ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2015

காளானின் தோற்றமும், செடி கொடிகளின் தோற்றமும்

சூரியனிலிருந்து வரும் வெப்பகாந்தங்கள் ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து செல்கின்றது அது வேகமாகச் செல்லும்போது, வேப்ப மரத்திலிருந்து வரும் கசப்பான மணம் அதுவும் வெப்பகாந்தம்தான், அது இரண்டும் மோதியவுடன் இரண்டிலும் இருக்கக்கூடிய வெப்பமும் காந்தமும் ஒன்று சேர்ந்துவிடுகின்றது.

ஆனால் ரோஜாப்பூவின் மணமோ, கசப்பின் மணமோ ஒன்று சேர்க்கப்படும்போது குணத்தின் சிறப்பு மாறுகின்றது.

அதே மாதிரி, பூமிக்குள் கல்லில் இருந்து பல ஆவிகள் வெளிவருகின்றது. அதே சமயம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்ப காந்தம் தாக்கித்தான் இந்த வெப்பம் உருபெறுகின்றது.

அந்த வெப்பத்தினால் சூடாகி வெளியிலே வரப்படப்போகும்போது பல பாறைகள், மண்ணுக்குள் உள்ள பல சத்துக்களை வெளிவரக்கூடிய காந்த சக்திகள் அதைக் கவர்ந்து கொள்கின்றது.

ப்பொழுது செடி கொடிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு காந்தமும் வரிசையிலே ஒன்றுடன் ஒன்று மோதியவுடனே, இந்தக் காந்தமும் வெப்பமும் ஒன்று சேர்ந்துகொள்கின்றது.

ஆனால் பல சத்தின் நிலைகள் ஒன்றாகக் கலக்கப்படும்போது உணர்வின் சத்தினுடைய நிறங்கள், குணங்கள், செயல்கள் எல்லாம் மாறாது.

ஆக, பத்து அணுக்கள் சேர்ந்த அந்த காந்தமும், வெப்பமும், ஈர்ப்பு சக்தி கூடி காந்தம் அதிகமாகின்றது. பத்து வெப்ப அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும்போது வெப்பத்தை அதிகமாக்கும் சக்தி அந்த அணுவுக்கு உண்டு.

இதே மாதிரி ஒரு 1000 அணுக்களில் மோதி
அது ஒன்று சேர்க்கப்படும்போது
1000 விதமான உணர்வுகள் சேர்க்கப்படும்போது அந்த உணர்வுகள் வேறு கலவையாக மாறுகின்றது.

ஆற்றல்மிக்க நிலையாக ந்த காந்தசக்தி காற்றிலே தன் இனத்தைக் கவர்ந்து இழுக்ககூடிய நிலைகள் வருகின்றது. வேப்பமரம் பல நூறு உணர்வின் சத்தை மாற்றித்தான் கசப்பின் தன்மையை அடைகின்றது.

ஆனால், அந்தக் கசப்பின் தன்மை கொண்ட அந்த அணுவின் தன்மை - வெப்பத்தை ஈர்க்கும் அதே உணர்வின் ஆற்றலாகப் பெருக்குகின்றது.

அப்போது அது வெளிப்படுத்தும்போது அந்தக் கசப்பின் தன்மை எங்கிருந்தாலும்
தனக்குள் எத்தனை, எத்தனை உணர்வுகள் சேர்த்துக்கொண்டதோ
காற்றிலே சிற்றலைகளாகப் போகும்போது
அதை அது இழுத்து,
வேப்பமரம் தன் கசப்பின் தன்மையை வளர்த்துக்கொள்ளும்,

கவனமாகக் கேட்க வேண்டும்.

இதைப்போன்றுதான் தாவர இனத்தின் தன்மைகள் காந்தமும் வெப்பமும் அந்த காந்தம் ஒன்றுடன் ஒன்று தனக்குள் கவர்ந்துகொள்ளும்,

இன்னொரு காந்தம் வந்தால் அதைத் தனக்குள் பற்றி அந்தக்காந்தங்கள் இனம் ஒன்று சேர்த்துவிடும். அதே போன்று வெப்பத்தின் தன்மை இனம் ஒன்று சேர்த்துவிடும்,

இப்படி, 1000 காந்தங்கள் 1000 விதமான உணர்வுகளைச் சேர்த்து ஒரு வலுவான நிலைகளை பெறுகின்றது. அப்போது அதனுடைய சக்தி ஆற்றல் மிக்கதாக மாறி (அதற்குள் காந்தம் அதிகமாக இருப்பதால்) தன் இனத்தை
லகுவான முறையில் தனக்குள் எடுத்து
அந்த ஆற்றல்மிக்க சக்தி வளர்கின்றது.

பல 1000 மணங்கள் ஒன்று சேர்த்து ஒரு சுவையாக வெளிப்பட்டாலும் அதற்குள் உள்ள நுண்ணிய அறிவின் அலைகள்
தனக்குள் கவர்ந்ததை,
காற்றில் இருப்பதைத் தனக்குள் பற்றி
அந்த உணர்வின் சக்தியை அது வளர்த்துக்கொள்ளும்.

இப்படித்தான் ஆற்றல்மிக்க அணுக்கள் விளைந்து நம் பூமியிலே படரப்படும்போது பல செடி கொடிகள் வளரக்கூடிய காளானாக முளைக்கின்றது.

பல 1000 சத்துக்கள் சேர்த்து அது எடையாகி அது மண்ணுக்குள் பதியும்போது, மின்னல் தாக்கியவுடன் துடிப்பாகி, இந்த மண்ணின் துணைகொண்டு (பூமியின் ஈர்ப்புகொண்டு) காற்றிலிருக்கக்கூடிய உணர்வுகள் அதன் துணைகொண்டு இருக்கும்போது அது காளானாக முளைக்கின்றது.

அவ்வாறு காளானாக அது முளைத்து அது இன விருத்தியின் தன்மையை அது வளர்த்து, அதே முயற்சியில் வரப்படும்போது பல செடிகளாக வருகின்றது.

அப்போது ஒரு காளானின் விஷத்தின் தன்மை மண்ணில் பலவாறு பல விஷத்தின் தன்மை படரவிட்டவுடனே,
அது அங்கே உள்ள மண்ணின் சத்துக்கொப்ப
அங்கிருக்கக்கூடிய மற்ற கலவைக்குத்தக்கவாறு
பல செடிகொடி தாவர இனங்களாக உருமாறுகின்றது

இது இயற்கையின் சில நியதிகள். இவ்வாறுதான் இந்த பூமியிலே பல செடி கொடிகள் வளர்ந்து வந்தது. பல மாற்றங்கள் ஏற்பட்டது.