
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்
திருச்சபையின் ஆயுள் மெம்பராக நாம் சேர்ந்திருக்கின்றோம்.
1.குருதேவர் துருவ நட்சத்திரத்துடன் ஈர்ப்பு வட்ட்த்தில் அவர் ஆயுள் மெம்பராக இருக்கின்றார்.
2.அதன் வழி வளர்ச்சி பெற்று இன்றும் அங்கே வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்.
3.அவர்
காட்டிய அருள் வழியில் நான் அவருடன் ஆயுள் மெம்பராக இணைந்து இருக்கின்றேன்.
4.அது போல்
நாம் அனைவரும் குரு வழியில் அங்கே அந்தத்
துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்திருக்கின்றோம்.
துருவ நட்சத்திரம் என்பதே பல மனிதர்களுடன் ஒன்றி… உணர்வின் தன்மை தெளிவாக்கித்
தெளிந்த உணர்வுடன் ஒன்றி… ஒன்றிய
நிலைகள் கொண்டு “எல்லோருடைய உணர்வும் பகைமையற்ற உணர்வு கொண்டு…” ஒளிச்
சரீரம் பெற்றது.
பலவிதமான பல கோடிக்கணக்கான நச்சுத்தன்மைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒளியாக
மாற்றிடும் அருள் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் வாழ்ந்து வருகின்றது.
மனிதரான பின் பிறவி இல்லாத நிலை அடைவதே கடைசி நிலை.
அதாவது
இந்த உடலில் கோடிக் கரையில் இருக்கின்றோம்.
தனுசுக்கோடி… இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகி விட்டது என்று எண்ணி
மனதைக் குவித்து அவர் பூஜிக்கத் தொடங்குகின்றார்.
1.ஏனென்றால் இந்த மனித உடலில் ரொம்ப நாள் நாம் நீடித்து இருப்பதில்லை.
2.அதற்குள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் மற்றவர்கள் நம்மை இழுத்து விடாது
3.பேரருள் என்ற உணர்வின் தன்மை எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நமக்குள்
அதை ஒன்றாக்க வேண்டும்.
அருள் உணர்வுகள் மற்றவர்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த உணர்வு தான் அங்கே கிடைக்கின்றது.
2.நம் மீது அவருக்குப் பற்று வருவதில்லை.
இப்படி ஒவ்வொரு மனிதனும் நாம்
செயல்படுத்தும் போது கடைசி நிலையில்… நாம் துருவ
நட்சத்திரத்துடன் ஐக்கியமாகின்றோம்.
ஆனால் என் குடும்பம்
இப்படி இருக்கின்றது… பிள்ளைகளுக்கு நாளை என்ன செய்வேன்…? என்ற எண்ணம் வந்தால் புவியின் பற்று வந்து விடுகின்றது. இங்கே யார் மீது பற்று
கொண்டுள்ளோமோ அவர் உடலுக்குள் தான் செல்ல நேரும்.
அவர் உடலுக்குள் சேர்ந்து தன் உடலில் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட உணர்வுகளை
அங்கே பாய்ச்சி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு
மனிதனல்லாத உடலுக்குள் தான் அடுத்து செல்ல முடியும்.
ஆனால் இந்த உயிர் என்றுமே நிலையானது. தீயிலே மனிதன் குதித்தால் உயிர் வேகாது.
உடல் கருகும். அந்த நெருப்பின் தன்மை
கொண்டு கருகிய உணர்வு தான் எல்லா அணுக்களிலும்
பெருகும்.
1.உடல் கருகி இந்த உயிரான்மா வெளியே சென்றால் அடுத்து ஏரி பூச்சியாகத் தான்
பிறக்கும்.
2.ஏனென்றால் எல்லா சிந்தனைகளும் எரிந்தது... கருகிய உணர்வுக்கொப்ப அத்தகைய பூச்சியாக
மாறுகின்றது.
மனித உடல் மீது இந்தப் பூச்சி பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். தீ
வைத்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் ஏரி பூச்சியாக மாறுகின்றார்கள்.
இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
நாம் செல்ல வேண்டும்.
1.அவர் பேரருளைப் பெற்றார்…
நமக்கு அந்த பேரருள் பெறும் முறையைக்
கொடுத்தார்.
2.என்னை எப்பொழுதுமே அந்த துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து விடு என்றார்.
3.அதே வழியில் தான் உங்களையும் அங்கே இணைத்து நாம் அதன் வழியில் “துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக இருக்கின்றோம்…”
பற்றும் பாசமும் கொண்டு அது வரும் பொழுது அவர்களுக்கு
இதை உபதேசிப்பதும்… அதை ஏற்றுக் கொள்ளச்
செய்வதும்… ஏற்றுக் கொண்டவருக்கு அந்த அருள் உணர்வுகளைக் கொடுப்பதும் என்று
செயல்படுத்தி வருகிறோம்..
பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக் கொள்வதில் பிரயோஜனம் இல்லை.
1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் அனைவருமே குடும்பத்தில்
ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் உணர்வைச் சேர்த்து பழக
வேண்டும்.
2.துருவ
நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.