நமக்கு சம்பந்தமில்லாதபடி
ஒருவர் கோபப்படுகிறார் என்ற உணர்வைப்
பார்க்கிறோம்.
அப்பொழுது நமக்குள்ளும் கோபம் வருகின்றது. அவர் மேல் வெறுப்பு
வருகின்றது. ஆத்திரம் வருகின்றது.
வேதனைப்படுவோர் உணர்வை எடுத்து நாம் கோபப்பட்டு அந்த வேதனைப்படுவோரைப்
பார்க்கும்போது
அந்த வேதனை நமக்குள் கலந்து வருகின்றது.
இதைப்போல கோபமும் வேதனை
என்ற உணர்வு நமக்குள் விளைந்து அது இரத்தத்தில் கலக்கப்படும் போது இத்தகைய உணர்வின் அணுக்கள்
நமக்குள் உருவாகி
அந்த உடல் முழுவதற்கும் பரவப்படும்போது நமது உடல் உறுப்புகளை
வீணாக்குகின்றது.
நீங்கள் வேதனைப்படுவோரை
நுகர்ந்திருந்தால், சங்கடப்படுவோரை நுகர்ந்திருந்தால், நுகர்ந்த அத்தகைய உணர்வுகள்
உங்கள் இரத்தத்தில் கருவாகின்றது, முதலில் முட்டையாகின்றது.
முட்டையாகப்படும்போது தொடர்ந்து
அதைச் செய்தால் அந்த முட்டை தன் இனக்குஞ்சாக மாறுகின்றது.
அதற்குண்டான கருத்தன்மை
இல்லை என்றால் இந்த விஷத்தின் தன்மை இதே இரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்கு அதை
வீணாக்கும் உணர்வுகளை அது
தொடர்ந்து விடுகின்றது.
அணு ஆனாலும் சரி அணு ஆகாதபடி
அந்த முட்டை அழுகிச் சென்றாலும் சரி, அழுகிய உணர்வுகள் நம்
இரத்தத்தில்
கலந்து உடல் முழுவதும் எந்த உறுப்புகளில் கலக்கின்றதோ அந்த
உறுப்பையும் வீணாக்கிவிடுகின்றது.
இதைப்போல நாம் நுகர்ந்த
உணர்வுகள் நம் உடலுக்குள் பல விதமான உறுப்புக்களை
கெடுக்கும் அணுக்களாக மாற்றிக் கொண்டே உள்ளது.
இதைப்போன்ற நிலைகளிலிருந்து
நாம் விடுபடுவதற்கு என்ன செய்வது?
அதற்குத்தான்
இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை உங்களை நுகர்ந்து அதை பழக்கப்படுத்தச் செய்கின்றோம்
துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை நுகரும் பழக்கம் வந்துவிட்டால் உங்கள் இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளையத் தொடங்கும்.
இன்றைய
மனிதனின்
நிலையில் இதைப்போன்ற தீமைகள் நமக்குள் உருவாகும் நிலையிலிருந்து விடுபடுவதற்குத்தான்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
துருவ நட்சத்திரம் தீமைகளை வென்று அதை ஒளியின் சுடராக மாற்றி என்றும் பதினாறு
என்ற நிலையாக அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளது.
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம். துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் பரவச்செய்கிறோம்.
துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப்
பெறச்செய்கிறோம். துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் திரும்பத்
திரும்ப நினைவூட்டி
அதை ஈர்க்கும் சக்தியை இந்தச்
சந்தர்ப்பத்தில்
ஏற்படுத்துகின்றோம்.