தியான வழி அன்பர்களும் இதைப் படிப்பவர்களும் காலை துருவ தியானத்தை எடுத்துக்
கொள்ளுங்கள்.
எம்மிடம் வரும் பொழுதெல்லாம், என் குடும்பத்தில் அனைவரும் நலம் பெறவேண்டும் குடும்பத்தில்
ஒற்றுமை வரவேண்டும், மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்,
எங்கள் தொழில்கள் சீராக நடக்க வேண்டும், எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்.
எங்கள் குடும்பத்திலுள்ளோர் உடல் நலம் பெறவேண்டும், எங்கள் குழந்தைகள்
கல்வியில் ஞானம் பெறவேண்டும், உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தைகளாக வளரவேண்டும் எங்களுக்கு
அந்த அருள் வேண்டும் என்று தான் வேண்டி நீங்கள் கேட்க வேண்டும்.
எங்கள் வீட்டில் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறானே.., வீட்டை
விட்டே போய்விட்டானே.., எங்கள் குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையும்
சச்சரவும் விட்டே போக மாட்டேன் என்கிறது என்று இதைத்தான் எம்மிடம் கேட்கிறார்கள்.
குடும்பத்தில் நஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது, எங்களிடம் கடன் வாங்கிச்
செல்பவர்கள் கொடுத்தது பாக்கி வரவே மாட்டேன் என்கிறது, பாக்கியைத் திருப்பிக்
கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள், கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்பதைத்தான்
சொல்கிறார்கள்.
பாக்கியைத் திரும்பக் கேட்கச் சென்றால் எப்பொழுது பார்த்தாலும் எங்களை
வெறுத்துப் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். இதைத்தான் வளர்த்து வைத்து இந்த
உணர்வைத்தான் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றது.
ஆனால், எங்கள் குழந்தைகள் நலம் பெறவேண்டும், நாங்கள் கணவன் மனைவியும்
ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை.
என் வீட்டுக்காரர் எப்பொழுது பார்த்தாலும், “நச்.. நச்.., நச்..,” என்று என்னைப்
பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் வந்தவுடன் என்ன சொல்வார் தெரியுமா?
வீட்டில் பொம்பளை எப்பொழுது பார்த்தாலும், “நச்.. நச்.., நச்..,” என்று பேசிக்
கொண்டே இருக்கிறது என்று அவரும் சொல்வார். ஆக, இரண்டு பேருமே இதைச் சொல்வார்கள். இதை
யார் பேசுவது எவர் பேசுவது என்ற நிலை இருப்பதில்லை.
இந்த உணர்வு ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம். எண்ணிய உணர்வு நமக்குள் பதிவாகி
மீண்டும் அதையே சொல்கிறோம். இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பப்
பெற்றுக் கொள்வான்.
நாம் ஒருவரைத் திட்டினோம் என்றால் பதில் அதையே தான் வரும். ஒருவரைக் கோபித்தோம்
என்றால் அதே தான் திரும்ப வரும். நாம் ஒருவரை வேதனைப்படும்படிச் சொன்னால் அந்த
வேதனையின் பதில் தான் இங்கே வரும்.
ஆக, நாம் பேசும் உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறினாலும் நுகர்ந்த உணர்வுகள்
சீதா ராமனாக மாறுகின்றது.
நாம் ஒருவரைக் கோபிக்கும் பொழுது சீதா லட்சுமியாக மாறுகின்றது. அதை உற்றுப்
பார்த்தால் அந்த உணர்வை நுகர்ந்தால் நாராயணன் திரேதாயுகத்தில் சீதா ராமனாகத்
தோன்றுகின்றான். அந்த எண்ணங்கள் தோன்றுகின்றது.
நாம் திட்டினால் அதே பதில் நமக்குள் வரும்.
இதையெல்லாம் காவியங்கள் தெளிவாக்கியுள்ளன. நம் வாழ்க்கையில் நாம் எப்படி வழி
நடத்த வேண்டும்? இந்த மனிதனான பின் நாம் நமக்குள் எதை உருவாக்க வேண்டும்?
இனி நமக்குள் இனிமைப்படுத்தும் நிலையும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும்
சக்தியை நாம் பெறுதல் வேண்டும். ஆகவே, இதை அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்
கொள்கின்றேன்.
ஆக, எவ்வளவு தரம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் என் குடும்பத்தில் ரொம்பக்
கஷ்டமாக இருக்கிறது சாமி என்றுதான் கேட்கிறார்கள்.
ஏனம்மா, இதைச் சொல்கிறீர்கள், நல்லதைக் கேளுங்கள் என்று கேட்டால் “அதற்குத்
தான் வந்தேனுங்க..,” என்று சொல்லிவிட்டு அதையே தான் கேட்கிறார்கள்.
“வீட்டில் என் பையன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான், வீட்டில் கஷ்டமே கஷ்டமாக
இருந்து கொண்டே இருக்கிறது”
இந்த வார்த்தைகளை விட்டுவிடுங்கள்.
நீங்கள் தபோவன எல்லைக்குள் வந்துவிட்டால் மகரிஷிகளின் அருள் சக்தியைப்
பெறுவேன் என் வாழ்க்கையில் உடல் நலம் பெறுவேன், என் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து
வாழ்வோம்.
நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்வோம் நளாயினி
போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம். சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி
வாழ்வோம்.
எங்கள் பார்வை எங்கள் குடும்பத்தில் நலம் பெறும் சக்தியாக மாறும் என்ற உணர்வை
எடுத்து வாருங்கள். அது உங்களுக்குள் எவ்வளவு உயர்வைக் காட்டுகிறது என்று
பாருங்கள்.
உண்மையில் வேறு ஒன்றும் வேண்டியதில்லை. நீங்கள் நினைக்காமல் தபோவனத்திற்குள் வந்தவுடன்
உங்கள் தலை வலி குறைவதைப் பார்க்கலாம், கை கால் குடைச்சல் குறைவதையும்
பார்க்கலாம்.
அங்கிருந்து வரும் பொழுது வயிற்று வலியுடன் வருவார்கள். தபோவனத்திற்குள் உள்ளே
வந்தவுடன் வயிற்று வலி குறைவதைப் பார்க்கலாம். இங்கே வந்த பின் நல்ல நிம்மதியாக
இருக்கும்.
யாம் அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று கேட்போம்.
நான் வீட்டிலிருந்து வரும் போது வலி இருந்தது. உள்ளே இங்கே வந்ததும் இல்லைங்க..,
என்பார்கள்.
இதையெல்லாம் உங்களுக்குள் அனுபவபூர்வமாகக் காட்டினாலும் அதை நீங்கள் சீராகப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.