நம் மனித வாழ்க்கையில் நாம் பிறரைப் புகழ்ந்து பேசலாம். நான் தவறே செய்யவில்லை
நன்மைதான் செய்கின்றேன் என்று சொன்னாலும்
மறைமுகமாக எதிரிக்குப் பல துன்பங்களைக் கொடுத்து
அவனை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுகள்
வளருகின்றது.
அந்த வீழ்த்திடும் உணர்வுகள் நமக்குள் வளரப்படும்பொழுது அதற்கு ஆதாரமாக
அவருடன் அணுகிப் பழகுவோரிடம் எல்லாம் அவரைப் பற்றித் தவறுகளைச் சுட்டிக்காட்டி
அவர் செய்வது தவறு என்று சொன்னாலும் அவர் அதைப்
பகையாக எடுப்பார்.
காரணம் அவர் சொல்வதை நியாயம் என்று ஏற்றுக்கொள்வதில்லை. அவருக்கு நல்வழி
காட்டினாலும் அவர் அதைப் பகையாக எடுத்துக் கொள்வார்.
அந்தப் பகைமை உணர்வை எடுத்துக் கொண்டபின் நல்லது சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத
நிலைகளே உருவாகும். அந்த நிலைகளில் அவருடைய
எண்ணமே அவருக்கு எதிரியாக வேலை செய்யும் உணர்வை உருவாக்கிவிடுகின்றது.
அவ்வாறு உருவாக்கிவிட்டால் அவர் எனக்கு இப்படி தொல்லைகள் கொடுக்கின்றார் என்ற
எண்ணத்தை வளர்த்து விடுகின்றனர்.
அந்த வளர்ச்சியின் தன்மை அடைந்துவிட்டாலோ வெறுப்பு, வேதனை, கொதிப்பு போன்ற
உணர்வுகள் வரும்பொழுது அது சம்மந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றது.
அந்த உணர்வின் அணுக்கள் பெருக்கமாகும் பொழுது அவருக்குள் மற்றோரைக் கொதிக்கச்
செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அது அவருக்குள்ளேயே முதலில் விளைகின்றது.
ஒரு செடியில் வித்தின் தன்மை வந்தால்தான்
மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்யும்.
மனிதனில் பிறருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் அது முழுமையான
நிலைகளில் உருவாக்கப்படும்பொழுது வித்தாகின்றது. முதலில் அவர் உடலுக்குள் தீங்கு செய்யும் நிலையே உருவாகின்றது.
பின் அவர் சொல்லின் தன்மையை பாய்ச்சப்படும் பொழுது யார் உடலில் விளைகின்றதோ
அவருடைய எண்ணத்தை,
இப்படிச்
செய்கின்றாரே என்று சொல்லப்படும்போது
இந்த உணர்வும் அங்கு வித்தாக விளைகின்றது.
ஒரு மரத்தில் விளைந்த சத்து சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப்
பரப்படும்பொழுது தன் மரத்தில் விளைந்ததை வித்திற்கு உணவாகக் கொடுக்கின்றது. அதைப்
போன்று
மனிதனில் விளைந்த
தீமையை விளைய வைக்கும் உணர்வுகள்
இன்னொரு உடலில் விளைந்தால்
அந்த உயிரணு தனக்குள் அந்த உணர்வை உணவாக எடுத்து
அங்கும் தீமையை விளைய
வைக்கும் நிலையே விளைகின்றது.
முதலில் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ண உணர்வு உள்ளவர்கள் உடலிலும் தீமையின்
வளர்ச்சி பெறுகின்றது. அவரால் வெளிப்படும் உணர்வுகள் இந்த பூமியில் பரமாத்வாகப்
படரும்பொழுது அதை யார் மேல் பாய்ச்சினரோ அவருக்குள் வித்தாக இருந்து விளைகின்றது.
ஆகவே, அவர் உடலில் விளைந்த உணர்வுக்கு ஊட்டச் சத்தாக இவர் உடலிலும் விளைந்து
இவர் மரணமடைந்தால் அவர் உடலுக்குள் செல்லுகின்றார்.
அவர் முந்தி மரணமடைந்தால் அவர் உடலுக்குள் செல்லுகின்றார்.
ஏனென்றால், எந்த உணர்வின் வளர்ச்சி இங்கு வருகின்றதோ இப்படித்தான் மாறி தீய
உணர்வினை நுகர்ந்து மீண்டும் மனிதனாகப்
பிறக்கும் நிலையை இழக்கின்றார்கள்.