ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2015

நம் உடலிலுள்ள (ஜீவ) ஆன்மாக்களுக்கு தியானிக்க வேண்டிய முறை

நாம் நுகர்ந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. ஜீவான்மா என்றால் ஒரு கொசுவை நாம் நசுக்கியிருந்தால் அந்தக் கொசுவின் ஆன்மா நம் உடலுக்குள் வந்திருக்கும்.

அதே சமயத்தில், பாசத்தின் தன்மையில் பிற மனிதனின் ஆன்மா நமக்குள் வந்துவிடும். மனிதனான உணர்வுகள் நம்மை எண்ணி பேய், பிசாசு என்று சொல்வார்கள். பக்தி கொண்ட ஆன்மா என்று சொல்வார்கள்.

ஆக, நம்முடன் பழகிய உணர்வுகள் நமக்குள் வந்ததென்றால் அதன் இயக்கம் நம்மை இயக்க ஆரம்பித்துவிடும். உடுக்கை கேட்கிறது, ஜோஸ்யம் பார்க்கிறது இதற்கெல்லாம் போகும்.

இதெல்லாம் ஜீவான்மாவுடன் சேர்ந்தது. ஜீவ அணுக்கள் நாம் நுகர்ந்த பிற்பாடு ஜீவிக்கும் அணுக்களாக வருகின்றது. அதன் மலம் நம் உடலாகின்றது.

அதே சமயத்தில், ஜீவான்மாக்களாக இருப்பது அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டி, அது செய்யும் தவறுகளையெல்லாம் நம்மையும் செய்யத் தூண்டும்.

அப்படிச் செய்தோமென்றால், அது நுகர்ந்து மீண்டும் இரத்தத்திலே கலந்து நம் உடலிலுள்ள நல்ல அணுக்களை மாற்றி திசை திருப்பிவிடும்.

இதையெல்லாம் உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால், நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது, கருவிழி “ருக்மணி”, ஒருவர் படத்தைப் பதிவாக்கி விடுகின்றது.

அவர் செய்கின்ற தவறைக் கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு “சத்யபாமா” இழுத்து (கவர்ந்து) நம் ஆன்மாவாக மாற்றி உயிரிலே இணைக்கச் செய்துவிடுகின்றது.

ஆக, அவர் கஷ்டப்படுகின்றார், வேதனைப்படுகின்றார், தவறு செய்கின்றார், சாபமிடுகின்றார் என்று உண்மையைச் சொல்கின்றது. அதுதான் சத்யபாமா என்பது.

அவன் செயலின் உண்மையை நமக்குள் தெரிவிக்கின்றது. நுகர்ந்த உணர்வோ இரத்தத்திலே கலந்துவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை, இந்த உணர்வுகள் நம் இரத்தங்களிலே கலந்துவிடுகின்றது.

தெருவிலே சாக்கடை இருக்கின்றது. ரொம்பக் கஷ்டமென்றிருந்தால், அந்த சாக்கடை நாற்றத்தை இது சாப்பிடும்.

தியானத்தில் அதிகமாக இருக்கின்றவர்களுக்கு, இந்தச் சாக்கடை நாற்றமே தெரியாது. இந்த உணர்வின் தன்மை நம்மை நுகர்ந்துவிடாது தடுக்கும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, நாம் மனிதனாகப் பிறந்த பிற்பாடு, குருநாதர் காட்டிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் கொண்டு போகவேண்டும்.

ஆகவே, நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்து
நமக்கு நல்லது செய்யக்கூடிய நிலைகளாக
நாம் மாற்றிக் கொள்ள முடியும்.