நாம் காலையிலிருந்து இரவு
வரை வெறுப்பு
வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற உணர்வுகள் உமிழ்நீராக மாறி மாறி
மாறி ஆகாரத்துடன் கலந்து கலந்து அது இரத்தமாக வருகின்றது.
அதனால்
எதன் உணர்வு அதன் இயக்க உணர்வாக மாறியதோ உடலுக்குள் போனவுடனே அது கருத்தன்மை அடைந்து
விடுகின்றது, முட்டையாகின்றது. அதிகமாகிவிட்டால்
அந்த முட்டை வெடித்த பிற்பாடு அணுவாகின்றது.
சாதாரணமாக ஒரு தட்டான்
பூச்சி அது
ஏதாவது ஒரு பூச்செடியில் கொண்டு போய் முட்டையிட்டால் அந்த பூவின் மணத்தை எடுத்து பூவின் நிறத்தில் பட்டாம்பூச்சியாக
மாறுகின்றது.
இதைப் போன்று தான் நாம்
வேதனை வெறுப்பு என்ற உணர்வை எடுத்துக் கருத்தன்மை
அடைந்தால் நல்ல அணுக்கள் வேதனை உருவாக்கும் முட்டைகளாக மாறிவிடும்.
இதை மாற்றியமைக்க அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
அப்பொழுது
அந்தக் கரு முட்டைக்குள் என்ன செய்யும்?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முட்டைக்குள் இதன் மேல் பாய்ச்சும்.
அது பாய்ச்சப்படும்போது அதற்குத தக்கவாறு அந்தக் கருமுட்டைகள் அணுக்கள்
மாற்றமடைகிறது. தீமையை நீக்கிடும் நிலை பெறுகின்றது.
ஆனால் அதே சமயத்தில் முட்டை
அணுவாகி விட்டால் மாற்றாமல் விட்டுவிட்டால் அதனுடைய இனத்தை அது
பெருக்கி முட்டைகள் அதிகமாக இட்டுப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
வேதனை அணுக்கள் நமக்குள் பெருகி விட்டால் நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது
தடைப்படுகின்றது. உடல் உறுப்புக்களின் செயல்கள் குறைகின்றது. பின்
நோயாகிவிடுகின்றது.
வேதனை உணர்வுகளை அடிக்கடி
நாம் எண்ணப்படும் போது ஆத்ம சுத்தி எடுத்தால் உடனுக்குடன்
அந்த அணுக்களை
மாற்றி நல்லதாக மாற்றிக்கொள்ள முடியும்.
இது ஒரு பழக்கத்திற்கு
வந்தால் நாம் அந்த அகஸ்தியன் எப்படி அகண்ட அண்டத்தையும்
அறிந்து உணர்வை
ஒளியாக மாற்றினானோ அவன் பெற்றதையெல்லாம் நமக்குள் பெற்று
நாமும் இந்த உடலுக்குப்பின் அவன் பிறவியில்லா நிலை அடைந்தது போல் அடைய
முடியும்.
நமக்குச் சொந்தம் அதுதான்.
இந்த உடல் சொந்தம் நமக்கு வேண்டாம்.
அந்த உயிருடன் அவன் தான்
நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றான். உணர்வால் அதை அறிய முடிகின்றது. ஆகவே, அறியும்
ஆற்றல் பெற்ற ஆறாவது அறிவை உயிருடன் இணைக்கப்பெற்றால் ஒளி என்ற உணர்வாகின்றது.
இதை நாம் எல்லோரும் பெறமுடியும்.
எல்லோருக்கும் பெறக்கூடிய தகுதி பெறத்தான் இதைச் செய்தது.