நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால்
அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து உதவி செய்கின்றோம்.
ஆனால், நண்பன் மேல் சிறிது வெறுப்பாகிவிட்டால் என்ன செய்கிறோம்?
எனக்குத் தீங்கு செய்தான்,
அவனுக்கு
எப்படி நன்மை செய்வது?
என்ற உணர்வை
எண்ணிவிட்டால்
மீண்டும் நாம் தீமை தான்
செய்வோம்.
ஆகவே, தீமை செய்யும் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது நமக்குள் அந்தத் தீமையை
விளைவிக்கும் அணுக்கள் உருவாகின்றது.
நண்பன் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால் அந்த மகரிஷிகளின்
அருள் உணர்வு பெறவேண்டும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால் நாம்
அதுவாகின்றோம்.
அந்த உணர்வால் தீமையிலிருந்து
விடுபடும் அணுக்கள் உருவாகி நமக்குள் தீமையை நீக்கும் சக்தி உருவாகின்றது.
உதாரணமாக, நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது ஒரு கணக்கைப் பாருங்கள். சரியாகப்
பார்க்க முடிகின்றதா? ஒரு துணியையோ மற்ற பொருளின் தரத்தைப் பாருங்கள். அந்தக்
கோபமாக இருக்கும் பொழுது பொருளின் தரத்தை உங்களால் நிர்ணயிக்க முடியாது.
கோபமாக இருக்கும் பொழுது நண்பராக இருந்தாலும் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஏதாவது
சொல்ல ஆரம்பித்தால் உடனே அவரிடமும்
கோபமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம். நீ இந்த நேரத்தில் ஏன் வந்து வம்பு
செய்து கொண்டிருக்கின்றாய்?
அவர் ஒரு நல்லதைச் சொல்வார்.
“அட.., போய்யா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு, ஏனய்யா வம்பு பண்ணுகிறாய்?”
என்றுதான் சொல்வோம்.
அந்த உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம். இதைத்தான்
கீதாச்சாரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை உருவாக்குவது இந்த உயிர். அதை
உடலாக்கி மீண்டும் எண்ணும் பொழுது அதைச் செயலாக்குகின்றது அதன் நினைவுகள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் இதைப்
பதிவாக்கி இந்தப் பேருண்மையின் நிலையை நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது உங்களை
அறியாது வரும் இருளை நீக்கிவிட்டு
மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
பெறவேண்டும்
என்பதற்கே இதைச்
செய்கின்றேன்.
இயற்கையின் நிலைகளைத் தெளிவாக்குவதற்காக எத்தனையோ காவியங்களைக்
கொடுத்துள்ளார்கள். காவியத்தில் உள்ள கருத்தினை நாம் நுகரப்படும் பொழுது அந்தக்
கருத்தை நமக்குள் அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் விளையத் தொடங்குகின்றது.
ஒருவரை 4 நாட்கள் தமாஷாகக் கேலி செய்து பாருங்கள். அந்த உணர்வுகள் விளைந்து
கொண்டே வரும்.
அடுத்து அவருக்குள் என்ன ஆகும்?
நாம் சும்மா இருக்கின்றோம், இவர் பார் தமாஷ் செய்து கொண்டே இருக்கின்றார்
என்று நம் மீது வெறுப்பை
கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே வருவார்.
ஒரு நாளைக்கு என்ன ஆகும்?
நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன், பொறுத்துக் கொண்டே இருந்தேன். பார்
இப்பொழுது உன்னை என்ன செய்கின்றேன்? என்ற நிலைகள் இயக்கம் ஆகும்.
நாம் சாதாரணமாக இருப்போம்.
இது கடும் விளைவுகளை உண்டாக்கும்.
அது வளர்ச்சி இப்படி
முதுமையான நிலைக்குக் கொண்டு வரும்.
அதே மாதிரி நாம் ஒருவர் சண்டை போடுவதை வேடிக்கையாகப் பார்க்கின்றோம். நாளடைவில்
நாம் அடுத்தவர்களிடம் “அவர் ஒரு மோசமானவர்” என்று சொல்வோம்.
இந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகிவிட்டால் நம்மையே
மோசமான ஆளாக மாற்றக் கூடிய அளவிற்கு அது வளர்ந்து
விடும்.
ஆக, எதை மோசம் என்று பெறுகின்றோமோ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள்
பெறவேண்டும் என்று நமக்குள் சேர்த்து
என்
பார்வை அவர்களை நல்லவராக ஆக்க வேண்டும்.
நல்லதை நுகரும் சக்தி
அவருக்குள் வளர வேண்டும் என்று எண்ணவேண்டும்.
ஏனென்றால், அவர் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே பட்டு கண் கருவிழி இங்கே பதிவாக்கிய உணர்வினை நுகரும் பொழுது தான் அறிகின்றோம். அதனுடன் நாம் இந்த நிலையை இணைத்துவிட்டோம் என்றால் அது அடங்குகின்றது.
நமக்குள் அந்தத் தீமையை வளர்க்கும் தன்மைகளைக் குறைக்கின்றது.
ஏனென்றால், அவர் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே பட்டு கண் கருவிழி இங்கே பதிவாக்கிய உணர்வினை நுகரும் பொழுது தான் அறிகின்றோம். அதனுடன் நாம் இந்த நிலையை இணைத்துவிட்டோம் என்றால் அது அடங்குகின்றது.
நமக்குள் அந்தத் தீமையை வளர்க்கும் தன்மைகளைக் குறைக்கின்றது.
இதற்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்.
நாம் மனிதனின் வாழ்க்கையில் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.