நான் (ஞானகுரு) எனது எட்டாவது, ஒன்பதாவது வயதில்லாம் எங்கள் வீட்டில் தண்ணீர்
இறைக்கும் கிணற்று மேட்டில் ஒரு பொந்து உண்டு.
அந்தப் பொந்திற்குள் ஒரு மைனா குஞ்சு பொரித்திருந்தது. வெளியில் தெரிகின்றது. இந்தப்
பக்கத்தில் வராது.
அந்தக் குஞ்சின் கால் தெரிகின்றது. அதில் கயிறைக் கட்டி இழுக்கின்றேன்.
இழுத்ததும் ஒரு சப்பையைப் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது. ஆனால், அது எப்படி
இம்சைப் பட்டிருக்கும்?
நான் இதைச் செய்து சந்தோசப்பட்டிருக்கின்றேன். அது வேதனைப்பட்டதை நான்
எண்ணவில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சியான உணர்வை எடுக்கும்போது அணு எனக்குள்
விளைகின்றது.
இதே மாதிரி குருவிக் குஞ்சுகளை எடுத்து அப்படியே தீயில் போட்டு உயிருடன்
வாட்டுவது. இதெல்லாம் இளம் பிள்ளையில் அறியாது நான் செய்த செயல்கள்.
இப்பொழுது அதனுடைய உணர்வுகள் அது எப்படி எரிந்ததோ உண்மையிலே என் உடலிலே
அந்தந்தப் பருவம் வரும் பொழுது கால் எரிச்சல், உடல் எரிச்சல் எல்லாம் வருகின்றது.
நான் அறியாது செய்தது தான். எண்ணிய உணர்வை நுகர்ந்தேன். அது எப்படி
எரிச்சலாகியதோ அந்த உணர்வின் தன்மை நான் நுகரப்படும் பொழுது அந்த அணுக்களாக
விளைகின்றது.
சில பேர்களுக்கெல்லாம் மற்றவர்களை வேதனைப்படும் படி எரிச்சல்படும் படி இந்த
மாதிரிச் செய்வோர்களுக்கெல்லாம் இந்த எரிச்சல் நிச்சயம் இருக்கும்.
மீன்களைப் பிடித்து வாங்குகின்றார்கள். உயிருடன் இருக்கும் பொழுது அதை
உராய்ந்து உராய்ந்து தோலை நீக்குவார்கள். அதற்கு எப்படி எரிச்சல் இருக்கும் என்று
பாருங்கள்?
அதனுடன் மிளகாய்க் காரத்தைப் போட்டால் பார்த்து இரசிப்போம். இந்த மாதிரிச்
செய்த பெண்களுக்கெல்லாம் நிச்சயம் பாத எரிச்சல் இருக்கும்.
அதை அடித்துக் கொன்றால் மட்டுமல்ல. மீனை இப்படி உராய்ந்து கொண்டிருப்பதை
வேடிக்கையாகப் பார்த்தாலும் நம் உயிர் என்ன செய்யும்? எரிச்சலான அணுக்களை
உடலுக்குள் உருவாக்கிவிடும்.
இதைத்தான் குருநாதர் சொன்னார். நீ முந்தி செய்த வினைகள் எல்லாம் அந்தப் பருவம்
வரும் பொழுது வந்துவிடும். இது வரும் பொழுது நீ எதை எண்ண வேண்டும்?
என்னை அறியாத அந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் கண்டுணரும்
சக்தி பெறவேண்டும். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் என்று அந்த அருள்
ஒளி பெறவேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்.
சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அறியாது நான் செய்த செயல்கள் அனைத்தும் என்
பாதங்கள் எரிவதும் உடல் எரிச்சலாகும். நான் சிறு வயதில் செய்த பாவங்களை எல்லாம்
சொன்னால் நீங்கள் பயந்து விடுவீர்கள்.
ஒடைக்காய் இருக்கின்றது, அதைப் பிடிப்பேன். அதைப் பிடித்து என்ன செய்வேன்?
மூக்கில் போடும் மூக்குப் பொடியை எடுத்து அந்த ஒடைக்காயின் கண்களில் தூவுவேன்.
கண்ணுக்குள் போட்டவுடன் தலையை ஆட்டும். பார்.., பேய் ஆடுகிறது என்பேன்.
இப்படியெல்லாம் செய்ததால் எனக்குக் கண் எரிச்சலும் வரும். இதையெல்லாம் நம்
குருநாதர் எனக்குச் சுட்டிக் காண்பிக்கின்றார்.
சிறிய வயதில் அறியாத நிலைகளில் இதைச் செய்தாய். ஆனால், உன் உயிர் இதையெல்லாம்
உனக்குள் அணுக்களாக விளைய வைத்துள்ளது. அது விளையப்படும் பொழுது உன்னுடைய அனுபவம்
ஒவ்வொன்றாக வரும்.
அப்பொழுது இதை நீக்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?
இது எப்படி உன் நல்ல குணத்துடன் சேர்த்து எரிச்சலானதோ இந்த எரிச்சல் வரும்
போது நீ எதைச் செய்ய வேண்டும்? அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். இந்த நிலையைப் பெறவேண்டும்.
சாதாரணமாக நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லோருக்கும் நன்மை தான் செய்தேன். சாக்கடையில்
கவிழ்ந்து விட்டுவிட்டது, கையைக் கொண்டு போய் ஊன்றுகின்றேன். எனக்கு வலு
இருக்கின்றது. எலும்பு முறிந்துவிட்டதே.
நான் தவறு செய்தேனா? இல்லை.
இதைத்தான் குருநாதர் சொல்கின்றார். ஒவ்வொரு நிமிடத்திலும் நீ பெற்ற நிலைகள் இது
வரும். இதன் விதிப்படி இது நடக்கும்.
ஆனால், மதி கொண்டு இதை மாற்ற வேண்டும்.
மனிதனான பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மை
தனக்குள் எடுக்க வேண்டுமென்றால் இந்த மதி கொண்டுதான் விதியை வெல்ல முடியும்.
இல்லையென்றால் ஒடிந்துவிட்டதே எம்மா.., எப்பா.., என்றால் வருகிறவர்கள் எல்லாம்
என்ன சொல்வார்கள்? என்னுடைய வேதனையை நீங்கள் கேட்பீர்கள், பின் உங்களிடமும்
விளையும்.
பிறகு உங்களிடம் விளைந்து இரண்டு பங்காகி என்னிடம் கொடுப்பீர்கள். இதைத்தான் எனக்குள்
வளர்க்க முடியும். இதைப் போன்ற தீய விளைவுகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.
என்று நாம் செய்திருந்தாலும் அந்த விதிப்படி அந்தந்த உணர்வுகள்
வளர்ச்சியடையப்படும் பொழுது வரும். நம்மை அறியாது செய்த பிழையின் உணர்வுகள் திரை
மறைத்து இந்த உணர்வின் தன்மை அது அணுவின் தன்மை வளரும்.
அதனுடைய வித்தின் தன்மை நிச்சயம் அது விளையத் தான் செய்யும்.
நாம் எத்தனையோ கோடிச் சரீரங்கள் எடுத்து இந்த விஷத்தின் அணுக்கள்
மாற்றிவிட்டால் விஷம் கொண்டு பாம்பினமாகத்தான் மாற முடியுமே தவிர இந்த நிலை
விதியாகிவிடுகின்றது.
அடிக்கடி வேதனைப்படுவோரைப் பற்றி நாம் கேட்டுணர்ந்தால் இந்த விஷத்தின் தன்மை
கொண்டு நமக்குள் வளரத்தான் செய்யும். இந்த விஷம் வளரத்தான் செய்யும் என்ற நிலையை
ஒவ்வொரு நிமிடத்திலும் காட்டுகின்றார் குருநாதர்.
ஆகவே, இதை மாற்றவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அருள் மகரிஷிகளின்
உணர்வைப் பெறவேண்டும் என்னைப் போன்று மற்றவர்களுக்கு வரக் கூடாது என்று எண்ணுதல்
வேண்டும்
.எனக்குத் தலை வலிக்கின்றது என்றால் இதே மாதிரி மற்றவருக்குத் தலை வலி
வந்துவிடக் கூடாது. அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற
இந்த உணர்வினை இந்த விதியை மதி கொண்டு வெல்லுதல் வேண்டும்.
வெறுமனே எண்ணி எண்ணக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
அடிக்கடி அந்த மகரிஷிகளை உங்களிடம் சொல்கின்றேன் என்றால் அந்த உணர்வின் அணுக்களை
நீங்கள் எண்ணி மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாக்கப்படும் பொழுது இது சாம.
அருள் ஞானிகள் இந்த உணர்வை வென்றவர்கள். அதர்வண. அதே சமயத்தில் யஜூர். உங்களுக்குள்
திரும்பத் திரும்பச் சொல்வதும் உங்களை அறியாது வந்த இருள்களிலிருந்து மீள்வதற்கு இதை
வளர்த்துக் கொண்டால் மதி கொண்டு விதியை வெல்ல முடியும்.
ஆக, இன்னொரு பிறப்பு இல்லாத நிலையை அடைகின்றோம். நான் இத்தனை பேருக்கு
ஆசீர்வாதம் கொடுத்தேன் எனக்கு ஏன் கை உடைந்தது என்று எண்ணினால் என்ன ஆகும்?
இந்த விதிப்படி நான் இதை வளர்த்துக் கொள்கின்றேன். மீண்டும் எத்தனையோ
தொல்லைகள் வரும். அதிலிருந்து மீள வேண்டும்.
தொல்லைகள் மனிதனுக்கு எப்பொழுது வருகின்றதோ இது விதி. ஆனால், மதி கொண்டு மகரிஷிகளின்
அருள் ஒளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நாம் பிறவியில்லா
நிலை அடைய முடியும்.