நமது வாழ்க்கையில், நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும்.
நாம் கூர்மையாக விண்ணை நோக்கிச் செலுத்தி, துருவ மகரிஷியின் உணர்வுகளைச் சுவாசிக்க
வேண்டும்.
அவனால் உருவான உணர்வின் தன்மை, இன்றும் ஒளிச்சுடராக வருகின்றது.
துருவ நட்சத்திரம் உங்களுக்குத்
தெளிவாகத் தெரியும் அதை நுகரப்படும்போது இளம் நீல நிறமான ஒளி
வீசும்.
விஷத்தின் தன்மை ஒடுங்கிய பின்,
அதன் உணர்வின் ஒளியாகத்தான் காட்டும்.
கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்றுதான் தெரியும்.
இதைப்போல, அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி நாம் ஒளியாக
மாற்றும் திறன் கொண்டவர்கள். ஆகையினாலே நாம் எதைப் பெற வேண்டுமென்றால், துருவ மகரிஷியின்
ஆற்றலை பெற வேண்டும் என்று ஏக்க உணர்வினை நமக்குள் செலுத்துதல் வேண்டும். அதை அதிகமாக
எடுத்தால், அதன் அவதாரமாக உயிர் ஒளியாக மாறும். இதில் ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை.
துருவ நட்சத்திரத்தின் நுகரும் ஆற்றலை, நமக்குள் அதிகரிக்கும் பொழுது, இன்றைய விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்து, மற்றவர்களையும் விடுபடச் செய்து, அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக மாற்றிடச் செய்யும், அந்த துருவ நட்சத்திரம்.
ஏனென்றால், துருவ நட்சத்திரத்தின் அருகில், இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது.
அதை அடக்கிவிடும்.
அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும்.
தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
இத்தகைய நிலை அந்த துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.
சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும், ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
அத்தகைய நிலையை நாமும் பெற்று, ஒவ்வொரு நொடியிலும், நம் சிந்தனைகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின்பால் இணைந்து, அந்த அருள் வட்டத்திலே வாழ்ந்திடும் சக்தியினை, நாம் உருவாக்குதல் வேண்டும். எமது அருளாசிகள்.