ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2015

தவறு செய்ய வைப்பது நம் உயிரா? நாம் நுகர்ந்த உணர்வா? நம் உடலா?

ஒரு செடியின் சத்தை (மணம்) வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து இந்த பூமியில் அலைகளாகப் பரவச் செய்கின்றது.

அதே செடியின் சத்தை நாம் கண்கொண்டு பார்த்து அது தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டு அது என்ன?

அது தெரியவில்லை என்றாலும், நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
இதனுடைய குணம் என்ன?
இதனுடைய மணம் என்ன?
இது என்ன செய்யும்?
நம்மை வேதனைப்படுத்துமா?
நமக்கு உடலுக்கு நல்லதாகுமா?
என்ற நிலையைச் சிந்திக்கின்றோம்.

ஆனால் அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

அந்தச் செடியை நாம் பாரத்து அந்த வாசனையை நுகர வேண்டும் என்றால் அதனின்று வரும் அந்த உணர்வின் சத்தை சூரியன் கவர்ந்து வைத்திருப்பதனால் நமது கண்ணின் கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்குகின்றது.

ன்றாகக் கவனமாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்:-
நாம் இயங்குகிறோமா?
நம்மை இயக்குகின்றதா?

நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா?
அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?

தவறு செய்ய வைப்பது
நமது உயிரா?
நாம் நுகர்ந்த உணர்வா?
நம் உடலா?
என்பதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இயற்கையின் நியதிகள் அது.

உதாரணமாக, ஒரு கசப்பான நிலைகள் வேப்ப மரத்திலிருந்து வருகிறது என்று வைத்து கொள்வோம்.

நம் உயிரிலே பட்டு அந்த உணர்வின் மணங்கள் கசப்பின் உணர்ச்சிகள் நமக்கு வருகின்றது. “ஆண்டாள்” (இது காரணப் பெயர்).
உணர்ச்சிகள் வந்தவுடன் அந்த உணரச்சிகள் நம்மைத் தூண்டும்.
“ஓ.., ய்”ன்ற சப்தம் வருகிறது

அப்பொழுது இயக்குவது யார்?
அந்தக் கசப்பான உணர்வு இயக்குகின்றது.
அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்?
உயிர்.
அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் சென்றவுடன்
அது நம்மை இயக்குகிறது, ஆண்டாள்.

ஆக இதைப்போல இந்த உணர்ச்சிகள் அந்தச் செடியின் சத்தை நாம் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் செடியைப் பதிவாக்குகின்றது கண்ணின் கருவிழி.

செடியிலிருந்து வரக்கூடிய உணர்வை ன்ன? என்று தெரிந்து கொள்ளும்போது அது கவர்கின்றது. தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அதைக் கவரும் சக்தி வருகின்றது.

ப்பொழுது அந்த உணர்வு நம் உயிரிலே படுகின்றது. அது என்ன செடி? அது நல்லது செய்யுமா..,? கெட்டது செய்யுமா..,? நாம் ஆராய்ச்சி செய்கின்றோம்.

(கசப்பால்) வாந்தி வரும் என்று சொன்னால் நீக்கி விடுகிறோம்.

ந்த வேப்ப இலையை முழுவதும் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டு அம்மை வார்த்தவர்களுக்குப் போடலாம். அம்மை நோய் விஷத்தின் தாகுதலால் வருவது.

அந்த வேப்பிலையில் மஞசளைக் கலந்து தெளித்தால் உடலில் அம்மை என்ற விஷக் கிருமிகளை மாற்றுகின்றது. அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வந்து  வாந்தியாக வெளியே தள்ளுகிறது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது. அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை  நீக்குகின்றது.

அதனதன் சந்தர்ப்த்திற்கு அது வேலை செய்கின்றது. இது இயற்கையின் நியதி.

ருவருக்குக் கசப்பின் தன்மையத் தாங்கும் சக்தி உள்ளது. அந்தக் கசப்பை தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு
வேப்பிலையைப் பாரத்தவுடன் ஜம்.., என்று வரும்.

கசப்பைப் பார்த்தவுடன் வாந்தி வருபவர்களுக்கு
வேப்பிலையைப் பாரத்தவுடன் ..ய் என்று வாந்தி எடுப்பார்கள். ஏனென்றால் அவர் உடலில் உள்ள உணர்வுகள் இதை ஏற்க மறுக்கின்றது.

ஆனால், ஏற்றுக்கொண்ட உணர்வுகள் வந்தவர்களுக்குக் கசப்பைத் தாங்கும் சக்தி வருகின்றது.

உதாரணமாக, தெருவிலே போகும் சாக்கடையைச் சிலர் சுத்தம் செய்கிறார்கள். எல்லா அசுத்தங்களும் அசூசையான பொருள்களும் அதிலே போகின்றது.

தை நாம் பாரத்தவுடனே என்ன ஆகின்றது? நம்முடைய எண்ணம்  “அய்ய்யோ....,” என்ற நிலையில் முகத்தைச் சுழிக்கின்றோம்.

அந்த நாற்றத்தின் உணர்வுகளை முதலில் பதிவு செய்கிறோம்.
நாற்றம் ஆகும் என்ற நிலையைப் பதிவாக்குகிறோம். 
அப்பொழுது அதைக் கூர்ந்து கவனிக்கிறோம்.

அதை நுகர்ந்தவுடனே நமக்குத் தன்னாலேயே வாந்தி வருகிறது. வாந்தி வருகிறதா இல்லையா?

அப்பொழுது அதை யார் இந்த மாதிரி அசுத்தப்படுத்தியது என்று சண்டைக்கும் போகின்றோம். ப்படி நாற்றமாக்கும் அளவிற்கு ஆக்கிவிட்டார்கள். மூடி வைக்கக் கூடாதா? என்று சண்டைக்குப் போகிறோம்.

ஆனால், அதைச் சுத்தப்படுத்துகிறவர்கள்
அதை எண்ணவில்லை.

சாதாரணமா வேலைக்குப் கூலிக்குப் போனால் பத்து ரூபாய் கிடைக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்குப் பத்து ரூபாய் என்றால் நாற்றமான இதைச் சுத்தப்படுத்தினால் கூலி ஒரு மணி நேரத்திற்கு நூறு ரூபாய் கிடைக்கின்றது.
ஆக, இந்த ரூபாய் மேல் ஞாபகம் வருகின்றது.
இந்த நாற்றத்தின் தன்மை அவர்களிடம் வருகின்றதோ? இல்லை.

இதனுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதன் நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இப்படி வருமா..,? என்று எண்ணிச் சொன்னால் அது வரும். அந்த உணர்வைப் பதிவாக்குகிறோம் கருவிழி ருக்மணி நினைவைப் பதிவாக்குகிறது.
மீண்டும் நினைவுக்கு வருகிறது.
அதிலிருக்கும் காற்றை இழுக்கிறது.
எல்லாவற்றையும் நமக்குள் சேர்க்கிறது.

இப்படித்தான் நாம் சுவாசிக்கின்றோம். சுவாசிக்கும் உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்தல் மிகவும் அவசியம்.