இப்பொழுது விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?
மேலே உள்ள வேற்று கிரக பூமியில் என்ன இருக்கின்றது?
அந்த
பூமியில் என்ன இருக்கின்றது?
என்று ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்கள்.
உடலுடன் அங்கே போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று
நினைக்கின்றான், விஞ்ஞானி.
இயந்திரத்தில்
(ROCKET) கொண்டுபோய், அங்கே உயிர் போய் விட்டதென்றால், அந்த உடல் அழுகிப் போகின்றது. ஆகவே, பரவெளியில்
அந்த உடல், அங்கே செத்துப் போனால் என்னவாகும்? அந்த அணுதான் மிஞ்சும்.
இப்பொழுது, ஒவ்வொரு கோள்களிலேயும் இதே மாதிரி உயிர்கள் உண்டு,
அந்தக் கோள்களில் உள்ள உயிர்களால், அதற்குத் தகுந்த தாவரம் இல்லையென்றால் வளராது.
அங்கே
இருக்கின்ற கல் மண்ணில் இருக்கும் சத்தை எடுத்து, கல்லுக்குள் இருக்கும் ஒரு தேரை எப்படி ஆகாரம்
இல்லாமல், அந்தக் கல்லில் இருக்கின்ற சூட்டினால் வெப்பமாகி, அது கரைந்து, இதனுடைய மலம் பட்டு அது கரைந்து,
அதை எடுத்து ஆகரமாகச் சாப்பிட்டு கல்லுக்குள்ளேதான்
இருக்கின்றது.
ஆக, கல்லுக்குள் இருக்கும் தேரை மாதிரி, இவனுடைய உயிர் கல்லுக்குள்
அடங்கிப் போக வேண்டியதுதான்.
இந்த விஞ்ஞானி அங்கே போய்ப் பார்த்தாலும், அங்கே போய்ச் செத்தான் என்றால்,
அங்கே சொர்க்கம் போக முடியாது. அங்கே போய்,
காணாத நரகத்தில் தான் இருக்க முடியும்.
மனித
உடல் பெற்ற பிற்பாடு இந்த உணர்வின் தன்மை சுருங்கி, நாம் எப்படி
ஜெயிலில் போட்டால் தப்பித்துவிட்டு, வேதனைப்படுகிறோமோ, அதை எடுத்துக் கொண்டு, உணவாக எடுத்துக் கொண்டு, வேதனையுடன்தான் அங்கே உயிர் வாழ வேண்டும்.
ஆனால், இந்த உடலில் வரக்கூடிய இருளெல்லாம் மாற்றிவிட்டு,
உயிரை ஒளியாக மாற்றி, இன்றைக்கு சப்தரிஷி மண்டலங்களில்
இருக்கிறார்கள். யார்?
மெய் ஞானிகள். அந்த சப்தரிஷி மண்டல எல்லையைத் தான், நாம்
அனைவரும் அடைய வேண்டும்.
இதை எதற்குச் சொல்கிறேனென்றால்,
இதையெல்லாம் முதலில் நாம் தெரிந்து கொண்டோம் என்றால் போதும்.
நாம் எந்த வழியில் செல்ல வேண்டும்? என்ற ஞானம் தன்னாலே வரும். எமது அருளாசிகள்.