நமது குருநாதர் அவர் பித்தனைப்
போன்றுதான் இருந்தார். பித்தனைப் போன்றுதான் எல்லா உலகையும்
அறிந்தார்.
இன்றும் அந்த குரு காட்டிய வழியில்தான் ஒன்றும் தெரியாதவனைப் போல்
எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றேன்.
ஆனால் உங்கள் உணர்வைத் தேடி அதற்குத் தக்க இங்கு வந்தோர் உணர்வுகளுக்கும் இந்த
குரு காட்டிய அருள் வழியை உணர்வை உபதேசிக்கும் போது
நீங்கள் எந்த நிலையில்
வந்தாலும்
உங்களுக்குள் நல்ல சிந்தனையைத்
தூண்டி
தன்
தன் தவறுகளை உணர்ந்து
தீமைகளை நீக்கும் அளவிற்கு அருளுணர்வு பெறச்செய்கின்றேன்.
நம் குருநாதர் பித்தனைப் போன்றுதான் இருந்தார். அதன் வழிதான் எனக்கு வழி
காட்டினார். அதைப் போன்று இன்று நான் தெரியாதது போல் தான் இருக்கின்றேன். உங்களுடன்
தெரிந்து கொண்டவனாக நெருங்குகின்றேன்.
ஆக, நான் தெரிந்து கொண்டது என்ன?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறவேண்டும் நீங்கள் பொருளறிய
வேண்டும் அருள் உணர்வைப் பெறவேண்டும் என்ற உணர்வைத் தான் திருத்திக் கொள்கிறேன்.
நீங்கள் சொல்வதை “உம்”
கொடுத்துக் கேட்பதில்லை அங்கிருந்து வந்தவுடன் என் வீட்டில் கஷ்டம், அப்படி இருக்கின்றார்கள் இப்படி இருக்கின்றார்கள்,
அதைச் செய்கின்றார்கள், இதைச் செய்கின்றார்கள் என்று குறைகளை எல்லாம் சொல்வார்கள். அப்பொழுது நான் அதைத் தெரிந்துகொள்ள
விரும்புவதில்லை.
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் பேரருள் பேரொளியினை நீங்கள் பெற்று அந்தத்
தீமைகளை நீக்குவதற்குண்டான ஆற்றல்களை நீங்கள் பெறவேண்டும் என்று எனக்குள் மாற்றிக் கொள்கின்றேன்.
இதைப் போல ஒவ்வொருவரும் தீமை புகாத நிலைகளில் நீங்கள் கற்றுணர வேண்டும்
உலகம் விஷத் தன்மையாக மாறி கொண்டிருக்கின்றது. எங்கே பார்த்தாலும் ஜாதி மதம்
என்ற நிலைகள் வரப்படும்போது வெறி கொண்டு தாக்கிடும் நிலையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றார்கள்.
தன் இனத்தை அழிக்க வருகின்றான் அவனை அழிப்பதால் இந்த உயிர் போனால் பரவாயில்லை.
இப்படிப்பட்ட வீரிய உணர்வுதான் வருகின்றதே தவிர
அவனுக்குள் இருக்கும் இருளை
நீக்க வேண்டும்
ஒளி என்ற நிலைகள் அவர்
பெறவேண்டும்
என்ற எண்ணம் எவருக்கும் வரவில்லை.
அசுர உணர்வு பாயும் போது நல்ல உணர்வுகள் வருவதில்லை.
இதைப் போன்ற நிலைகள் நாட்டில் வாழும் நாம் ஒவ்வொரு தியான வழி அன்பரும் நாம்
என்ன செய்யவேண்டும் என்ற நிலைகளை அடுத்தடுத்து ஞானத்தை எடுத்துப் போதியுங்கள்.
அந்த உணர்வின் தன்மை சொல்லப்படும் போது இப்பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வின்
தன்மை மற்றவர்களும்
பெறவேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குள் அந்த வளர்ச்சி பெறுகின்றது.
இதன் உணர்வை அவர்களும் பெருக்கத் தொடங்கினால் வாழ்கின்றனர். அவர்களும் வாழ வழி
வகுக்கின்றது. நல்ல வழியையும் காட்டுகின்றது.
ஆகவே, நாம் இதைப் போல் தொடர்ந்து நமது வாழ்க்கையே தியானமாக்க வேண்டும். தியானம்
என்றால் தீமைகள் புகாத நிலைகளில் நாம் தடுத்துக் கொள்தல் வேண்டும்.