1. விஷத்தை
அடக்கியபின் ஞானத்தின் தெளிவு வருகின்றது
27 நட்சத்திரங்களின்
கதிரியக்கப்பொறிகள்,
மற்ற கோள்களில்
கலந்து, அந்த உணர்வுகள் வித்தாகி,
அந்த உணர்வின்
தன்மையால் கலவையின் நிலைகள் கொண்டு
உணர்வின்
உணர்ச்சிகள் தூண்டப்பட்டு,
இவையின் ரூபம்
அதற்குள் உள்ளடங்கி எப்படி உருவாகின்றது?
என்ற நிலையை, அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.
பல தாவர இனத்தின்
மணங்களை நுகரப்படும்பொழுது, அது நமக்குள் எத்தகைய செயலை
செயல்படுத்துகின்றது என்றும், அதன் உணர்வுகள் எப்படி அறிவாக உருவாகிறது என்று அறிந்தார் அகஸ்தியர்.
விஷத்தை அடக்கியபின், ஞானத்தின் தெளிவு எப்படி
வருகிறது என்றும், தாவர இனத்தில்
கலந்த நிலைகள் விஷத்தன்மைகளை அடக்கி, அறிவின் தெளிவை எப்படிக் கொண்டு வருகின்றது என்பதையும்
அறிந்துணர்ந்தார்.
2. சொல் வடிவும், எழுத்து வடிவும், முதன் முதலில் கொண்டுவந்தவர் அகஸ்தியரே
அகஸ்தியர் உண்மையின்
உணர்வை அறியும் பருவத்தில், சொல் வடிவில் மற்றவர்களுக்கு உண்மையின்
தன்மைகளைச் சொல்லும் நிலை
வருகின்றது.
மனிதனை “கூ” என்று கூவி அழைக்கும் காலத்தில்,
உணர்வின் இயக்கங்களை
சொல் வடிவிலும், எழுத்து வடிவிலும்,
முதன்முதலில்
கொண்டு வந்தவர் அகஸ்தியரே.
ஒலியை இசையாகவும், ஒலிகள் ஒன்றுடன்
ஒன்று மோதும்போது, சுருதிகள் நாதமாவதை அறிந்தும், “ஒலிகொண்டு ஒளியை
எழுப்பி”, ஒலியின் அறிவாக இயக்கக்கூடிய தன்மையையும் முதன்முதல்
கண்டுணர்ந்தவர் அகஸ்தியரே.
3. எல்லாவற்றையும் வென்றிடும் ஆற்றலை அகஸ்தியர்
எப்படிப் பெற்றார்?
யாம் உபதேசித்து
வரும் பேருண்மையின் தன்மைகளை, தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும். நட்சத்திரங்களிலிருந்தும், பிற
மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் நிலைகள், ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்நிலையாகும் பொழுது, மின் கற்றைகளாக, மின்னலாகச் சிதறி, சீறிப் பாய்கின்றது.
இதனைக் கோள்கள் கவர்கின்றன, அணுத் துகள்களிலும் இணைகின்றன. இணைந்த நட்சத்திரக் கற்றைகள் எவையோ, அவை அணுக்களாக
மாறியபின் மாற்றுகுணம் கொண்ட அணுக்களுடன் மோதல் நிலை உண்டாகின்றது.
இதன் தொடர்கொண்டு, பல இயக்க நிலைகள் மாறுகின்றன.
உணர்வுகள் மாறுகின்றன;
ஓசைகள் மாறுகின்றன;
இசைகள் மாறுகின்றன;
ரூபங்கள் மாறுகின்றன.
இதுபோன்று ஆனபின், கடல்வாழ் நிலை, புயலில் சிக்கி
தரைவாழ் நிலையாக மாறுகின்றன. இதன் தொடர்கொண்டு, தரையில் தாவர இனங்கள் உருப்பெறுகின்றது. தாவர
இனங்களில் உயிரணு பட்டபின் புழுக்களாக மாறுகின்றது.
அதன் வளர்ச்சியில்
ஒன்றையொன்று விழுங்கி பலகோடிச் சரீரங்களைக் கடந்து இன்று எப்படி மனிதனாக உருவானோம் என்று
அறிந்துணர்ந்தார் அகஸ்தியர். அதனால் தான் அவருக்கு “அகஸ்தியர்” என்ற பெயர் வைத்தது.
எல்லாவற்றையும் வென்றிடும், அடக்கிடும்,
இயக்கிடும் ஆற்றல் கொண்ட
நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை
அவர் தம்முள் வளர்த்து,
அதிபதியாக்கிக் கொண்டார்.
நட்சத்திரங்களின் கதிரியக்க மின்னல்களை தமக்குள் அடக்கிடும்
உணர்வின் தன்மை வரும்போது, அகஸ்தியர்
எதையும் வென்றிடும் தன்மையைப் பெற்றார்.