நம்மை ஒருவர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், நீங்கள் எந்த நன்மை செய்தாலும், அது வீண்தான்.
எதிர்பாராது நன்மைகள் பல செய்தோம் என்றால்,
அது நம்மையும் பாதிக்காது.
நமக்குள் செய்த நன்மையின் தன்மை
நமக்கு உயர்ந்த உணர்வைக் கொடுக்கும்.
ஒருவருக்கு
உதவி செய்துவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், “நான் இத்தனை செய்தேன், அவர்
என்ன செய்தார்?” என்ற
நிலைகளை முன்வைத்தால் உதவி செய்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆக, நாம்
செய்தும் பலனற்றுப் போய்விடுகின்றது.
அவரும் பெறமுடியவில்லை. இரண்டு பக்கமும் பலன் இரண்டு பேருக்கும் இல்லாமல் போய்விடுகின்றது. இதைப் போன்று நம் வாழ்க்கையில் எதைச் சீர்படுத்த வேண்டும். எதனைப்
பெறவேண்டும் என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, ஒருவரிடம் எதிர்பார்த்து ஒன்றைச் செய்வது. எப்படியும்
அவருடைய நிலைகளைப் புகழ்ந்து எண்ணவேண்டுமென்றால், குறைகள் நிச்சயம் வந்தே தீரும்.
அந்த எதிர்பார்ப்பு இல்லாதபடி, உயர வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது உயரும்.
இதைத்தான்
நாம் யாருக்குச் செய்தாலும்,
அந்த குரு அருள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அவருக்குள்
இருக்கும் நோய்கள் நீங்கவேண்டும்.
மெய்ப்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும்.
என்ற இந்த எண்ணத்தை நமக்குள் வளர்த்தால்
அந்த உணர்வு நமக்குள் விளையும்.
விளைந்த உணர்வின் சொல்லாக அது பாயும்.
ஆக, எந்தச் செடியின் சத்தை நாம் நுகர்கின்றோமோ, அந்தச் செடியின் உணர்ச்சியின் தன்மைதான் நம்மை இயக்கும். ஆகவே, நாம் எந்த குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ, அதன் செயலாகத்தான் இருக்கும்.
இதனால்தான், அடிக்கடி நாம் திருட வேண்டியது எது என்றால், “அருள்ஞானம்”. அதைச் செலவழிக்க வேண்டுமென்றால், அருள் சொற்களைத்தான் சொல்ல வைக்கும். அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.
எமது அருளாசிகள்.