ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2016

சக்திகளைப் பெற்ற எந்த ஞானியும் இன்று உடலுடன் இல்லை - பிறவியில்லா நிலைதான் இனி நமக்கும் வேண்டும்

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை 48 நாள் ஆவதற்கு முன் நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணையச் செய்து ஒளியின் சரீரம் ஆக்கிடல் வேண்டும்.

அவர்கள் முன் ஒளிச் சரீரமானால், அதன் துணை கொண்டு நாம் அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது நாமும் பிறவியில்லா நிலைகள் அடைகின்றோம்.

ஏனென்றால், இனி நமக்குப் பிறவியில்லா நிலை தான் வேண்டும். இன்று நம் வாழ்க்கையில் வேகா நிலை என்ற நிலையை அடைதல் வேண்டும். நாம் நெருப்பிலே குதித்தால் உயிர் வேகின்றதா? இல்லை.

மனிதனின் வாழ்க்கையில், “என்னை இப்படிச் செய்துவிட்டான், இரு நான் பார்க்கிறேன்.., இப்படிச் செய்தான், இரு நான் பார்க்கிறேன்” என்று எண்ணினால் சாகாக்கலை. இந்த உடலில் யாரை எண்ணினோமோ அவர் உடலுக்குள் போகின்றது.

ஆகவே, ஒன்றை நாம் இம்சித்து நாம் பெற்றோம் என்றால் இது சாகாக்கலையாக வருகின்றது. அந்த இம்சிக்கும் உணர்வுகள் எதனால் எங்கிருந்து உருவாகின்றதோ அவர் உடலுக்குள் தான் நாம் போவோம். இது சாகாக்கலையாக மாறுகின்றது.

இதை வேகா நிலை ஆக்க வேண்டும். சில வைத்தியர்கள் எல்லாம் சொல்வார்கள். நான் சாகாக்கலையைக் கண்டிருக்கின்றேன் என்பார்கள். போகர் பன்னிரெண்டாயிரத்தைப் படித்துக் கொண்டார்கள்.

நான் சாகாக்கலையைக் கற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நான் பல மருந்துகளை அரைத்து எடுத்துச் சாப்பிட்டேன் என்றால் இந்தச் சாகாக்கலை நான் சாக மாட்டேன் என்பது அவருடைய எண்ணம்.

சாகாக்கலை என்பது இவர் எதை அவர் உடலில் வளர்த்துக் கொண்டாரோ இது சாகாக்கலையாக மாறுகின்றது. உடலை விட்டு உயிர் பிரிந்தது எவ்வளவு நாளோ அதற்கப்புறம் இந்தக் கலைப்படி அவர் அடுத்த பிறப்பு பிறப்பார் என்று அவருக்குத் தெரியவில்லை.

என்றுமே இந்த உடலில் அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள், போகர் அத்தனை இதுகளைச் செய்தார் அவர் உடலுடன் இருக்கலாம் அல்லவா? அகஸ்தியர் எத்தனையோ சக்திகளை எல்லாம் செய்தாரே அவர் உடலுடன் இருக்கலாம் அல்லவா? இல்லை.

இதைப் போல ஏனைய எத்தனையோ ஞானிகள் தத்துவத்தைச் சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் உடலுடன் இருக்கலாம் அல்லவா?

இதுவெல்லாம் “படித்துக் கொண்டேன்” என்ற நிலைகளில் பைத்தியக்காரத்தனமாக உண்மையின் உணர்வை அறியாதபடி தானும் அறிய முடியாதபடி மற்றவர்களையும் அறிய விடாது செய்வதும் தவறுகள் செய்து வளர்வோர் தான் இந்த உடலின் நிலைகளுக்குப் புகழுக்கு ஏங்கி பொருளுக்கு ஏங்கி இந்த நிலைகள் பெறச் செய்வோர் தான் இவர்கள்.

ஆகவே, அருள் ஞானிகளின் வழியே நாம் செல்வோம். அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்று பிரார்த்திக் கொள்கின்றேன்.