ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2013

பரமேஸ்வரன்

1. பரமேஸ்வரன்
நமக்குள் இருக்கக்கூடிய ஜீவனை, வெப்பத்தை ஈஸ்வரா என்கிறோம். இது சீவலிங்கம் என்பது, பூமி ஒரு எல்லையாக இருப்பதனால்,
பரத்துக்கு ஈஸ்வரா பரமேஸ்வரா,
அது பூமிக்கு வெப்பம்.

நம் பூமி வான்வீதியில் என்ன செய்கின்றது? சூரியனைப் பார்க்கும் பொழுது, ஒரு எல்லையாகத் தெரிகின்றது. மற்ற கோள்களைப் பார்க்கும் பொழுது, ஒரு எல்லையாகத் தெரிகின்றது நம் பூமியும் ஒரு எல்லை, ப்படி எல்லையாக இருப்பதை, பரம் என்று சொல்வது.

பரம் என்றால், ஒரு எல்லை என்று அர்த்தம். பரம் என்பது, இதற்குள்ளே உற்பத்தி செய்வது பரமேஸ்வரா, ஞானிகள் பெயர் வைத்துக் கொடுக்கிறார்கள்

நாம் பரமேஸ்வரனைக் கும்பிட்டால், அவன் நமக்கு வரம் தருவான் என்று தான் நம்மைக் கும்பிட வைத்திருக்கிறார்களே தவிர, யார் என்பதைத் தெளிவாக்கவே இல்லை.

அந்தப் பரமேஸ்வரன் யார்? இந்தக் காற்றில் வானவீதியிலிருந்து எடுத்து, கல், மண்ணாகி, மண்ணினுடைய நிலை ஆவியாகி, இந்தக் காந்த அலைகள் அது இழுத்து, அதை இழுத்து அது பரவிக்கொண்டே போகின்றது.

ஒன்றோடு ஒன்று சண்டை போடுகின்றது ஒன்றை ஒன்று விழுங்குகின்றது. ஒன்றுடன் ஒன்று கலக்கின்றது.

மோதும் பொழுதெல்லாம், சூடாகி சூடாகிக் கலந்து,
பல நிலைகளாகி, அது வெளியில் வந்த பிற்பாடு,
அது காளானாகி, செடியாகி, அதில் இருந்து ஆவியாக வருவது,
அது படர்ந்து, மற்ற காந்த அலையெல்லாம் எடுத்து, உயிரணுவாகி,  
அந்த உயிரணு செடிகளின் சத்தை எடுத்துச் சாப்பிட்டு,
அதாவது ஒலி ஒளியாக மாற்றுகின்றது.
இப்படித்தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

நம் பூமி பரமேஸ்வரா என்பது, இந்தப் பரத்துக்குள் எல்லாவற்றையும் உற்பத்தி செய்து, நைஸ் செய்து அனுப்புகின்றது. இதே சூரியனுடைய காந்த சக்திதான், அதற்குள்ளே கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இதற்குப்பெயர் பரமேஸ்வரா என்று சொல்கிறோம்.

நாம் யார்? நாம் எப்படி உருவாகி இருக்கின்றோம்? இயற்கையைக் கடவுளாக, நமக்கு யார் சொன்னது? அது எப்படியெல்லாம் நமக்குள் உருவாகுகின்றது?தையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
2. பூமியின் நடு மையத்தில் இருக்கும் வெப்பத்தின் உண்மை நிலைகள்
உதாரணமாக, ஒரு பானையில் வைத்து நாம் ஒரு சரக்கைப் போடுகிறோம் என்றால், தை வேக வைத்தவுடனே, போட்ட சரக்குக்குத் தகுந்த மாதிரி, அதனுடைய வாசனை இருக்கின்றது,

நாம் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதை நெருப்பை வைத்து சூடாக்கினால், “தத புதா.. தத புதா..” என்று  சப்தம் போட ஆரம்பித்துவிடுகின்றது. சூடு அதிகமாகிப் போனதென்றால், இருக்கின்ற சாமான் அத்தனையும் வெடிக்கச் செய்து, தூக்கி எறிந்துவிட்டுப் போகின்றது

நீங்கள் தண்ணீரை குக்கரில் உள்ளே வைத்து, அதிகமாக அந்த நெருப்பை வைத்திருந்தீர்கள் என்றால் ஏமாந்து போய் விட்டால் என்ன செய்யும்? மேலே அடைத்துவிட்டால், பாம் (BOMB) வெடித்த மாதிரி வெடித்து, நம்மைச் சுக்கு நூறாக்கிவிடும்.

அதே மாதிரிதான், நம் பூமி வானவீதியில் எடுத்துக்கொண்ட சக்தியெல்லாம் அது உருவாக்கி, நடு மையத்தில் வெப்பமானவுடனே தத புதா.. தத புதா…” என்று கொதித்துக் கொண்டே இருக்கின்றது.

அப்படிக் கொதிக்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக, சில பக்கங்களில் பூமி கீழே இறங்கும். சில பக்கம், அந்த கேஸ் (GAS) போகிற பக்கம் மலைகளாக உருவாகிக்கொண்டு வரும்கடல்களிலேயும் மலை உருவாகின்றது.
இதெல்லாம், நில நடுக்கங்கள் வருவது நிலமாற்றங்கள் ஏற்படுவது, ஒரு பக்கம் எரிமலை எப்படி வருகின்றதோ, நாம் எப்படி சாப்பிட்டுவிட்டுச் சில நேரம்  கக்குகின்றோமோ, எப்படி நீங்கள் குக்கரை வைத்து, கேஸ் ஒரு பக்கம் போனவுடனே, நிதானமாக அங்கிருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் வேக வைக்கின்றதோ, இதே மாதிரிதான் வானவீதியிலும் சுற்றும்பொழுது, ஒன்றோடு ஒன்று உராய்ந்து, அந்த வெப்ப அலைகள் பூமிக்குள் படுகின்றது.

பூமிக்குள் வந்த பிற்பாடு என்ன செய்கின்றது? அது எரிமலையாக வெடித்து, அதிகமாகச் சூடாக்குகின்றது. ஒரு பக்கம் கக்கிவிட்டு, சமமான நிலைகளிலிருந்து கொஞ்சம் போல வைத்து, இங்கிருக்கக்கூடிய கல் மண் எல்லாம் விளைய வைக்கின்றது.

அதில் இருந்து சூடாக்கச் செய்து, ஆவியாக மாற்றி, வெளியில் வருவதை வெளியிலிருந்து வரக்கூடிய காந்த அலைகள் எடுத்து, அது ஓடும் பொழுது சமமான சூடாகி, இவ்வளவு பக்குவமும் நடக்கின்றது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, ஒவ்வொரு பொருளாக உருவாக்குகின்றான். அன்றைக்கு மெய்ஞானி, இந்தப் பேருண்மைகளை எல்லாம் கண்டுபிடித்து, நாம் எப்படியெல்லாம் உருவானோம் என்று உணர்த்தினான்.

நமது குருநாதர் இதையெல்லாம் எம்மைக் காணும்படி செய்தார் அதைத்தான் யாம் உங்களுக்குச் சொல்லுகின்றோம்.