ஆதியிலே பேரண்டத்தில் அது ஒன்றுமே இல்லாத சூனியப் பிரதேசம். பேரண்டம் முழுவதற்கும் இடமே இல்லை. வெறும் சூனியப் பிரதேசமாக இருந்த அந்த நிலைதான் ஆதிசக்தி.
அதற்குள் இனம்புரியாத பல ஆவியின் தன்மை,
அணுக்களே இல்லாதபடி பல ஆவிகள், பல கலவைகள் கொண்டிருக்கும்போது
ஒன்றுக்கொன்று எதிர்நிலை ஆகும்போது ஒன்றை ஒன்று போர் செய்கின்றது.
போருக்குள் ஒரு சக்தியின் தன்மை விளையும்போது, ஒன்றுக்குள் ஒன்று அமைந்து
கொள்கின்றது.
அதிலே எந்தெந்த மணத்திற்குள் எந்தெந்தத் தன்மை
விஷம் அதிகமாக இருக்கின்றதோ மற்றதைத் தனக்குள் கவர்ந்து
இந்த உணர்வின் சக்தியாக மாறி
பல அணுக்களின் தன்மையாகப்
பெறுகின்றது.
ஆதியிலே அதற்குள் வெளிச்சம் இல்லை இருள் தான்.
இவ்வாறு பல அணுக்களின் தன்மை மாறி அது ஒவ்வொரு சமயத்திலேயும் நமது பூமியின்
தன்மை எப்படி ஆவியாக இருந்து பலவாறாக மாறியதோ, இதே போன்றுதான் ஆதிசக்தியின் சொரூபம்
இப்படிப் பல சக்திகளாக மாறி அது வெளி வந்தது.
அவ்வாறு வெளிவந்த அந்த அணுக்கள், தோற்றுவித்த ஒரு அணுவின் தன்மை 1000 அணுக்களைத் தனக்குள் விழுங்கி, காந்தத்தை அதிகமாக பெற்ற அந்த அணு பல உணர்வின் சத்தைப் பெற்று,
பல 1000 அணுக்களை விழுங்கிய அணுக்களின் ஆற்றல்
விண்ணில் மிதந்து கொண்டிருந்தது,
இவ்வாறு, அங்கே அணுக்களின் ஆற்றல் பெருகிக்கொண்டிருந்தது.
அதிலே மற்ற அணுக்கள் வெப்பமும் மற்ற உணர்வுடன் மோதியவுடனே என்ன நடக்கின்றது?
உதாரணமாக, நாம் ஒரு பொருளைச் சூடாக்கும்போது,
வெப்பத்தைக் கண்டவுடனே ஒன்றுடன் ஒன்று மோதும்போது காற்றாகவும் ஆவியாகவும் போகின்றது.
வெப்பம் அதிகமாகியவுடன் ஒரு சத்தில் இருக்கும் மணம் எப்படி ஆவியாக மாறுகின்றதோ, இதைப்போலத்தான் பல வகையான அணுக்களுக்குள் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் அணுக்கள் மோதும்போது
அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்துக்கொண்டு
அதை உடனே ஆவியாக மாற்றி வெளிப்படுத்துகின்றது.
அவ்வாறு ஆவியாகப் போன சத்தின் எடையைத் தனக்குள்
சேர்த்துக் கொண்டாலும், இந்த ஆவியின் முயற்சி எதுவாகின்றது அவ்வாறு ஆவியாகப் படர
போகும்போதுதான் அது பல சத்துக்களுடன் சேர்த்து மேகங்களாக
மாறுகின்றது.
மேகங்களாக மாறும்போதுதான் அதனுடன் எதிர்நிலையான சத்துகள் மோதும்போது நீராக மாறுகின்றது. அவ்வாறு நீராக மாறும் அந்த சக்திதான்
அது பேரண்டத்தில் இடமில்லாது
அது நகரும் சக்தி பெற்றது.
ஆக, நீராக மாறும்போது ஓடும் தன்மை பெறுகின்றது. ஆக எடை
கூடி அந்த நீர் நகர்ந்து ஓடத் தொடங்குகின்றது.
அப்பொழுது, 1000 உணர்வுகளை விழுங்கி 1000 காந்தத்தின் சக்திகளை
வலுவாக கூட்டிக்கொண்ட வெப்பத்தின் ஒரு அணுவின் தன்மையும், பல 1000 சத்துக்களை
விழுங்கி பல 1000 மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பல அணுக்கள் தனித்து இயங்கினாலும்,
இந்த நீர் ஓடிவரும் நிலைகளில்
நீர் அவைகளைக் கவர்ந்து தனக்குள் கலக்கச்செய்கின்றது.
அது கலந்தபின் இந்த நீரான சத்து ஓடும்போது, ஒன்றுக்குள் கலந்து அதற்குள்
வெப்பத்தின் தன்மை கிடைக்கப்படும்போது, அது பேரண்டத்திலே மிதந்து
கொண்டிருக்கக்கூடிய காந்த அலைகளுடன் உராய்கின்றது.
அப்படி உராய்வதனால், அந்த நீரின் சக்தி வெப்பம் அதிகமாகி
நீருக்குள் அமைந்திருக்கக்கூடிய அணுக்கள்,
அது வெப்பத்தினால் தன் வளர்ச்சியின் தன்மை பெற்று,
ஓடும் பாதையிலே தனக்குள் சிக்கும் அனைத்தும் சேர்ந்து
அது ஒரு
திடப் பொருளாக மாறுகின்றது.
அவ்வாறு மாறுவதுதான் சக்தி. ஒரு திடப்பொருளாக மாறும்போதுதான் சிவம்.
கண்ணுக்குப்
புலப்படாத இந்த சக்தி ஒரு
பொருளாகச் சேர்க்கப்படும்போது சிவமாகின்றது.
இவ்வாறு சிவமான அந்த சக்திதான் அது திடப் பொருளாகும்போது பேரண்டத்திலே ஒன்றுமே
இல்லாத இடத்தில் ஒரு பொருள் அது இந்த எல்லையாகத்
தெரிகின்றது.
இங்கிருந்து சூரியனைப் பார்க்கப்படும்போது ஒரு எல்லையாகத் தெரிகின்றது. நட்சத்திரத்தைப்
பார்க்கப்படும்போது ஒரு எல்லையாகத் தெரிகின்றது.
அதே போன்று, கடல் நீருக்குள்
பார்த்தவுடனே தனியாக ஒரு திட்டாக இருந்தது என்றால், ஒரு திட்டான இடத்தை நாம்
பார்க்கின்றோம். அங்கேதான் நாம் தங்க முடியும்.
அதே மாதிரி பேரண்டத்தினுடைய நிலைகளில் பல அலைகளின் நிலைகள்
கொண்டு ஒரு திட்டான பொருளாக, எப்படி கடலுக்குள் நீருக்குள் எப்படி மிதக்கின்றதோ
அது திட்டாக இருக்கின்றதோ, இதைப்போலத்தான் பாற்கடலிலே பேரண்டத்திலே
பல உணர்வின் சத்துக்கள் கொண்ட
ஆவியான அவைகளுக்குள் அது பரம்பொருளாகின்றது.
அதாவது பரம் என்பது ஒரு எல்லை. பல சக்திகள் ஒன்று சேர்த்து பரமான நிலையாகும்
போது பரமசிவம் என்று ஞானிகள் பெயர் வைக்கின்றார்கள்.