இன்று எத்தனையோ
வகையான சிக்கல் நமக்குத் தெரியாமலே வருகிறது. அதாவது இன்றைய நாகரிகமான உலகத்தில் டி.வி.யைப்
பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
அதில்
சங்கடமான
நிலைகளில் இருந்தால் அந்த சோர்வான நிலைகளில் போய் எதையாவது
ஒன்றை தொட்டால் கீழே விழுந்து உடைந்து போய்விடுகின்றது.
அப்படி உடைந்து போய்விட்டதென்றால்
அதனால் சங்கடம். அந்த சங்கடத்தில் வருகிறோம். குழந்தை ஏதாவது
குறும்புத்தனம் செய்தால் அவன் மீது
இனம் புரியாத நிலைகளில் வெறுப்பு
வரும்..
அந்தப் படத்தை நீங்கள்
பாரத்துக்
கொண்டே இருக்கின்றீர்கள். டி.வி.யைப் பாரத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
நீங்கள் வயிறு நிறையச்
சாப்பிட்டுவிட்டு சங்கடமான நிலைகளை உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள். உங்கள் வயிற்றில்
என்னென்ன கோளாறு செய்கிறது என்று நீங்கள் உணரலாம்.
வேடிக்கைக்காகத்தான்
நீங்கள் டி.வியைப் பார்க்கின்றீர்கள்.
ஆனால், உணர்ச்சிகள்
உடனே உங்கள் உடலில் என்ன செய்கிறது என்பதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து
கொள்ளலாம். இன்றைய விஞ்ஞான அறிவால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது.
பார்க்கின்றீர்கள்.
அடுத்து நீங்கள் அதைச்
சுத்தப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு அரைமணி நேரம் பார்த்து முடிந்தாலும் கூட அது கெட்டது
என்றால் உடனே நிறுத்திப் பழக வேண்டும்.
ஆனால். அந்தக் கெட்டதைத்தான்
ரசித்துப் பார்ப்போம். இன்றைக்கு அதற்குத் தகுந்தாற் போல் காசு வாங்குகிறவர்களைப் பார்த்தோம் என்றால் ரொம்ப அசிங்கமான படங்களை வெளியிடுகின்றனர்.
அப்பொழுது இவர்கள் ரசனை
அது மேல் போய்விடுகிறது. நல்ல குணங்களை இழந்து விடுகிறார்கள்.
ஏனென்றால், ஒரு பக்கம் இந்த விஞ்ஞான அறிவால் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு வழி இருந்தாலும்,
விஞ்ஞான அறிவால் மனித உறுப்புகளை உருவாக்கக்கூடிய நிலை இருந்தாலும், விஞ்ஞான அறிவால்
ஒரு மனிதனை உருவாக்கக்கூடிய சக்தி இருந்தாலும், உடல்களில்
உறுப்புகளை மாற்றி உடலைச் சீர்படுத்தினாலும், உடலை
விட்டுப் போன பிற்பாடு ஆகும்?
எத்தனை அறிவு வந்தாலும்
இந்த உயிர் இதில் எதைச் சேர்த்தோமோ அதற்குத் தக்கவாறு அடுத்த உடலை நிச்சயம்
உருவாக்கியே
தீரும்.
இந்த உயிர் எல்லாவற்றிலும்
பல கோடி உடல்களில் தெரிந்து கொண்டதுதான் கார்த்திகேயா.
அப்பொழுது
தீமை என்று தெரிகிறது. தீமையை நீக்கியது துருவ நட்சத்திரம்
என்றும் தெரிகின்றது.
அந்த துருவ நட்சத்திரத்தின்
உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறேன். உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பேறவேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கலாம்.
இங்கே நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கிறது.
பதிவு செய்ததை எண்ணினால் கண் என்ன செய்கிறது? கண் இழுத்து நமக்குள் கொண்டு வந்து சுவாசித்து உயிரிலே படச் செய்கிறது.
அப்பொழுது மனது தெளிவாகிறது.
அப்படித் தெளிவாக்கப்படும்போது
என்ன செய்கிறது? உமிழ்
நீராக மாறுகிறது.
உடனே நீங்கள் அடுத்து அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து என் இரத்தத்தில்
கலக்க வேண்டும். என் இரத்தத்தில் ஜீவ அணுக்கள் அத்தனையும்
பெற வேண்டும். உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
அடுத்து, சிறு குடல்
பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உடனே
மள.., மள..., என்று எண்ணத்தைக் கொண்டு
வந்து வீரியமான நிலைகளில் அந்த உறுப்புகளுக்குள் ஊட்டிவிட வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும். கல்லீரலை மண்ணீரலை
உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும், நுரையீரலை உருவாக்கிய அணுக்கள்
பெறவேண்டும், இரத்தத்ததைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களை உருவாக்கிய
அணுக்கள்
பெறவேண்டும் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த வலுவை ஏற்றிக் கொள்ள வேண்டும்.
கண்களில் உள்ள
கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இதைச்
சுத்தப்படுத்த வேண்டும். எல்லாமே
இதை சுத்தப்படுத்திவிடும்.
இது உங்களால் முடியும். ஒரு ஐந்து நிமிடத்திற்குள் எடுத்துக் கொள்ள முடியும்.
ஏனென்றால் எதையும்
கேட்காமல் இருக்க முடியாது. பார்க்காமல் இருக்க முடியாது. கையில்
அழுக்குப்பட்டால்
எப்படித் துடைக்கின்றீர்களோ, கையைக் கழுவிக் கொள்கிறோமோ அதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை
எடுத்து வலுவாகத்
துடைத்துப் பழக வேண்டும்.
நம்மால் முடியும். பழகிக் கொண்டால் தன்னாலே வந்துவிடும்.
சில பேர்
என்ன செய்கிறார்கள்? ஆசையை அதிகமாக
வைத்துவிடுகின்றார்கள்.
இதையும் செய்தேனே போக மாட்டேன் என்கிறது, போகமாட்டேன் என்கிறது, போகமாட்டேன் என்கிறது என்னால் மாற்ற முடியவில்லை என்னால் மாற்ற முடியவில்லை என்று அதற்குத்தான் ஜீவன் கொடுத்து விடுகின்றார்கள்.
இதையும் செய்தேனே போக மாட்டேன் என்கிறது, போகமாட்டேன் என்கிறது, போகமாட்டேன் என்கிறது என்னால் மாற்ற முடியவில்லை என்னால் மாற்ற முடியவில்லை என்று அதற்குத்தான் ஜீவன் கொடுத்து விடுகின்றார்கள்.
பாலில் விஷம் பட்டாலும்
அது விஷத்தினுடைய செயல்தான். விஷத்தில்
பாலைப்
போட்டாலும்
அதுதான்.
அந்த அருள் ஞானத்தின்
உணர்வைத்
தெளிவாக்கி
நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள
விஷத்தை நீக்க முடியும். நம்மால் பெற முடியும் என்ற அந்தத்
தன்னம்பிக்கை வர வேண்டும்.
தீமைகள் நமக்குள் புகாது
தடுக்க முடியும். இந்த வாழ்க்கையில் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். அது தான்
நமது எல்லை என்ற
நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.
இப்பொழுது தியானப் பயிற்சி கொடுப்பதை நீங்கள்
ஒவ்வொரு நாளும் இரவு
படுக்கப்போகும் போதும், அதிகாலையிலும்
எழுந்து 5-30மணிக்குள்
செய்யலாம்.
ஒரு அரை மணி நேரமாவது செய்யுங்கள்.
எப்பொழுது
கஷ்டமான வார்த்தைகளைக்
கேட்டாலும்
உடனே அது
நமக்குள் வலுப் பெறாது
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும். நம் ஆன்மாவை விட்டுத் தீமைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணில் ஏங்கி எங்கள்
இரத்தத்தில்
கலந்து, உடல்
முழுவதும் படர்ந்து எங்கள் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று அதை
இணைத்துவிட வேண்டும்.
அது வேகமாக
இழுக்கும். இழுக்கும்போது விஷத்தின்
தன்மை உள்ளுக்குள் போகாமல் தள்ளிவிடும். இப்படிச்
சுத்தப்படுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்.
நாம் ரோட்டில் போய்க் கொண்டிருக்கின்றோம் மிளகாய் வத்தல் தூவிக் கொண்டிருக்கின்றார்கள்.
நம் துணியின் மேல் படுகிறது. அந்தத் துணியை எடுத்து முகத்தைத் துடைத்தால் என்ன ஆகும்? எரிச்சலாகும் அல்லவா?
அங்கே
நாம் நிற்கின்றோம். மிளகாய்த் தூள்
வந்தது என்று தெரிகிறது. .நாம் தண்ணீரில் போட்டு
துணியை அலச வேண்டுமா இல்லையா?
அதே மாதிரி
ஒரு பக்கம் கெட்ட வாசனை மாதிரி காற்றிலே வருகிறது. நம் துணியின் மீது படுகின்றது. இதிலே வடிகட்டுகிறது. அப்புறம்
துணியை நுகர்ந்து பாரத்தால் கெட்ட வாசனைதான் வருகிறது.
அதை நாம்
துடைக்க வேண்டுமா இல்லையா?
நாம் தப்புப்
பண்ணவில்லை. அங்கே சென்றோம், அது நம் மீது படுகின்றது. இப்படி
நாம் சந்திக்கக்கூடிய
சந்தர்ப்பம் இந்த மாதிரி எல்லாம் வந்துவிடுகிறது.
அதை
நாம் துடைக்க வேண்டுமா
இல்லையா?
அதற்குத்தான் உங்களுக்குத் தீமையை
நீக்கிடும் இந்தப்
பவரைக் கொடுக்கின்றோம்.