ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 3, 2013

எங்கிருந்து ஒளியான உயிர் தோன்றியதோ, அங்கேயே நாம் அனைவரும் செல்வோம்.

நாம் இந்த தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து, எங்கிருந்து ஒளியான உயிர் துடிப்பு தோன்றியதோ, அந்த விண்ணிற்கே செல்வோம்.

அங்கு சென்று, விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற்று
என்றும் பதினாறு என்ற நிலையை
அந்த நிலையான சரீரமாகப் பெற்று,
அந்தச் சரீரத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் கதிர்கள்
உலகத்திற்கு சிருஷ்டிக்கும் உணர்வின் ஆற்றல்களாக
பெருக வேண்டும் என்று தியானிப்போம்.
நாம் விண்ணின் தொடர்பு கொண்டு, ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற நினைவை நிலை நிறுத்திக் கொள்வோம்.

புவியின் வாழ்க்கையின் தன்மையிலே வரக்கூடிய விருப்பு, வெறுப்பு ஆசை, பாசம், இவைகளை அனைத்தையும் அழித்து, நாம் செய்ய வேண்டியது நல்லது என்ற நிலையும், அந்த நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, நாம் விண் செல்வோம்.

இந்த வழிகளிலே, ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம் என்று 
உறுதிப்படுத்திக் கொள்வோம்.
ஒவ்வொருவரும் இதில் முன்னெற்றம் பெறவேண்டும், 
பயன்கள் பெறவேண்டும், 
ஒளிச் சரீரம் பெறவேண்டும்

அதற்குண்டான ஆற்றல் உங்களுக்குள் வளரவேண்டும். அந்த ஆற்றலின் நிலை கொண்டு, உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்களை உங்கள் உணர்வாலே நீக்கி, அந்த மெய் ஒளியின் நிலைகள் உங்களுக்குள் பெருக வேண்டும்.

அது உங்களுக்குள் பெருக வேண்டும் என்பதற்காக,
எல்லா மகரிஷிகளையும், நமது குருநாதரையும் வேண்டி,
குருநாதருடைய அருள் ஒளியில், அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகள் உங்களுக்குள் பெறவேண்டும் என்று, யாம் பிரார்த்திக்கின்றோம்.