நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம் எண்ணத்தின் நிலை கொண்டே கண், கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள், பல எண்ணங்கள் அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள் மகாபாரதத்தில்.

ஆகவே கண்ணனின் சகோதரன் மூத்தவன் என்ற உணர்வைக் கொண்டு வருகின்றான்.  மகாபாரதப்போரின் உணர்வை கொண்டு  பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை. கண்ணனும் மடிகின்றான். அவன் சொர்க்கம் அடைந்தான் என்று காரணம் காட்டுகின்றான்.

பின், வலு ஈர்க்கும் தன்மை இல்லையென்றால் பீமன் - அவனும் மலை ஏற முடியாது தவிக்கின்றான் மடிகின்றான்.

ஒரு உணர்வைக் கவர்ந்தால்தான், அதாவது நகுலன் என்ற உணர்வின் தன்மை கொண்டு ஈர்ப்பதும், நன்மை தீமை என்று சகாதேவன் பலருக்கு நன்மை செய்யும் தன்மைகள் வருகின்றது. அவர்களும் இறந்து விடுகின்றார்கள்.

ஆக அனைத்தும் வலுகொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ச்சுனும்  மடிந்து விடுகின்றான். அவனுக்குள் இருக்கும் வீரிய உணர்வுகள் இழந்தபின்  என்ன நடக்கின்றது?

மற்றவர்கள் பசு மாடுகளை ஓட்டிச் செல்கின்றனர். அர்ச்சுனன் கண்ணுக்கு முன் திருடர்கள் வந்து அப்படித் திருடுவதை அவன் அடக்கிவிட வேண்டும்  என்று எண்ணுகிறான்.

தன் ஆயுதமான காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான். னால், உணர்வுகள் அனைத்தும் இழந்தபின் (பீமன், நகுலன், சகாதேவன், கண்ணன்) அவனின் உணர்வுகளின் நிலைகள் ஒன்று சேரவில்லை.
அர்ச்சுனனின் ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை.
அவனை (திருடர்களை) ஒன்றும் செய்ய முடியவில்லை.
தான் வீழ்ந்து விட்டேனே என்ற உணர்வுகள் வருகின்றது.

ஏனென்றால் கண்ணால் கவர்ந்த உணர்வுகள் வலிமையின் உணர்வை இங்கே ஊட்டித்தான் அந்த வலு இயக்குகின்றது என்ற நிலையை இங்கே மகாபாரதப் போரில் காட்டுகின்றார்கள். (கண்களில் பார்வை இல்லையென்றால் நாம் எதை வைத்துப் பார்க்க முடியும்?)

·         ஒரு உணர்வின் தன்மை உடலை எவ்வாறு இயக்குகின்றது?
·         உடல் இயக்கம் அது எவ்வாறு இயங்குகின்றது?
·         உணர்வுகள் மடிந்தபின் எது மடிந்தது?
என்ற நிலைகளை காபாரதத்தில் தெளிவாகக் கூறுகின்றார் வியாசகர்.

.நாம் உணரும் உணர்வுகள் எண்ணங்கள் ஆக, வேதனை என்ற உணர்வானால் வாலி, கோபம் என்ற உணர்வானால் காளி.

நாம் நுகரும் உணர்வு உயிரிலே பட்டபின் அந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகிறது? என்று உணர்த்துகின்றார்கள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ல் வேண்டும். 

நமக்குள் புகுந்த உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும் நிலையில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத்தான் மகாபாரதம் தெளிவாகக் கூறுகின்றது

மனிதன் அருள் வழியில் வாழும் நெறிகளைத்தான் .நமது ஞானிகள் காட்டியுள்ளார்கள். அவர்கள் காட்டிய வழி நடந்தால் நாம் விண் செல்வது சுலபம்.