கடவுள் என்று
தனி ஒருவன் இல்லை. கடவுளென்ற நிலையோ, நாம் கோயிலில் நம்மை காக்கின்ற தெய்வம்
என்ற நிலையோ இல்லை.
நமது உயிரை ஈசன் என்றும்,
இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்திற்கு விஷ்ணு என்றும்,
ஈர்க்கும் காந்தம் லட்சுமி,
நுகர்ந்த உணர்வு நம்முள் அணுவாக உருவானால்
பிரம்மம் என்றும்,
இது எந்த குணத்தின் தன்மையை தன்னுள் இணைத்ததோ
அது சக்தியாக இருப்பதை
பிரம்மனின் மனைவி சரஸ்வதி என்றும்,
நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின்
அது கருவுறும் நிலையில் உருவானால் “இந்திரீயம்”.
இந்த உடலுக்குள் சென்ற பின் இந்திரலோகம்,
உருவாகும் சக்தியாக இந்திரலோகத்திற்குள் சென்று
இந்த உணர்வின் சக்தி அணுவாக பெறப்படும்போது,
அதனின் மலம் உடலாகும் பொழுது சிவம்.
இந்த சிவத்திற்குள் இந்த உணர்வின் சத்தை சேர்க்கப்படும்போது,
அதற்குள் இருக்கும் அணுவின் தன்மை உருவாகுகின்றது.
இந்திரனாக மாறுகின்றது.
அதன் உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
அதன் ரூபத்தை மாற்றுகின்றது.
ஆக, கருவுறும் நிலைகளில் பிரம்மம். அதன் உணர்வின் தன்மை நுகரும் நிலைகள் அது
இந்திரியமாகும் போது, இந்திரன். இந்திரலோகம் என்று ஆகும் அந்த உணர்வின் அணுக்கள் எவ்வளவோ,
அந்தளவு மகிழ்ச்சி.
நாம் நமது உடல்கூறின் தன்மையை அறிந்து, நம்மை இயக்கும் உணர்வினை அறிந்து, இந்த உடலினுள் எதை வளர்க்கவேண்டும்? என்பதை
அறியவேண்டும்.
பலகோடிச் சரீரங்களைக் கடந்து, இன்று நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம். ஆகவே,
இந்த உடலில் இருந்து வெளிப்படும் மணம் “கார்த்திகேயா”. எதனையும் அறிந்திடும் சக்தி, அதாவது தீமை என்று
உணர்ந்தால், அது உட்புகாதபடி பாதுகாக்கும் நிலைகள் “சேனாதிபதி”.
ஆக தீமைகளை வென்றிடும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்தால், அதனின் உணர்வின் தன்மை நம்முள்
விளைந்தால், பகைமை என்ற உணர்வுகள் வராது.
உயிர் கொண்டு உணர்வினை ஒளியாக மாற்றி,
உணர்வின் ஒளியின் சரீரமாக மாறமுடியும் என்பதை
நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.