Sunday, February 15, 2015

ஆவிகளை வைத்து ஜோதிடம் சொல்பவர்களைப் பற்றி குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவம் -ஞானகுரு

நான் (ஞானகுரு) பழனியில் அனுபவ ரீதியில் தெரிந்து கொண்டதைச் சொல்லுகின்றேன்.

ஒருவருடைய பையன் ஜாதகத்தில் எட்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்த நேரத்தில் இவன் பிறந்திருக்கின்றான் என்று பழனியில் ஒரு ஜோதிடர் சொல்லிவிட்டார்.

இவர்கள் வீட்டிற்கு அருகிலேயே தறி வைத்து துணி நெய்வார்கள். அங்கு வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் கை கால் வீங்கிப் போகும்.

தொழிலில் யாரும் சரியாக வேலைக்கு வரமாட்டார்கள். இதைப் பார்க்க பழனிக்குச் சென்றது. அங்குதான் ஒரு ஜோதிடர் இவ்வாறு சொன்னது.

அந்தக் குடும்பமே பழனி முருகனை மறக்க மாட்டார்கள். காசு இல்லையென்றாலும் நடந்தாவது பழனிக்குப் போய் முருகனை தரிசித்து வந்துவிடுவார்.

நடந்து சென்றால்தான் முருகன் அருள் கிடைக்கும் என்று அந்த அளவிற்கு குடும்பமே முருக பக்தி செய்து வந்திருக்கிறார்கள்.

பழனியில் குளக்கரையில் ஒருவர் ஜோஸ்யம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இராணுவத்தில் பணி புரியும் போது குண்டடிபட்டு ஒரு கால் ஊனமாகிப் போய்விட்டது.

அவர் ஜாதகம் பார்த்து, பல கரை போட்டு (சோழி போட்டு) எல்லாவற்றையும் சொல்லுவார்.

அவர் தம்பி என்னைச் சந்திப்பதற்கு முன் இவரிடம் அவர்கள் குடும்பத்தார் மாட்டிக் கொண்டார்கள்.

இவர்களிடம் அவர் எட்டு விதமான கலர் பீஸ் துணி எடுத்து, ஓடிப் போய் விடு என்று சொல்லுங்கள் கிரகங்கள் ஓடிப்போய்விடும் என்று சொல்லிவிட்டு துணிகளைக் கொண்டு ஓடிப்போய்விட்டார்.

இவர்கள் செய்த சேஷ்டை தான், எந்தெந்த ஆவிகளுடைய நிலைகள் அந்த ஜோதிடக்காரனிடம் இருந்ததோ அவைகள் அனைத்தும் அவர் தம்பி பையன் உடலிலே பதிந்துவிட்டது.

எட்டு கிரகங்கள் ஒன்றாக தோன்றி இருக்கிறது என்று இவர்கள் ஜாதகப் பதிப்பை அவனுக்குள் பதிவு செய்து, இந்த எண்ணத்தையே இவர்களுக்குள் உருவாக்கப்பட்டு, ஜோதிடக்காரனின் நினைவையே கொண்டு வந்து விட்டார்கள்.

இதற்காக வேண்டி மந்திரங்கள், தந்திரங்கள் செய்தார்கள். இதுவெல்லாம் அவர்கள் குடும்பத்திற்குள் வரத் தொடங்கிவிட்டது. 

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒரு மூட்டை அரிசி வாங்கினால் இன்னின்னாருக்கு என்று பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அது ஒரு சமஸ்தானம் மாதிரி. எல்லோருக்கும் ஒரே அளவில் பங்கிட்டு வாழ்ந்து வந்தார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் அன்றைக்கு அவனுக்குள் பதிவு செய்தது இன்றைக்கும் அவனைத் திருத்த முடியவில்லை.

அந்த உணர்வுடைய ஆவிகள் அவனுக்குள் பதிவாகி, நாம் சொன்னால்கூட எதிர்ப்பதற்கு ஆரம்பித்துவிடுவான்.

அதை விட்டு விடு என்று சொல்லி இப்பொழுது ஓரளவிற்கு கேட்கின்றான். காரணம் பதிவு செய்த உணர்வுகளை அவனால் மாற்ற முடியவில்லை.

ஆனால் அவன் செய்த உணர்வுகள் வீட்டில் படர்ந்து அவர்கள் குடும்பத்தில் படாதபாடு படுகின்றார்கள்.

ஆத்ம சுத்தியின் வலுதான் அவர்களைக் காக்கின்றது.

இவர்கள் மந்திரத்தால் செய்து கொண்ட பதிவுகள் ஆவியாக நின்று பல நிலைகளைச் செய்தது.

இவர்களிடம் துணிகளை வாங்கிக்கொண்டு ஓடிய அதே ஆள் (ஜோதிடர்) நான் சித்தான புதிதில் என்னிடம் வந்தார்.

வந்தவுடன், சாமி என்னை ரட்சிக்க வேண்டும் என்று ஜோதிடர் கேட்டார். என் குடும்பத்தில் பெரும் தொல்லை. என் பையனுக்குக் காலில் ஆணி குத்திவிட்டது. அதனால் புரை ஏறிவிட்டது என்றார்.

ஒன்றும் செய்ய முடியவில்லை என்னைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்தார்.

அவர் வீட்டில் இவர் செய்த நிலைகளைத் தெரிந்து கொண்டு வந்தபின் அவரிடம் பேசினேன். அப்பா நீ அவர்களிடம் வாங்கி இங்கு கொடுத்துவிட்டு காசை வாங்கி இன்னொருத்தரிடம் கொடுக்கின்றாய். அவர்களுக்குக் கொஞ்சம் நீ கொஞ்சம் எடுத்துக்கொள்கின்றாய். பாவத்தை எல்லாம் நீ ஏற்றுக்கொள்கின்றாய்.

பிறருக்கு நல்லது சொல்வதற்கு மட்டும் இல்லாதபடி இந்தப் பழனிக்குத் தேடி வருபவர்களிடம் ஒவ்வொரு குடும்பத்தையும் கெடுப்பதற்கு என்னென்ன சக்கரங்களை வாங்கிக் கொடுத்தாய்?

என்னென்ன நிலைகளை எடுத்து இருக்கின்றாய். பணம் தான் பிழைப்பு என்று நீ எண்ணிக் கொண்டுள்ளாய். இது உனக்கு என்ன செய்யும்? என்று சொன்னேன்.

நான் சொல்லி 10 நாட்களுக்குள்  குளத்திற்குள் ஏதோ செய்து. இருக்கின்றான். அவன் அங்கேயே தண்ணீரில் மூழ்கி விரைத்துக் கடந்தான்.

அவனை யாரும் அடிக்கவில்லை. இந்த ஆவியின் தன்மை அவனை வீழ்த்துகின்றது. வீழ்த்தியபின் இவனுடைய ஆன்மா எதைக் கொண்டு யாரிடம் செய்தார்களோ அவன் உடலில் புகுகின்றது.

இதையெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பின் தொடர்ந்து நேரடியாக எம்மை அனுபவம் பெறச் செய்தார்.
அவரின் சக்தி எனக்குத் துணை இல்லையென்றால்
பல ஆவிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்க வேண்டி இருந்திருக்கும்.
இதுவெல்லாம் அறிவதற்கு குரு அருள் இருந்தது.

இன்று ஒவ்வொருவரையும் குற்றவாளியாக நினைக்கின்றோம். இவ்வளவு செய்தேனே, இவன் இப்படிச் செய்கின்றானே என்று சொல்லலாம். ஆனால், சாப அலைகள் பாவ அலைகள் என்ற உணர்வுகள் இவருக்குள் பதிவாகின்றது.

ஒருவர் இரக்கத்துடன் நல்லது செய்தாலும்
பிறர் இட்ட சாப அலைகள் ஒருவரைத் துன்பப்படுத்தும்பொழுது
அந்த உணர்வுகள் இவருக்குள் இழுக்கப்பட்டு
அதே உணர்வு இங்கு வேலை செய்யும்.

ஒரு விஷ வித்தை எங்கு ஊன்றினாலும், அதனுடைய உணர்வை எடுத்துத்தான் விளையும்.

நம் உடல் ஒரு நிலம் மாதிரி. நிலத்தில் ஊன்றிய வித்துக்களுக்கு சூரியன் மற்ற உணர்வுகளை எடுத்து, சத்தாக உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. 

அதைப்போன்று நமது உயிர் நம் உடலுக்குள் சூரியன்.

நாம் எந்தெந்த எண்ண அலைகளை எடுத்துச் சுவாசிக்கின்றோமோ
அந்த உணர்வின் அணுக்களை
உயிர் நம் உடலுக்குள் உருவாக்கிவிடுகின்றது.

உருவாக்கிவிட்டால், நம் உயிர் அந்த அலைகளை எடுத்து உடலுக்குள் பரப்பிக் கொண்டுதான் இருக்கும். அதற்கு உணவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.

இதை நீங்கள் தெரிந்துக் கொள்வதற்குத்தான் இந்த அனுபவத்தைச் சொல்லுகின்றேன்.