ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2015

மனிதனில் விளைந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகளின் செயல் எப்படிப்பட்டது?

நம் மனித வாழ்க்கையில் நாம் பிறரைப் புகழ்ந்து பேசலாம். நான் தவறே செய்யவில்லை நன்மைதான் செய்கின்றேன் என்று சொன்னாலும்
மறைமுகமாக எதிரிக்குப் பல துன்பங்களைக் கொடுத்து
அவனை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுகள் வளருகின்றது.

அந்த வீழ்த்திடும் உணர்வுகள் நமக்குள் வளரப்படும்பொழுது அதற்கு ஆதாரமாக அவருடன் அணுகிப் பழகுவோரிடம் எல்லாம் அவரைப் பற்றித் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர் செய்வது தவறு என்று சொன்னாலும் அவர் அதைப் பகையாக எடுப்பார்.

காரணம் அவர் சொல்வதை நியாயம் என்று ஏற்றுக்கொள்வதில்லை. அவருக்கு நல்வழி காட்டினாலும் அவர் அதைப் பகையாக எடுத்துக் கொள்வார்.

அந்தப் பகைமை உணர்வை எடுத்துக் கொண்டபின் நல்லது சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத நிலைகளே உருவாகும். அந்த நிலைகளில் அவருடைய எண்ணமே அவருக்கு எதிரியாக வேலை செய்யும் உணர்வை உருவாக்கிவிடுகின்றது.

அவ்வாறு உருவாக்கிவிட்டால் அவர் எனக்கு இப்படி தொல்லைகள் கொடுக்கின்றார் என்ற எண்ணத்தை வளர்த்து விடுகின்றனர்.

அந்த வளர்ச்சியின் தன்மை அடைந்துவிட்டாலோ வெறுப்பு, வேதனை, கொதிப்பு போன்ற உணர்வுகள் வரும்பொழுது அது சம்மந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றது.

அந்த உணர்வின் அணுக்கள் பெருக்கமாகும் பொழுது அவருக்குள் மற்றோரைக் கொதிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அது அவருக்குள்ளேயே முதலில் விளைகின்றது.

ஒரு செடியில் வித்தின் தன்மை வந்தால்தான்
மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்யும்.

மனிதனில் பிறருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் அது முழுமையான நிலைகளில் உருவாக்கப்படும்பொழுது வித்தாகின்றது. முதலில் அவர் உடலுக்குள் தீங்கு செய்யும் நிலையே உருவாகின்றது.

பின் அவர் சொல்லின் தன்மையை பாய்ச்சப்படும் பொழுது யார் உடலில் விளைகின்றதோ அவருடைய எண்ணத்தை,
இப்படிச் செய்கின்றாரே என்று சொல்லப்படும்போது
இந்த உணர்வும் அங்கு வித்தாக விளைகின்றது.

ஒரு மரத்தில் விளைந்த சத்து சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்படும்பொழுது தன் மரத்தில் விளைந்ததை வித்திற்கு உணவாகக் கொடுக்கின்றது. அதைப் போன்று
மனிதனில் விளைந்த
தீமையை விளைய வைக்கும் உணர்வுகள்
இன்னொரு உடலில் விளைந்தால்
அந்த உயிரணு தனக்குள் அந்த உணர்வை உணவாக எடுத்து
அங்கும் தீமையை விளைய வைக்கும் நிலையே விளைகின்றது.

முதலில் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ண உணர்வு உள்ளவர்கள் உடலிலும் தீமையின் வளர்ச்சி பெறுகின்றது. அவரால் வெளிப்படும் உணர்வுகள் இந்த பூமியில் பரமாத்வாகப் படரும்பொழுது அதை யார் மேல் பாய்ச்சினரோ அவருக்குள் வித்தாக இருந்து விளைகின்றது.

ஆகவே, அவர் உடலில் விளைந்த உணர்வுக்கு ஊட்டச் சத்தாக இவர் உடலிலும் விளைந்து
இவர் மரணமடைந்தால் அவர் உடலுக்குள் செல்லுகின்றார்.
அவர் முந்தி மரணமடைந்தால் அவர் உடலுக்குள் செல்லுகின்றார்.

ஏனென்றால், எந்த உணர்வின் வளர்ச்சி இங்கு வருகின்றதோ இப்படித்தான் மாறி தீய உணர்வினை நுகர்ந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும் நிலையை இழக்கின்றார்கள்.

February 5, 2015

இன்று உலகம் முழுவதும் ஒருவருக்கொருவர் அழிக்கும் உணர்வுகள் ஏன் வளர்கின்றது?

அரசர்கள் வகுத்துக் கொடுத்த நிலைகள் தான் மதங்கள். அதை மனிதர்கள் உடலில் விளையச் செய்து, அதன் வழிகளில் அரசர்கள் தனக்குப் பாதுகாப்பாகவும், தான் வகுத்துக்கொடுத்த நல்ல ஒழுக்கங்களை மக்கள் கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினர்.

மக்கள் அவர் கொடுத்த நிலைகளைக் கடைப்பிடிக்காது தவறு செய்தால் ஆண்டவன் பெயரால் தண்டனை என்ற நிலைகளில் தண்டனைகளைக் கொடுக்கின்றார்கள்.

ஆண்டவனின் கட்டளைப்படி இது தண்டனை என்று எல்லா மதங்களிலும் இதுதான் காட்டப்படுகின்றது.

இந்த வழிகளில் அரசர்கள் வளர்ந்தாலும், ஒவ்வொரு அரசருக்கும் அக்காலங்களில் இரண்டு மனைவி மூன்று மனைவி என்று இருக்கும். அதில் முதல் மனைவியின் மூத்த மகனுக்கே ஆட்சி புரியும் அரச உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றி உள்ளார்கள்.

அந்தச் சட்டப்படி செயல்பட்டாலும் மற்ற மனைவிகளும் தன் மகன் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்று அரசனை அணுகும் பொழுது
மற்ற மனைவிகளின் மகன்கள் மேல் குற்றங்களைச் சுமத்துவதும்,
அவர்கள் மேல் தவறுகளை ஊட்டுவதும்
ஆகிய இந்த நிலை உருவாகின்றது.

இதைப்போல அரச நியதிகளில் அவர்கள் வகுத்த சட்டம் அந்த அரசனுக்குப்பின் மாறுபடுகின்றது.

அரசனின் மக்களுக்குள் பகைமை உருவாகி, அதே கடவுளின் தன்மையை அந்த மதத்தின் ஓர் பிரிவாக மாற்றி அந்த அரசனையே எதிர்க்கும் நிலை உருவாகின்றது.

அந்த அரசன் மூத்த மகனுக்கு முடிசூட முடியாத நிலைகளில் போர்முறைகளை வகுத்து பகைமை உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஒரே மதமாக இருந்தாலும் தன்னுடைய மக்களின் நிலைகளில் இப்படித்தான் பிரிவுகள் உருவாகின்றது. ஆக, மதங்களுக்குள் இனங்கள் பிரிக்கப்பட்டு விடுகின்றது.

இதனால், இனப்போர் என்ற நிலைகளும் தனக்குக் கடவுள் ஒன்றிருந்தாலும் தன் மக்களின் நிலைகள் வரும்பொழுது இனங்களாகப் பிரிக்கப்பட்டு இனப்போர் என்ற நிலைகளில் மாறுகின்றது.

இருப்பினும், அரசனால் உருவாக்கப்பட்ட இந்த நியதிகள் அந்த அரசன் இருக்கும் வரையிலும்தான் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் கடவுளாக இருக்கின்றது,

பின்பு காலப்போக்கில் அது மறைந்து பகைமை உருவாகி மக்கள் மத்தியில பகைமை உணர்வுகளைத் தோன்றச் செய்கின்றது. அவ்வாறு வளர்ந்த அந்த உணர்வுகள் ஒருவருக்கொருவர் அழிக்கும் உணர்வுகளாக வளர்கின்றது.

ஆனால், இவர்கள் வகுத்துக் கொண்ட இந்தக் கடவுள்
அவர்களையும் காப்பதில்லை.
இந்த உலகத்தையும் காப்பதில்லை.

ஆக, அவர்கள் எந்தெந்த எண்ணத்தை எண்ணி சட்டரீதியாக உருவாக்குகின்றார்களோ, அவை அனைத்தையும் அவர்கள் உயிர் பதிவு செய்கின்றது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் பொழுது பதிந்ததை ஆண்டு கொண்டிருக்கின்றது அவர்கள் உயிர். எந்த எண்ணங்களின் உணர்வின் தன்மை அணுவாக உருப்பெறுகின்றதோ, அந்த உணர்வின் ஆற்றல் பெருகப் பெருக அவருக்குள் அந்த வலுவே பெருகுகின்றது,

அவர்கள் தன்னைப் பாதுகாக்க சட்டத்தை இயக்கி மற்றவர்களுக்குத் தண்டனை கொடுப்பதும், தண்டனையில் அவர்கள் மரணமடையும் பொழுது
யார் தண்டனை கொடுத்தார்களோ
அவர் மேல் இந்த உணர்வைச் செலுத்தி
இந்த ஆன்மா அவர் உடலுக்குள் செல்லுகின்றது.

அவ்வாறு அந்த உடலுக்குள் சென்று அந்த உடலுக்குத் தண்டனை கொடுக்கின்றது.

இந்த ஆன்மா உடலைவிட்டுச் சென்றபின் அரச வம்சத்தில் யார் இதைச் செய்தார்களோ அவர் உடலுக்குள் சென்று உள் நின்று செயல்படுத்துகின்றது.

February 4, 2015

கண்ணுக்குப் புலப்படாத சக்தி கண்ணுக்குப் புலப்படும் பொருளாக உருவாகின்றது - பரம்பொருள்

ஆதியிலே பேரண்டத்தில் அது ஒன்றுமே இல்லாத சூனியப் பிரதேசம். பேரண்டம் முழுவதற்கும் இடமே இல்லை. வெறும் சூனியப் பிரதேசமாக இருந்த அந்த நிலைதான் ஆதிசக்தி.

அதற்குள் இனம்புரியாத பல ஆவியின் தன்மை,  அணுக்களே இல்லாதபடி பல ஆவிகள், பல கலவைகள் கொண்டிருக்கும்போது ஒன்றுக்கொன்று எதிர்நிலை ஆகும்போது ஒன்றை ஒன்று போர் செய்கின்றது.

போருக்குள் ஒரு சக்தியின் தன்மை விளையும்போது, ஒன்றுக்குள் ஒன்று அமைந்து கொள்கின்றது.

அதிலே எந்தெந்த மணத்திற்குள் எந்தெந்தத் தன்மை
விஷம் அதிகமாக இருக்கின்றதோ மற்றதைத் தனக்குள் கவர்ந்து
இந்த உணர்வின் சக்தியாக மாறி
பல அணுக்களின் தன்மையாகப் பெறுகின்றது.

ஆதியிலே அதற்குள் வெளிச்சம் இல்லை இருள் தான்.

இவ்வாறு பல அணுக்களின் தன்மை மாறி அது ஒவ்வொரு சமயத்திலேயும் நமது பூமியின் தன்மை எப்படி ஆவியாக இருந்து பலவாறாக மாறியதோ, இதே போன்றுதான் ஆதிசக்தியின் சொரூபம் இப்படிப் பல சக்திகளாக மாறி அது வெளி வந்தது.

அவ்வாறு வெளிவந்த அந்த அணுக்கள், தோற்றுவித்த ஒரு அணுவின் தன்மை 1000 அணுக்களைத் தனக்குள் விழுங்கி, காந்தத்தை அதிகமாக பெற்ற அந்த அணு பல உணர்வின் சத்தைப் பெற்று,
பல 1000 அணுக்களை விழுங்கிய அணுக்களின் ஆற்றல்
விண்ணில் மிதந்து கொண்டிருந்து,
இவ்வாறு, அங்கே அணுக்களின் ஆற்றல் பெருகிக்கொண்டிருந்தது.

அதிலே மற்ற அணுக்கள் வெப்பமும் மற்ற உணர்வுடன் மோதியவுடனே என்ன நடக்கின்றது?

உதாரணமாக, நாம் ஒரு பொருளைச் சூடாக்கும்போது, வெப்பத்தைக் கண்டவுடனே ஒன்றுடன் ஒன்று மோதும்போது காற்றாகவும் ஆவியாகவும் போகின்றது.

வெப்பம் அதிகமாகியவுடன் ஒரு சத்தில் இருக்கும் மணம் எப்படி ஆவியாக மாறுகின்றதோ, இதைப்போலத்தான் பல வகையான அணுக்களுக்குள் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் அணுக்கள் மோதும்போது
அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்துக்கொண்டு
அதை உடனே ஆவியாக மாற்றி வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறு ஆவியாகப் போன சத்தின் எடையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டாலும், இந்த ஆவியின் முயற்சி எதுவாகின்றது அவ்வாறு ஆவியாகப் படர போகும்போதுதான் அது பல சத்துக்களுடன் சேர்த்து மேகங்களாக மாறுகின்றது.

மேகங்களாக மாறும்போதுதான் அதனுடன் எதிர்நிலையான சத்துகள் மோதும்போது நீராக மாறுகின்றது. அவ்வாறு நீராக மாறும் அந்த சக்திதான் அது பேரண்டத்தில் இடமில்லாது அது நகரும் சக்தி பெற்றது.

ஆக, நீராக மாறும்போது ஓடும் தன்மை பெறுகின்றது. ஆக எடை கூடி அந்த நீர் நகர்ந்து ஓடத் தொடங்குகின்றது.

அப்பொழுது, 1000 உணர்வுகளை விழுங்கி 1000 காந்தத்தின் சக்திகளை வலுவாக கூட்டிக்கொண்ட வெப்பத்தின் ஒரு அணுவின் தன்மையும், பல 1000 சத்துக்களை விழுங்கி பல 1000 மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பல அணுக்கள் தனித்து இயங்கினாலும்,
இந்த நீர் ஓடிவரும் நிலைகளில்
நீர் அவைகளைக் கவர்ந்து தனக்குள் கலக்கச்செய்கின்றது.

அது கலந்தபின் இந்த நீரான சத்து ஓடும்போது, ஒன்றுக்குள் கலந்து அதற்குள் வெப்பத்தின் தன்மை கிடைக்கப்படும்போது, அது பேரண்டத்திலே மிதந்து கொண்டிருக்கக்கூடிய காந்த அலைகளுடன் உராய்கின்றது.

அப்படி உராய்வதனால், அந்த நீரின் சக்தி வெப்பம் அதிகமாகி
நீருக்குள் அமைந்திருக்கக்கூடிய அணுக்கள்,
அது வெப்பத்தினால் தன் வளர்ச்சியின் தன்மை பெற்று,
ஓடும் பாதையிலே தனக்குள் சிக்கும் அனைத்தும் சேர்ந்து
அது ஒரு திடப் பொருளாக மாறுகின்றது.

அவ்வாறு மாறுவதுதான் சக்தி. ஒரு திடப்பொருளாக மாறும்போதுதான் சிவம்.

கண்ணுக்குப் புலப்படாத இந்த சக்தி ஒரு பொருளாகச் சேர்க்கப்படும்போது சிவமாகின்றது.

இவ்வாறு சிவமான அந்த சக்திதான் அது திடப் பொருளாகும்போது பேரண்டத்திலே ஒன்றுமே ல்லாத இடத்தில் ஒரு பொருள் அது இந்த எல்லையாகத் தெரிகின்றது.

இங்கிருந்து சூரியனைப் பார்க்கப்படும்போது ஒரு எல்லையாகத் தெரிகின்றது. நட்சத்திரத்தைப் பார்க்கப்படும்போது ஒரு எல்லையாகத் தெரிகின்றது.

அதே போன்று, கடல் நீருக்குள் பார்த்தவுடனே தனியாக ஒரு திட்டாக இருந்தது என்றால், ஒரு திட்டான இடத்தை நாம் பார்க்கின்றோம். அங்கேதான் நாம் தங்க முடியும்.

தே மாதிரி பேரண்டத்தினுடைய நிலைகளில் பல அலைகளின் நிலைகள் கொண்டு ஒரு திட்டான பொருளாக, எப்படி கடலுக்குள் நீருக்குள் எப்படி மிதக்கின்றதோ அது திட்டாக இருக்கின்றதோ, இதைப்போலத்தான் பாற்கடலிலே பேரண்டத்திலே
பல உணர்வின் சத்துக்கள் கொண்ட
ஆவியான அவைகளுக்குள் அது பரம்பொருளாகின்றது.

அதாவது பரம் என்பது ஒரு எல்லை. பல சக்திகள் ஒன்று சேர்த்து பரமான நிலையாகும் போது பரமசிவம் என்று ஞானிகள் பெயர் வைக்கின்றார்கள்.

February 3, 2015

காளானின் தோற்றமும், செடி கொடிகளின் தோற்றமும்

சூரியனிலிருந்து வரும் வெப்பகாந்தங்கள் ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து செல்கின்றது அது வேகமாகச் செல்லும்போது, வேப்ப மரத்திலிருந்து வரும் கசப்பான மணம் அதுவும் வெப்பகாந்தம்தான், அது இரண்டும் மோதியவுடன் இரண்டிலும் இருக்கக்கூடிய வெப்பமும் காந்தமும் ஒன்று சேர்ந்துவிடுகின்றது.

ஆனால் ரோஜாப்பூவின் மணமோ, கசப்பின் மணமோ ஒன்று சேர்க்கப்படும்போது குணத்தின் சிறப்பு மாறுகின்றது.

அதே மாதிரி, பூமிக்குள் கல்லில் இருந்து பல ஆவிகள் வெளிவருகின்றது. அதே சமயம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்ப காந்தம் தாக்கித்தான் இந்த வெப்பம் உருபெறுகின்றது.

அந்த வெப்பத்தினால் சூடாகி வெளியிலே வரப்படப்போகும்போது பல பாறைகள், மண்ணுக்குள் உள்ள பல சத்துக்களை வெளிவரக்கூடிய காந்த சக்திகள் அதைக் கவர்ந்து கொள்கின்றது.

ப்பொழுது செடி கொடிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு காந்தமும் வரிசையிலே ஒன்றுடன் ஒன்று மோதியவுடனே, இந்தக் காந்தமும் வெப்பமும் ஒன்று சேர்ந்துகொள்கின்றது.

ஆனால் பல சத்தின் நிலைகள் ஒன்றாகக் கலக்கப்படும்போது உணர்வின் சத்தினுடைய நிறங்கள், குணங்கள், செயல்கள் எல்லாம் மாறாது.

ஆக, பத்து அணுக்கள் சேர்ந்த அந்த காந்தமும், வெப்பமும், ஈர்ப்பு சக்தி கூடி காந்தம் அதிகமாகின்றது. பத்து வெப்ப அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும்போது வெப்பத்தை அதிகமாக்கும் சக்தி அந்த அணுவுக்கு உண்டு.

இதே மாதிரி ஒரு 1000 அணுக்களில் மோதி
அது ஒன்று சேர்க்கப்படும்போது
1000 விதமான உணர்வுகள் சேர்க்கப்படும்போது அந்த உணர்வுகள் வேறு கலவையாக மாறுகின்றது.

ஆற்றல்மிக்க நிலையாக ந்த காந்தசக்தி காற்றிலே தன் இனத்தைக் கவர்ந்து இழுக்ககூடிய நிலைகள் வருகின்றது. வேப்பமரம் பல நூறு உணர்வின் சத்தை மாற்றித்தான் கசப்பின் தன்மையை அடைகின்றது.

ஆனால், அந்தக் கசப்பின் தன்மை கொண்ட அந்த அணுவின் தன்மை - வெப்பத்தை ஈர்க்கும் அதே உணர்வின் ஆற்றலாகப் பெருக்குகின்றது.

அப்போது அது வெளிப்படுத்தும்போது அந்தக் கசப்பின் தன்மை எங்கிருந்தாலும்
தனக்குள் எத்தனை, எத்தனை உணர்வுகள் சேர்த்துக்கொண்டதோ
காற்றிலே சிற்றலைகளாகப் போகும்போது
அதை அது இழுத்து,
வேப்பமரம் தன் கசப்பின் தன்மையை வளர்த்துக்கொள்ளும்,

கவனமாகக் கேட்க வேண்டும்.

இதைப்போன்றுதான் தாவர இனத்தின் தன்மைகள் காந்தமும் வெப்பமும் அந்த காந்தம் ஒன்றுடன் ஒன்று தனக்குள் கவர்ந்துகொள்ளும்,

இன்னொரு காந்தம் வந்தால் அதைத் தனக்குள் பற்றி அந்தக்காந்தங்கள் இனம் ஒன்று சேர்த்துவிடும். அதே போன்று வெப்பத்தின் தன்மை இனம் ஒன்று சேர்த்துவிடும்,

இப்படி, 1000 காந்தங்கள் 1000 விதமான உணர்வுகளைச் சேர்த்து ஒரு வலுவான நிலைகளை பெறுகின்றது. அப்போது அதனுடைய சக்தி ஆற்றல் மிக்கதாக மாறி (அதற்குள் காந்தம் அதிகமாக இருப்பதால்) தன் இனத்தை
லகுவான முறையில் தனக்குள் எடுத்து
அந்த ஆற்றல்மிக்க சக்தி வளர்கின்றது.

பல 1000 மணங்கள் ஒன்று சேர்த்து ஒரு சுவையாக வெளிப்பட்டாலும் அதற்குள் உள்ள நுண்ணிய அறிவின் அலைகள்
தனக்குள் கவர்ந்ததை,
காற்றில் இருப்பதைத் தனக்குள் பற்றி
அந்த உணர்வின் சக்தியை அது வளர்த்துக்கொள்ளும்.

இப்படித்தான் ஆற்றல்மிக்க அணுக்கள் விளைந்து நம் பூமியிலே படரப்படும்போது பல செடி கொடிகள் வளரக்கூடிய காளானாக முளைக்கின்றது.

பல 1000 சத்துக்கள் சேர்த்து அது எடையாகி அது மண்ணுக்குள் பதியும்போது, மின்னல் தாக்கியவுடன் துடிப்பாகி, இந்த மண்ணின் துணைகொண்டு (பூமியின் ஈர்ப்புகொண்டு) காற்றிலிருக்கக்கூடிய உணர்வுகள் அதன் துணைகொண்டு இருக்கும்போது அது காளானாக முளைக்கின்றது.

அவ்வாறு காளானாக அது முளைத்து அது இன விருத்தியின் தன்மையை அது வளர்த்து, அதே முயற்சியில் வரப்படும்போது பல செடிகளாக வருகின்றது.

அப்போது ஒரு காளானின் விஷத்தின் தன்மை மண்ணில் பலவாறு பல விஷத்தின் தன்மை படரவிட்டவுடனே,
அது அங்கே உள்ள மண்ணின் சத்துக்கொப்ப
அங்கிருக்கக்கூடிய மற்ற கலவைக்குத்தக்கவாறு
பல செடிகொடி தாவர இனங்களாக உருமாறுகின்றது

இது இயற்கையின் சில நியதிகள். இவ்வாறுதான் இந்த பூமியிலே பல செடி கொடிகள் வளர்ந்து வந்தது. பல மாற்றங்கள் ஏற்பட்டது.

February 1, 2015

அணுவிற்குள் இருக்கும் மூன்று சக்தி - மும்மண்டலம்

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தம் ஒரு ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படக்கூடிய மணத்தை கவர்ந்து கொள்கின்றது. காந்தத்துடன் கலந்துள்ள வெப்பம் அந்த ரோஜாப்பூவின் மணத்தைத் தனக்குள் இழுத்து, காந்தம் வெப்பத்துடன் இணைத்துக் கொள்கின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்ட அந்த அணு, எந்த ரோஜாப்பூவின் மணத்தை அது தனக்குள் இழுத்து இணைத்துக் கொண்டதோ அந்த மணத்தை வீசும் அலையாக மாற்றுகின்றது.
ஆக, அந்த அணுவிற்குள்
ஈர்ப்பு – காந்தம்
அதற்குள் மறைந்திருக்ககூடிய வெப்பம்
அது சேர்த்துக் கொண்டது மணம்.

அதை நாம் தெரிந்துகொள்வதற்குத்தான் அன்று ஞானிகள் காந்தம் என்பது லட்சுமி, தனக்குள் அணைத்துக் கொள்ளும் சக்தி. பராசக்தி என்பது வெப்பம், எதிலேயும் உருவாக்கக்கூடிய சக்தி.

உதாரணமாக நம் உடலுக்குள் பல குணங்கள் இருக்கிறது என்று வைத்துகொள்வோம். அத்தனை குணங்களிலேயும் அந்த காந்தம் இருக்கின்றது. அதனால் அது மஹாலட்சுமி.

அத்தனை குணங்களையும் சேர்த்து வளர்க்கும் ஆற்றல் பெற்றது மஹாலட்சுமி.

ஆனால், அத்தனை குணங்களிலேயும் இந்த வெப்பம் நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொன்றும் அது வளரச்செய்வதற்கு அந்த வெப்பம், சூடு தேவை. ஆக, இது பராசக்தி.

அத்தனை குணங்களிலும் நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு குணத்திலும் அந்த மணங்கள் உண்டு. அந்த ஒவ்வொரு மணத்தையும் நாம் அறிந்துகொள்ளக்கூடியது ஞானம் – சரஸ்வதி.

இதைப் போல ஒரு அணுவிற்குள் லட்சுமி, பராசக்தி மூன்றாவது சரஸ்வதி. இந்த மூன்று நிலை கொண்டதுதான் ஒரு அணுவின் வேலை.

அணுவிற்குள் இந்த மூன்று சக்திதான் மும்மண்டலம், மும்மலம் என்று தத்துவ ஞானிகள் எழுதியிருப்பார்கள்.

இந்த மும்மலத்தின் இயக்கம்தான் என்றாலும் ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் மணத்தை சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தங்கள் கவர்ந்துகொண்டு அந்த மணத்தை வீசும் அலைகளாகப் போகும்.

அதே சமயம், பூமியில் இருக்கக்கூடிய ரோஜாச்செடி தன் மணத்தை இழுத்து வாழச்செய்து தனக்குள் வெப்பத்தை உண்டாக்கிக் கொள்ளும்.

ஒரு பொருளை நாம் வேகவைத்தால் அதிலிருந்து ஆவி  வெளிப்படுகின்றது. இப்பொழுது நாம் சுவாசிக்கும்போது மூச்சை வெளிப்படுத்துகின்றோம்.

அதைப் போல ரோஜாச் செடியும் பூமியின் ஈர்ப்பலைகளிலே வெளிவந்து
தன் உணர்வின் சத்தை இழுத்து
தனக்குள் மோதும்போது ஏற்படக்கூடிய வெப்பத்தில்
தான் சேர்த்துக் கொண்ட மணத்தை வெளிப்படுத்தும்,
ஆவியாக அந்த மூச்சை வெளிப்படுத்தும்


அந்த மூச்சை வெளிப்படுத்தும் மூசசு இல்லையென்றால் அதற்கு வேலையே இல்லை. அது போன்று அது வெளிப்படுத்தும் அத்தனை அலைகளும் (ரோஜாப்பூவின் மணங்கள்) அது அலை அலையாகத் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.