1. புகழ் பெறலாம் என்று, புகழாசையைக் கூட்டினால் என்ன செய்யும்?
புகழ்ச்சி
கண்டு நாம் ஏங்கினோம் என்றால், நமக்குள் அந்தப் புகழ்ச்சியின் மத்தியில் அவன் நம்மைக் கைவல்யம் பண்ணும் உணர்ச்சிகள் வரும்.
ஏனென்றால்
நமக்கு வேண்டிய நல்லவரைப் பொய்யனாக ஆக்குவான். உங்கள்
செயல்களை எல்லாம் போற்றுகிறேன் என்பான். போற்றுகிறேன்
என்று சொல்லிவிட்டு, நல்லவரைத் திருடனாக்கி விடுவான்.
ஆக, இவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருந்தவுடன், தப்பாகவே பண்ணுகிறான் என்ற உணர்வின் தன்மை எடுத்து, இவன்
இவனுக்குச் சாதகப்படுத்துகின்றான். இவனுடன் நல்லவனாக நடித்து, நல்லவனை விலக்கி விட்டுவிடுவான். அவனை இவனிடமிருந்து பிரிக்கும்போது, இவனுக்கு உதவி செய்யும் நிலைக்கு வருகின்றான்.
ஆக புகழ் கண்டு மயங்கினால் என்னவாகும். நமது குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார். “புகழ் கண்டு மயங்காதே புகழ்ந்துரைக்க எண்ணாதே”.
ஒருவரை நாம் புகழ்ந்துரைக்க எண்ணினால், அவருடைய தவறுகளை மீண்டும் உயர்த்தத்தான் உதவ முடியுமே தவிர, தவறைத் தவறு என்று சுட்டிக்காட்டும் தன்மைகள் அங்கே மறைந்து விடுகின்றது.
புகழாரம் பாடினால் என்னவாகும்? இதைக் கண்டு மயங்கினால் என்ன நிலை ஆகும் என்பதற்குத்தான்,
“புகழ் கண்டு மயங்காதே”
“புகழ் தேடிச் செல்லாதே”
“புகழாரம் பாடாதே”
இன்று மூன்று பதங்களும்
அதன் எதிர்மறையான உணர்வுகள் உன்னை எப்படி மாற்றும்? என்ற நிலைகளைச் சொல்லி, எமக்கு உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2. இகழ்ந்துரைக்கும்
உணர்வுகள் நம்மை எங்கே இட்டுச் செல்லும்?
“இன்னல் கண்டு கலங்காதே”
“இகழ்ச்சி கண்டு பதறாதே”
“இகழ்ந்துரைக்க எண்ணாதே”
ஒருவர் இகழ்ந்துரைக்கிறார், அதைக் கண்டவுடன், “இப்படி
ஆகிவிட்டதா?” என்று, நாம் செல்லும் பாதைகளுக்கு இது தடைப்படுத்துகின்றது.
அவன் கேவலமாகப் பேசுகிறான் என்ற உணர்வை எடுத்து, பதறினால்
என்ன செய்யும். அந்த
இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் விளையும். இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் வரும்போது, மற்றவர்களை இகழ்ந்துரைக்க எண்ண வைக்கும்.
அதன் வழியில் அவரை இகழ்ந்துரைக்க எண்ணினால், அந்த
இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் வளருகின்றது. இதே சொற்கள், அவரை
இகழ்ந்து பேசும் உணர்வுகள் வந்ததென்றால், அவருக்குள் பதிவாகி, பதில்
எனக்கே வரும். உயர்ந்த
எண்ணங்களைப் பதிவாக்கும் நிலைகள் அங்கே தடைபடும்.
அவர்கள் பெறாதவண்ணம் அங்கே தடைபடுகின்றது. அந்த உயர்ந்த நிலைகள், வளரும் நிலைகள் எனக்குள் தடைபடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆக,
தெளிந்து, தெரிந்து,
தெளிவான வாழ்க்கை நீங்கள் வாழ்ந்திடவும்,
மற்றவர்களைத் தெளிவாக்கும் அருள் ஞானம்
உங்களுக்குள் வளர்ந்திடவும் எமது அருளாசிகள்.