இதைப்போலத்தான் நமது
வாழ்க்கையில் எத்தனையோ விதமான வெறுப்பு உணர்வுகளை, நாம் நுகர நேருகின்றது. அந்தக் கண்களால், நாம்
பதிவாக்கித்தான் நாம் நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வால் நாம் அறிகின்றோம்.
அந்த உணர்வுகள அனைத்தும் நம் இரத்தத்தில்
கலந்து, நம் இரத்தமே
மாசுபடும் நிலைகள் கொண்டு, மாசுபடும் இரத்தங்கள் நம் உடல் முழுவதும் படரப்படும்பொழுது, நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி, கடும் நோயாகி, நம்
உறுப்புகளில் நோய்கள் உருவாகிவிடுகின்றது.
இதைப்போன்ற நிலைகளை நாம்
தடுப்பதற்குத்தான், அகஸ்தியன்
துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து
வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி, நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.
அப்படி வைக்கப்படும்பொழுது, நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும், அந்த வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம்
போன்ற உணர்வுகள், நம்
உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும்.
நம் கண்ணின் நினைவினை ஒவ்வொரு
உறுப்புகளுக்கும் உருவாக்கிய அணுக்களுக்கு, இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது, அது வீரியமடைந்து, இந்த இரத்தங்களில் இருந்து வரும் விஷத்தன்மைகளை, அது ஏற்காது அது கழித்துவிடும்.
பின், அது அந்த விஷத்தின் தன்மைகளை வடிகட்டும், கிட்னிக்குள் இந்த “துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற
வேண்டும்” என்று வீரிய சக்தி
உண்டாக்க வேண்டும்.
அப்படி உண்டாக்கப்படும்பொழுது, எப்படி அகஸ்தியன், அவன் துருவனாகும் பொழுது விஷத்தின் தன்மை நீக்கி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ, அத்தகைய வலுவான நிலைகள்
இந்த கிட்னிக்குள், விஷத்தின் தன்மை வடிகட்டி,
நல்ல இரத்தங்களாக உருவாக்கி,
நம் இருதயத்தைச் சீராக இயக்கி,
இந்த இருதயத்திலிருந்து மூளை
பாகம் செல்லும்
இந்த இரத்தங்களைப்
பரிசுத்தமாக்கி,
நமக்குள் நல்ல இயக்கமும்,
நல்ல நினைவும்
உருவாக்குகின்றது.
இவ்வாறு, அந்த “துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்” நமக்குள் இருளை நீக்கி ஒளி பெறும் தன்மையாக, நமது அறிவாக இயக்கி, இந்த வாழ்க்கையில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, அதைப்
பற்றுடன் பற்றி, எந்த நிமிடம்
எந்த நேரம் வந்தாலும், நமக்குள்
சலிப்போ, சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ, கோபமோ இந்த உணர்ச்சிகள் வரும்பொழுதெல்லாம் இந்த முறைப்படி, “ஈஸ்வரா: என்று உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில்
உயிரின்பால் செலுத்தி, உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற
வேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால், அங்கே தீமைகள்
புகாது தடுக்கப்படுகின்றது.
பின், அதே கண்ணின் நினைவினை, ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும்
செலுத்தப்படும் பொழுது, அது வீரியத்தன்மை அடைந்து விடுகின்றது.
பின் எல்லா உறுப்புகளுக்கும்
அது செலுத்தப்படும் பொழுது,
நாம் அறியாது நுகர்ந்த வேதனை
என்ற உணர்வுகளை,
அது இரத்தத்தில் கலந்தாலும்,
இதைப்போல கிட்னி அது சுத்தப்படுத்தி,
நல்ல உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்கின்றது.
அதே
போன்று, எல்லா அணுக்களிலும் “துருவ நட்சத்திரத்தின்” உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது, அதை உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஏற்காது, அதை நீக்குகின்றது.
இப்படி
ஒதுக்கும்போது, நமது வாழ்க்கையில் நோய்
வராததும், மன வலிமையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும், அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.