குடும்பத்தில் எதிர்பாராது யாராவது தற்கொலை செய்து கொண்டால் அந்தக்
குடும்பத்தில் பற்றுள்ளோர் உணர்வுகளில் இனம் புரியாதபடி வாழையடி வாழையாக அந்தக் குடும்பத்தில் தற்கொலை
செய்யும் நிலையே வருகின்றது.
சிறிது குறைப்பட்டால் அதே உணர்வுகள் வந்துவிடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள்
நடந்து கொண்டிருந்தால் அதைத் தடுக்க வேண்டுமா வேண்டாமா? அப்பொழுது அதற்கு என்ன
செய்ய வேண்டும்?
மனிதன் வளர்ந்தபின் மனிதனுக்குப் பின் இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நாம் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால்
அதை அடக்கி
நாம் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்று
தீமைகளைத் துடைத்து
உணர்வை வலுவாக்கி
வலுவின் நிலைகள் கொண்டு
சிந்தனையுடன் வாழச் செய்யும்
தற்கொலையாலோ அல்லது நோயினாலோ இறந்தார் என்றால் அந்த ஆன்மாக்களை துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தச்
சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால், அவர்கள் விஷத்தை
முறித்தவர்கள்.
ஆகவே அங்கே மணங்கள் பட்டவுடன் இந்தச் சூட்சம சரீரத்திலிருந்து விஷத்தன்மைகள் பிரிந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடுகின்றது இந்த உயிராத்மாக்கள்.
அந்த விஷமான உணர்வின் தன்மைகள் கருகிவிடுகின்றது.
இப்படித் தற்கொலை செய்து இறந்து கொண்ட உணர்வு கொண்டவர்களை நாம் சப்தரிஷி
மண்டலத்துடன் இணைத்துவிட்டால் அதனின் உணர்வுகள் இருளை நீக்கி உணர்வுகள்
சென்றுவிடுகின்றது.
நாங்கள்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும், எங்கள் உடல்
முழுவதும் படரவேண்டும், எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்ற
எண்ணினால்
அவர் தற்கொலை செய்து கொண்ட உணர்வுகள்
நம் உடலுக்குள் வளராதபடி அதைத் தடுத்துக் கொள்ள முடியும்.
பின்
அதன் செயல் இழந்துவிடும்.
அந்த ஆன்மா ஒளியின் உடல் பெறும்போது இந்த நிலைகள் அந்த உணர்வுகள் அங்கே
மாற்றப்படுகின்றது. அதே உணர்வை நாம் எடுத்து நமக்குள் இருக்கும் நிலைகளை
மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
தற்கொலை செய்து கொண்ட அந்த ஆன்மாவும்
பிறவியில்லா நிலை அடைகின்றது.
இந்தத் தீமையை அழித்திடும் சக்தி
அவரால்
நாம் பெற முடிகின்றது.
தற்கொலையால் இறந்து கொண்டபின் அவர் மேல் பாசம் அதிகமானால் அந்த உணர்வு நமக்குள்
வந்து நம்மையும் தற்கொலை செய்யும் உணர்வுக்கே அழைத்துச் செல்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபடவேண்டும்.
இந்த வாழ்க்கையில் சிறிது காலமே வாழ்கின்றோம். வாழும் காலத்தில் நமக்குள் அறியாது
சேர்ந்த தீமைகளைத் துடைக்க இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து அவ்வப்பொழுது
மனதைத் தூய்மையாக்கி வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் சக்தி நீங்கள்
பெறவேண்டும் என்பதற்குத்தான் பௌர்ணமி தியானத்தை வழிப்படுத்தி வைத்துள்ளோம்.
பௌர்ணமி அன்று மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யுங்கள். அவர்களை
அங்கே செலுத்திய பின் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி
மண்டலத்திலிருந்தும் அருளைப் பெருக்கி உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்க
முடியும்.
‘
சந்தர்ப்பத்தில் எத்தகைய தீமைகளோ தொல்லைகளோ வந்தாலும்
உடலை விட்டு ஒருவர் நோயால் இறந்தாலும்
எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து
எங்களைக் காப்பதற்காக வாழ்ந்து
எத்தனையோ வேதனைகளை எடுத்து
உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த
ஆன்மாக்கள்
அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெரு நிலை அடைந்து
அழியாத ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று
அவர்களை
விண் செலுத்த வேண்டும்.
இது நாம் செய்ய வேண்டிய
தலையாயக் கடமையாகும்.