நமது பூமி, விண்ணிலிருந்து உணர்வின் சத்தை எடுத்து, ஒரு செடியை உருவாக்குகின்றது. அந்த செடி காற்றிலிருந்து, தன் உணர்வை எடுத்து விளைகின்றது. இருந்த இடத்திலிருந்து அது
விளைந்தாலும், அதனுடைய வளர்ச்சியை அது பெறுகின்றது.
நமக்குள் இருக்கும் அணுக்கள், அது இருந்த இடத்திலிருந்து
தான் அதனுடைய உணர்வின் சத்தை பெறுகின்றது. நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கும்பொழுது,
உயிர், உணர்வுகளை உடலில் பரப்புகின்றது.
சூரியன், ஒரு செடியின் சத்தை எடுத்து,
அலைகளாக பூமியில் பரப்புகின்றது.
அந்த செடியில் விளைந்த வித்து, எங்கிருந்தாலும்,
இந்த சத்தை எடுத்து, அதற்குக்
கொடுக்கின்றது.
இதேமாதிரிதான்,
நமது உயிர்,
பிறருடைய உணர்வைப் பார்க்கும் பொழுது,
எண்ணத்தால் கவர்ந்து, ஆன்மாவாக மாற்றி,
சுவாசித்து, உடலுக்குள் அனுப்புகின்றது.
பூமியின் காற்று மண்டலத்தில், பிராண வாயு, மற்ற வாயுக்கள் மாதிரி உடலுக்குள் சென்றவுடன், அணுக்களுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பிரித்து, வெளியில் தள்ளிவிடுகின்றது.
இதைத் தான் “பிரணாயாமம்” செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைப்பது. “பிராணாயாமம்” என்றால் என்ன என்று தெரியாமல், மூச்சை வலுக் கட்டாயமாக இழுத்துவிட்டு, சுவாசப்பைக்கு அனுப்பி உடல் முழுவதும் பரப்புகின்றது.
பின் மூச்சை அடக்கிக் கொண்டு போனோமென்றால், அங்கங்கு காற்று
ஏறிக்கொள்ளும். இந்த பிராணாயாமம் செய்பவர்கள் எல்லோரும், குடு குடு என்று ஓடுகின்றது என்று சொல்லுவார்கள். எனக்கு
எப்படியோ வருகிறது என்று சொல்லுவார்கள், அதுவல்ல பிராணாயாமம்.
உண்மையான "பிராணாயாமம்", எதுவென்றால்,
ஒரு உணர்வின் தன்மை,
நமக்குள் வாடி இருக்கிறதென்றால்,
அந்த மெய்ஞானிகளின் உணர்வை எடுத்து,
நமக்குள் ஜீவ அணுக்களாக மாற்ற வேண்டும்.
அப்படி ஜீவ அணுக்களாக்கும் பொழுது,
அந்த அணுக்களை எடுத்து,
அது தனக்குள் வளரத் தொடங்கும்.
நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் வரும் பொழுது, அருகில் இருக்கும் உறுப்புகளை மாற்றுகின்றது. அப்பொழுது, மகரிஷிகளின் அருள்சக்தி நான்
பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி, நாம் உடலுக்குள் அனுப்ப
வேண்டும்.
அந்த சக்தி வாய்ந்த நிலைகள் உள்ளுக்குள் சென்றவுடன், நலிவடைந்த உறுப்புகள் கொஞ்சம் பலம் பெறுகின்றது. நாம் செடிகளுக்கு உரம் போட்டவுடன், காற்றிலிருந்து எடுத்து எப்படி விளைகின்றதோ, அது போல, இதை எடுத்து வரும்பொழுது, அது கொஞ்சம்
கொஞ்சமாக விளைகின்றது.
குரு எனக்கு இதை உணர்த்தினார். குரு காட்டிய வழியில் நீங்கள் எல்லோரும் இதைப் பெற வேண்டும்
என்றுதான், இதை நான் சொல்கின்றேன். நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று நான்
விரும்புகின்றேன். நம் அனைவருக்கும் மகரிஷிகளின்
அருள் சக்தி கிடைக்கின்றது.