ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2015

அண்ணன் தம்பி சண்டையில் உடலுக்குள் புகுந்த ஆவியின் செயல்கள் - மங்களூரில் நடந்த நிகழ்ச்சி

நான் (ஞானகுரு) மங்களூரில் இருக்கும் பொழுது நடந்த நிகழ்ச்சி இது.

அண்ணன் தம்பி இரண்டு பேரும் சேர்ந்து பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். தம்பி அண்ணனைத் திட்டிக் கொண்டே இருந்ததில் அவர் இறந்துவிட்டார்.

இறந்தவுடன் தம்பி மனைவி உடலில் புகுந்து கொண்டது.

மங்களூர் கடற்கரையில் மூன்று கோழிகளை அறுத்து, ஒரு கோழியைச் சமைத்து பூத கணங்களுக்குக் கொடுத்துவிட்டால் இந்தப் பேயை ஓட்டிவிடலாம் என்று செய்தார்கள்.

அந்த மாதிரி செய்தும் போகவில்லை.

வியாபாரத்தில் பால் திரிந்து போகும். அந்த அம்மா அழுது கொண்டே இருக்கும். எனக்குத் தோசை வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று அழுது கொண்டேயிருக்கும்.

அவர் என்னென்ன சாப்பிட்டாரோ அதையெல்லாம் கேட்கும். நான் அங்கே போயிருக்கும்போது விவரங்களைச் சொன்னேன். அதுவரையிலும் அவர்களுக்குத் தெரியாது.

“என்னைத் தெரியுமா..?” என்றது.

நான் எல்லா விவரத்தையும் சொன்னேன்.

இங்கிருக்கும் இந்தப் பாவிப்பயலின் (தம்பி) அண்ணன் தான் நான் என்றது.

என்னைப் பழி தீர்த்தான், இம்சித்தான், கேவலப்படுத்தினான். அதனால், “அவன் மனைவியைப் பிடித்துவிட்டேன்” என்றது.

ஆவி ஒரு உடலுக்குள் இருந்தால் என்ன செய்யும் என்பதை குருநாதர் காட்டச் சொன்னார்.

மிளகாயை ஒரு சட்டியில் போட்டுக் காட்டச் சொன்னார். உன்னை மிளகாயைக் காட்டி விரட்டுகின்றேன் என்று சொல்லச் சொன்னார். சட்டிக்கு முன் முகத்தைக் காட்டி அப்படியே அமர்ந்துவிட்டது.

அங்கிருந்த எல்லோரும் எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வீட்டின் அருகில் ஜோஸ்மெட் என்ற மண்டபம் உண்டு. அது ராகவேந்திர சாமியை வைத்திருக்கும் மண்டபம். வெளி ஊரிலிருந்து அங்கு வந்திருந்த எல்லோரும் கார நெடி தாங்காமல் ஓடிவிட்டார்கள்.

பிறகு அந்த ஆவியை அடக்கி இன்னொரு ஆவி (ஆன்மா) ஒரு உடலுக்குள் சென்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களிடம் சொன்னேன்.

நீங்கள் அந்த ஆன்மாவிற்குச் சாதகமாகப் பேசினீர்கள் என்றால் கேட்கும் என்று சொன்னேன். அதற்கு அவர்களும் ஒத்துழைத்தார்கள். அதற்குப் பின் அது அமைதியானது.

ஏனென்றால், மனிதன் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது?

அதில் ஒரு அணு மனிதரிடம் பட்டுவிட்டால்
அதே அணு நுகரப்படும் பொழுது ஆன்மாவாகி
சுவாசித்தபின் உணர்வுகளின் அலைகளை எப்படிப் பரப்புகின்றது?

வேண்டுமென்றே அவர்கள் பேசுகிறார்கள், செய்கிறார்கள் என்ற் நாம் நினைக்கிறோம்.
ஒன்று பதிவாகிவிட்டால்
உயிரில் பட்டு அந்த உணர்வை இயக்கும்.
டேப் ரிகார்டரில் பதிவான மாதிரி தான்.

இது மாதிரி மக்கள் மத்தியில் பல பேர் இன்றும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்பதற்குத்தான் திருப்பதிக்குப் போய் பத்ரிநாத் வரையிலும் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி சென்று, மறுபடியும் கன்னியாகுமரியிலிருந்து கேதார்நாத் போய் சீன எல்லை வரை சென்று இங்கு வந்தது.

இப்படி பல பல அனுபவங்களாகப் பெற்றதைத்தான் உங்களிடம் சொல்லி வருகிறோம்.