ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2016

பறக்கும் ஆற்றல் கொண்ட மெய்ஞானிகளின் நிலைகள்

அக்காலத்தில் நம் இந்தியாவின் மேல் படையெடுத்த ஜெர்மனியர்கள் இங்கே மெய்ஞானிகள் கண்டுணர்ந்த சாஸ்திரங்களைக் கவர்ந்து சென்றனர்.

அன்று இராக்கெட் போன்ற நிலைகளை உருவாக்கினார்கள். ஆசியக் கண்டத்திலேயே சீனாவில் உண்டு. விழாக் காலங்களில் வேடிக்கையாக இராக்கெட்டை மருந்துகளைப் போட்டு அதில் பொருத்தி வைத்தபின் இராக்கெட் மாதிரி அது மேலே போகும்.

சீனாவில் அரசர்கள் வாழும் காலங்களில் கொண்டாட்டங்களில் அதிலே பல பொருள்களை உருவாக்கி வெடிகளை உருவாக்கி மேலே விண்ணிலே செலுத்தினார்கள். ஆனால், அது வேடிக்கைக்காகத் தான் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், ஜெர்மனியர்களோ இந்த உணர்வின் தன்மையைக் கவரப்பட்டு அது எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையும் அரசியல் ரீதியில் மற்ற நாடுகளை அடக்குவதற்கு எது? என்ற நிலைகளைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டார்கள்.

நம் நாட்டில் கந்தகம் மற்ற உணர்வோடு சேர்க்கப்படும் பொழுது மற்ற என்னென்ன பொருள்களைச் சேர்க்கின்றோமோ ஒன்று வெடிக்கவும் செய்கின்றது.

மற்றொன்றுடன் பொருள் சேர்த்து மற்ற உலோகத்துடன் கலக்கப்படும் பொழுது இது எரியும் தன்மையில் சூடாகி கொதிகலனின் தன்மைகளை மாற்றுகின்றது என்ற நிலைகளையும் இதை வேடிக்கையாகச் செய்தார்கள்.

ஆனால், பிற்காலத்தில் அதை இராக்கெட்டாகச் செய்தான் விஞ்ஞானி. முதலிலே ஜெர்மனியில் உருவானது. நம்முடைய சாஸ்திரங்கள் அங்கே சென்றது.

இராக்கெட்டின் தன்மையை அன்று மெய்ஞானி சொன்னான்.

விண்ணின் உணர்வின் அலைகள் நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் கலந்துள்ளது. அதை எவ்வாறு எதனால் பிரித்து எடுக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தான்.

அந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்தான். இன்னொரு இடத்திற்குச் செல்லப்படும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையைத் தன் எண்ணத்தால் கவர்ந்து சென்றால் இதனின் ஈர்ப்பில் மனிதன் பறந்தே செல்வான் என்ற அங்கே காட்டப்பட்டுள்ளது.

இரதம் என்ற நிலைகளில் பறக்கும் நிலைகளை அங்கே உருவாக்கப்படும் பொழுது நட்சத்திரங்களின் இயக்கங்களையும் அத எதிர்மறையாக இயக்கப்படும் பொழுது இவன் உருவாக்கிய அந்தச் சப்பரத்தில்
இந்த உணர்வின் அறிவைப் பதியச் செய்து
ஒளிகளைப் பதியச் செய்யப்படும் பொழுது
அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது மிதந்து சென்றான்.
இது சாஸ்திரங்களில் உண்டு.

ஆனால், இதையே நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அணுக் கதிரியக்கங்களைப் பிளந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் வலுக் கொண்டதாக மாற்றி இங்கே இராக்கெட் எப்படி வெடி வெடித்து விண்ணிலே வீசினானோ அதைப் போல வலு கொண்ட உணர்வு கொண்டு அதைப் போன்ற இராக்கெட்டுகளை V1, V2 என்று ஏவினான் ஜெர்மனி.

அதே போல விமான நிலைகளையும் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வில் இந்த ரேடர் (RADAR) காற்றின் அலைகளை எடுத்து இதே உணர்வின் தன்மை அழுத்தத்தைத் தனக்குள் சமப்படுத்தும் நிலைகள் கொண்டுதான் ரேடரைக் கண்டுபிடிக்கின்றான் விஞ்ஞானி.

ஆனால் மெய்ஞானி, காற்றின் அழுத்தத்தின் உணர்வின் தன்மையை தன் உயிருடன் உணர்வுபட்டு,
தன் உடல் பாகங்களிலே அழுத்தம்
எதெனெதன் அழுத்தங்கள் வேண்டுமென்று முதலிலே பதிவு செய்கின்றான்.

தன் நினைவாற்றல் வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிந்த உணர்வுகள் அவன் மிதக்கும் தன்மை அடைகின்றான் மெய்ஞான உணர்வில்.

இந்த இயற்கையின் நிலைகளில் அன்று மெய்ஞானிகள் அதன் வழிகளிலே சென்றவர்கள் உண்டு.

அன்று ஆதிசங்கரரை எடுத்துக் கொண்டால் தன் உடலின் தன்மை எடுக்கப்படும் பொழுது அன்று காடு மேடு எல்லாம் அலைந்தார். அவர் உடலுக்குள் செயல்பட்டவர் கோலமாமகரிஷி.

மூன்று சக்திகள், விண்ணிலிருந்து வரக்கூடியதை மூகாம்பிகை என்று பூமி தன் உடலின் சக்தி எவ்வாறு கவர்கின்றது என்ற நிலையைக் கண்டுணர்ந்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் காந்தம் விஷம் வெப்பத்தைப் பராசக்தி என்றும், காந்த்த்தை லட்சுமி என்றும், அதே சமயத்தில் விஷத்தின் தன்மையை அது இயக்கச் சக்தியாக வரும் பொழுது அது எதனுடன் இதைக் கலக்கின்றதோ அந்த உணர்வின் தன்மைய ஞானம் என்றும் இப்படி நான்கு சக்திகளாக வைத்தார், மூன்று சக்திகளாகவும் பிரித்தார்.

அது பிரித்த உணர்வின் தன்மையை இந்தப் பூமி எவ்வாறு கவர்கின்றது?  
இந்த உணர்வின் தன்மையைத் தாவர இனங்கள் எவ்வாறு கவர்கின்றது?
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எவ்வாறு கவர்கின்றது?
இதை எங்கெங்கெல்லாம் பெறலாம்?
என்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவு செய்து கொண்டார்.

அதைப் பதிவு செய்து கொண்டபின்
ககன நிலையில் அடுத்த பக்கம் பறந்து சென்று
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கவரும் சக்தி பெற்றவர்
கோலமாமகரிஷி.