ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2016

அதிர்வு கொண்டு அறியும் விஞ்ஞானியின் செயல்

இன்று பார்க்கின்றோம், விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றனர்.

பூமியிலிருந்து எதிர் அலைகள் (ECHO) எகோ வருவதை அதாவது கம்யூட்டர் சாதனத்தில் விஷத்தின் உணர்வை ஒலி அலைகளைப் பதிவாக்கும் நாடக்களை வைத்து அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகளை உற்று பூமியை நோக்கிக் காட்டுகின்றார்கள்.

அப்படிக் காட்டப்படும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி
அந்த எலக்ட்ரிக் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
அதன் நிலையில் மணமும் அதன் உணர்ச்சியின் வேகமும் கண்டறிந்து
நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

இப்போது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மிருகங்களின் உணர்வுகள் இந்த மண்ணுக்குள் மறைந்திருக்கிறது. றைந்து பாறைகளாகக் கூட ஆகிவிட்டது என்று இதைக் கண்டுணர்கின்றார்கள்.

பின், அங்கே தேடிச்சென்று மேல் பரப்பை மாற்றிவிட்டு குறைந்தது 100 அடிக்குக்  கீழ் அது அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தை எடுக்கின்றான் விஞ்ஞானி.

அந்த உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். சேர்த்துக் கொண்ட பின் இதே கம்ப்யூட்டரால் அதிலிருந்து வரும் அலைகளை எடுத்து
இதன் தசையின் உடல் அமைப்பும்
இதன் உணர்ச்சியின் செயலும்
இது எதை உணவாக உட்கொண்டது என்றும் பார்க்கின்றான்.

உணர்வின் அதிர்வுகளைக் கண்டு
இன்று அந்த மிருகத்தின் உருவத்தையே
இந்தக் கம்யூட்டர் காட்டுகின்றது.

இதை நாம் விஞ்ஞான உலகில் இதை நாம் பார்க்கின்றோம். நிரூபிக்கின்றான்.

முன்பு கை ரேகை பட்டால், திருடன் ஒரே ரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு திருடனைப் பிடிப்பார்கள். ரேகையை வைத்து ஓகோ இவன் தான்..,” என்று பிடிப்பார்கள்.

இப்பொழுது அதுவெல்லாம்  இல்லை.

எலக்ட்ரிக் எலக்டரானிக் என்ற நிலை வரும் போது அந்த ரேகைப்பட்டால்  இவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது.

கம்யூட்டரில் அந்த அதிர்வுகளைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டி  இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் அதில் மோதப்படும் போது
இந்த மனிதன் இவன் எப்படி ரூபமானான்?
இவனுடைய குணங்கள் என்ன?
இவன் எப்படி இருந்தான்? என்று அவனது ரூபத்தையே காட்டுகின்றது.

இப்படி இந்த விஞ்ஞான அறிவு காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழுகிறோம் என்றால் இன்னும் அறியாமையில் நாம் வாடுகின்றோம்.

ஆக மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வுகள் தான் வருகிறதே தவிர
மனிதனைக் காக்க வேண்டும்,
தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள்
இங்கே இம்மியளவும் வரவில்லை.

எந்திரத்தின் துணை கொண்டு 
எந்திரம் கூட ஒன்றைக் கன்ட்ரோல் செய்கின்றது.

ஆனால் மனிதன் தன் மனைதை நிலைப்படுத்தித் திருத்த முடியாதபடி உணர்ச்சியின் தன்மை கொண்டு
தவறுகள் செய்வதும் கொலைகள் செய்வதும்
தன் இச்சைக்கு இன்பத்தைப் பெறுவதற்குத் துன்பத்தை ஊட்டுவதும்
இத்தகைய நிலைகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த உலகில்.