ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2015

உச்சியில் ஏற்ற வேண்டிய "ஜோதி...!"

அருள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் கொண்டு அண்ணாமலையார் தீபம்
இந்த ஆறாவது அறிவு கொண்டு
மலை மீது நின்று உச்சியில் வைப்பது போல்
நமது உயிர் இந்த உடலின் உச்சியில் இருக்கின்றது.

அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வின் ஒளியை ஏற்றி விட்டால் இந்த உலக இருட்டை மாற்றுகின்றது. பிறகு உலகையே ஒளியாக மாற்றும் நிலை வருகின்றது.

எந்த உலகை? நம் உடலான இந்த உலகை ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது.

உணர்வின் ஒளியாக மாற்றுகின்றது.
உணர்வின் ஒளியாக மாறுகின்றோம்.
துதான் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

இந்தத் தீபச் சுடரை அனைவரது உடலிலும் இயக்குவோம் என்றால் உணர்வின் ஒளியின் நிலையாக நாம் முழுமை பெறுகின்றோம் உங்களை நீங்கள் நம்புங்கள்.

எண்ணியதை உருவாக்குகிறது உயிர். உங்கள் வாழ்க்கையில் எதை எண்ணுகின்றீர்களோ அதையே உங்கள் உயிர் வழி நடத்திச் செல்கின்றது

நமது எல்லை எது? என்று  உணர்த்தி விட்டோம்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ அதை மறக்க அருள் மகரிஷிகளின் உணர்வை அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்று ஏங்கி இதை மறைத்துவிடுங்கள்.
அருள் ஒளியைக் கூட்டி விடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் பேரின்பம் பெரும் தகுதி பெறுகின்றீர்கள்.

குறுகிய காலம் வாழும் இந்த உடலில் செல்வம் நம்முடன் இருப்பதில்லை. இந்த உடலும் நம்முடன் வாழ்ந்ததில்லை.

குறுகிய காலமே வாழும் இந்த வாழ்க்கைக்கு நாம் செல்வத்தைத் தேடுகின்றோம். ஆனால், தேடி வைத்த அந்தச் செல்வத்தைத் தன் பையன் காப்பானா? என்று சந்தேகம் வரப்படும் போது வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது ஆக அவனுடைய நினைவே அவனையே தீமையாக்கி விடுகின்றது.

இந்தச் செல்வம் யாருக்கும் நிலைத்ததில்லை. இந்த உடலும் சொந்தமாவது இல்லை.

நமக்குச் செல்வமும் தேவை .
இந்த உடலும் தேவை.
அருள் ஒளி பெற இந்த உணர்வின் தன்மை தேவை.

நமக்குள் அளவுடன் இருந்தால் வளம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் பகைமை இல்லாது நமக்குள் பாதுகாக்கும் அமைப்பு வருகிறது.

னால், நம் உடலுக்குள் பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டால் நல்ல அணுக்களின் தன்மை நமக்குள் வரும்போது இந்த உடலைப் பாதுகாக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்.

பகைமை உணர்வுடன் மற்ற எதிரி என்ற நிலையில் ஒருவரை உருவாக்கி விட்டால் அவனைக் கண்டு அஞ்சுவதும் அந்த உணர்வு நமக்குள் வருவதும்
நல்ல குணங்களை நமக்குள் அஞ்சச் செய்வதும்
பகைமையே வளர்ந்து பகைமை என்ற உணர்வு கொண்டு
மனிதன் என்ற நிலையை அழித்து விடுகின்றது.

இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள்வோம்.
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம்.

இந்த இருண்ட வாழ்க்கை நமக்கு வேண்டாம்
என்றும் ஒளியின் நிலைகள் பெறுவோம்.