ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 3, 2013

நாம் எதைத் திருட வேண்டும்...?

இன்று சம்பாதித்து, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்.;.;? \\

எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே, திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அருள் ஞானமாகத்தான் இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு, நாம் எதைத் திருட வேண்டும்? தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.

அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் இந்தத் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது. நாம் திருடவேண்டியது எதை...? 

திருடன் என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது.
ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால்,
10 நாட்களுக்கு நம்மை இழுத்து
“வாட்டு வாட்டு” என்று வாட்டிவிடுவார்.
அந்த நிலையைச் செய்வார்.

இதைச் சொல்கிறோமென்றால், நீங்கள் எதைத் திருட வேண்டும். அருள் ஞானத்தைத் திருடிப் பதிய வைத்து, அதன்படி நடக்க வேண்டுமென்று அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

திருடியவன் என்ன செய்கின்றான்..? பொருளை எடுத்து அவன் சுகத்திற்கு அனுபவிக்கிறான். அதே போல்
அருள் ஞானத்தை நீங்கள் திருடினால்,
உங்கள் வாழ்க்கையில் வரும் "இருளை நீக்கி", மகிழ்ச்சி பெறும் உணர்வுகளுக்கு அது பயன்படும்.