ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2016

எல்லாம் விதிப்படி நடக்கின்றது என்று சொல்கிறோம் அந்தத் தலை விதி எது...?

நான் (ஞானகுரு) குழந்தைப் பருவத்திலிருக்கும் போது நான் பொதுவாக குருவிகளையோ, ஒடைக்காய்களையோ, மற்ற பூச்சிகளையோ அதைத் தட்டிக் கை கால் அங்கங்களை இழக்கச் செய்து வேடிக்கை பார்த்ததுண்டு.

வேடிக்கை பார்த்த உணர்வின் அணுக்கள் எனக்குள் விளைந்து அது விதி என்ற நிலைகள் வரப்படும் பொழுது அந்தப் பருவம் பெறப்படும் பொழுது அதே உணர்வால் இயக்கப்பட்டு எம்மை முடக்கச் செய்கின்றது.

நான் இன்று சக்தி பெற்றவனாக இருப்பினும் ஆனால், இதை எண்ணத்தால் பல பேருக்கு உதவி செய்கின்றேனே, எனக்குள் இப்படி வந்துவிட்டதே என்றால் மரண பயத்தால் நான் மீண்டும் பிறவிக்கே வருகின்றேன்.

ஆகவே, தான் செய்த உணர்வுகள் எதுவோ அது என்னை அழைத்துச் சென்றது. இத்துடன் செல்லட்டும். அருள் ஒளி எனக்குள் பெருக வேண்டும்.

என்னைப் போன்று பிறருக்கு இந்த நிலை வரக் கூடாது என்ற உணர்வை நான் எண்ணி ஏங்கப்படும் பொழுது இந்த மரண பயத்திலிருந்து விடுபடுகின்றேன். அருள் ஒளியின் உணர்வுடன் தொடர்பு கொள்கின்றேன்.

ஆகவே, குரு காட்டிய அருள் வழியில் அடுத்த எல்லை எதுவோ அதைத்தான் நாம் பெறவேண்டும்.

இந்த வாழ்க்கையில் நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்ற எண்ணங்கள் இருப்பினும் எதையும் எவரும் செய்ய முடியாது. நாம் ரோட்டில் செல்லும் பொழுது அந்தப் பக்கம் இருக்கும் ஒரு பொருளை அடைவேன் என்று நாம் எண்ணினால் அந்தப் பொருள் மேல்தான் எண்ணம் வரும்.

ஆனால், அதே சமயத்தில் நாம் எதிர் நிலையில், வரக்கூடிய வாகனங்களோ நாம் எதிரிகள் என்ற நிலைகளில் அந்தப் பொருளைப் பெற முடியாது தடுக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்குள் வளர்ந்திருந்தால் அதை நாம் அறிய முடியாது.

இதன் வழியில் அதை அடைய முடியவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் கொண்டு கொதிக்கும் தன்மை கொண்டு ஆனால், இதை அடைவதற்கு முன் மற்றவர்களை அழித்திடும் உணர்வு நமக்குள் தோன்றும் பொழுது அந்தத் தோற்றத்தின் உணர்வு கொண்டு நமக்குள் கடும் நோயாக விளைந்து நல்ல உணர்வுகளை அழித்துவிடுகின்றது.

நாம் எண்ணியதை நம் உயிர் அணுக்களாக மாற்றுகின்றது. அதன் வழியே நமக்குள் தீமைகளை விளைவிக்கின்றது. ஆக, மனித உருவை மாற்றுகின்றது. மனிதன் இந்த உடலில் நிலைத்தவன் இல்லை. இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.

ஒரு நிலத்தில் ஒரு வித்தை ஊன்றினால் அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு தன் இனத்தின் சத்தைக் கவர்ந்து அது செடியாக விளைந்து தன் இனத்தின் வித்தைப் பெருக்குகின்றது.

இதைப் போலத்தான் நம் உடலும் ஒரு நிலம். நம் உயிரின் இயக்கத் துணையால் அதிலுள்ள காந்தப் புலனால் நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக விளைந்து விடுகின்றது.

அதன் உணர்வுகள் பெருக்கங்கள் அதிகமாக்கப்படும் பொழுது அந்தப் பெருக்கத்தை வளர்த்துக் கொண்டால் அது நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்விடுகின்றது.

ஆகவே, நாம் அருள் ஞானத்தின் வித்தை உங்களுக்குள் ஊன்றி விளைவிக்கும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் அது விளைகின்றது.

இது அருள் ஞானத்தால் உங்களுக்குள் பெருக்கிவிட்டால் அருள் ஒளியுடன் நாம் சுடராக விளைந்திடும் இந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகளை அது ஒடுக்குகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் செல்லும் பொழுது எதனைப் பற்றுடன் பற்றினோமோ அங்கே செல்கின்றோம்.