ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2015

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தித் தீமைகளை நீக்கிடும் ஆணையிடுங்கள்

நம்முடைய ஆறாவது அறிவு - தீமை என்றால் தெரிந்து கொள்கிறது கார்த்திகேயா.

தீமைகளை நீக்கி இன்று ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம். அதை வழி நடத்தி அதன் உண்மையின் உணர்வை நாம் அறிவதற்காக இதை உபதேசிக்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று கண்களால் ஏங்கி அதன் உணர்வைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தால்
வானை நோக்கி எண்ணி
அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.

கண்களால் பார்த்து உயிரில் படும் பொழுது உணர்வால் அறிகின்றோம். ஆனால், அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வானால் கண்களால் நுகர்ந்தோம். உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை நமக்குள் அறிகின்றது.

கண்ணால் பார்க்கின்றோம்.
உயிரால் உணர்கின்றோம்.

ஆகவே, இதை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும்போது வலிமையாகி விடுகின்றது.

ஏனென்றால், வேதனைப்பட்டோருக்கு நாம் கேட்டறிந்து உதவி செய்கின்றோம். ஆனால், அடுத்த நிமிடம் துருவ நட்சத்திரத்தை எடுத்து புருவ மத்தியில் எண்ணினால் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு சேனாதிபதி ஆகின்றது.

தீமையான உணர்வை நுகர்ந்தாலும் முதலில் உள்ளுக்குள் போய்விட்டது அந்தத் தீமையின் நிலைகள் புகாது தடுக்க வேண்டும்.

ஆக, ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைக்கும்போது இங்கே உடலுக்குள் போகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.

அப்படித் தடைப்படுத்துவது மட்டுமல்ல, நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்தும்போது
இதை ஆணையிடுகின்றது
ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது கார்த்திகேயா.

இதன் உணர்வு கொண்டு அந்த அணுக்களுக்குச் செலுத்தப்படும்போது அது வீரியமடைகின்றது. நாம் எண்ணியபடி தீமைகள் வராதபடி தயாராகின்றது. நுகர்ந்ததில் சிறிதளவு சென்ற அதையும் இந்த உணர்வுகள் சேர்த்து
இது உமிழ்நீராக மாறி உடலுக்குள் சேர்க்கப்படும்போது
அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமைகளை நுகராது தடுத்தபின்
இது சிறுத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உமிழ்நீராக உடலுக்குள் மாறும்போது தீமைகள் அது சிறுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நோயால் வேதனைப்ப்டும் ஒருவரைப் பார்க்கும் போது கருவிழி ருக்மணி ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது. பதிவானபின் தான் அதை நுகரும்.

அதே சமயத்தில் அடுத்த கணம் இதைத் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் எண்ணினால் நாம் யார் நோயுற்றவரைப் பதிவாக்கினோமோ
அதன் உணர்வின் அருகிலேயே இங்கே பதிவாக்கிவிடுகின்றது.
அப்படிப் பதிவாக்கப்படும்போது இதைக் காட்டிலும் வலிமையானது.

அப்பொழுது நோயுற்றவரின் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் சிரமங்களிலிருந்து விடுபட வேண்டும் அருள் வழி வாழவேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று இதன் உணர்வைப் பதிவு செய்யவேண்டும்.

இதற்கு மத்தியில் அவர் வேதனை என்ற உணர்வுகள் நாம் குழம்பு வைக்கும்போது எப்படியோ இதைப்போல இது (தீமைகள்) அடங்கிவிடுகின்றது.