ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2026

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

தாவர இனங்களில் விளைந்தவற்றைத்தான் மனிதர்கள் நாம் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்துள்ளோம்.
1.அதில் உருவானது தான் நம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களும் அணுக்களும் எல்லாமே
2.ஆகவே தாவர இனத்தின் உணர்வுகள் நம்மிடம் உண்டு…!

பல பிறவிகள் கடந்து வந்த பின் தாவர இனங்கள் அனைத்தும் செழித்து வளர வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்தினால் இந்த உணர்வு அங்கு இணைக்கப்படுகின்றது.

நல்ல உணர்வின் தன்மையாக நாம் பாய்ச்சப்படும் பொழுது தீமை என்ற உணர்ச்சிகளை மாற்றி நல்ல நிலைகள் கொண்டு தாவரங்கள் வளரும்.

1.ஆனால் நீங்கள் சங்கடமாக சலிப்பாக இருந்து உங்கள் வயலுக்குச் சென்று உற்றுப் பாருங்கள்.
2.பயிர்களின் வளர்ச்சி எப்படிக் குறைகிறது…? என்று பாருங்கள்.

வீட்டில் நல்ல செடியை வளருங்கள். அடுத்தவரிடம் சண்டை போட்டுவிட்டு அந்த உணர்வுடன் நீரை அதற்கு ஊற்றிப் பாருங்கள்... செடி கருகிப்போகும்.

ஏனென்றால் புழுவாக பூச்சியாக இருக்கும் பொழுது நாம் அதை உட்கொண்டு தான் வந்துள்ளோம்... இந்த உணர்வின் தன்மை வரும். மனிதனாக இப்போது முழுமை அடைந்திருக்கின்றோம் இந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது கருகும்.

அதே சமயத்தில் தியானத்திலே உயர்ந்த உணர்வுகளை உங்களுக்குள் வலுக் கூட்டி இந்த செடி நன்றாக வளர வேண்டும் நல்ல பலன் தர வேண்டும் என்று உங்கள் பார்வையில் பாருங்கள்.

1.எந்த அளவுக்கு நீங்கள் சக்தி வளர்த்துக் கொண்டீர்களோ நீரை ஊற்றியோ அல்லது கண்களிலே பார்த்தால் கூட இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
2.இப்படி அங்கே பரவச் செய்யும் போது செடிகளில் தீமையின் அணுக்கள் குறையத் தொடங்கும்.

இதையெல்லாம் உங்கள் மனதில் உருவான உணர்வின் தன்மை எதை நினைவுக்குக் கொண்டு வருகின்றீர்களா அதன் வழி அங்கே நடக்கும்.

அதனால்தான் தியானத்தில் உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கப்படும் பொழுது... மகரிஷிகள் உணர்வுகள் மேகங்களிலே படர வேண்டும்... மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும்…! என்று இந்த உணர்வைச் செலுத்தச சொல்கின்றோம்.

அந்த மேகக் கூட்டத்திற்குள் இந்த உணர்வுகள் கலக்கின்றது. அந்த மழை நீர் பட்டுத் தான் நாம் அனைவருமே வளர்ந்து வந்திருக்கின்றோம். இந்த உணர்வின் எண்ணத்தால் அங்கே பாய்ச்சப்படும் பொழுது செடிகளும் நன்றாகச் செழித்து வளர்கின்றது.

1.காரணம் எல்லாவற்றிலுமே காந்தப்புலன் உண்டு... எல்லாவற்றிலுமே அது கலந்து கொள்கின்றது.
2.நாம் உயர்ந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது கலந்து மழை நீராக நன்னீராக வரும் பொழுது தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது.
3.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் மேகக் கூட்டத்துடன் கலந்து "நல்ல மழையாகப் பெய்யும்...”

ஆனால் மனிதன் விஞ்ஞானத்தினால் வெளிப்படுத்தப்படும் புகை மண்டலங்களும் பல விஷ உணர்வுகளும் மேகக் கூட்டத்திலே கலக்கின்றது. அமிலம் கலந்த நீராகத் தாவர இனங்களுக்குத் தொல்லை கொடுக்கும் சக்தியாக கலந்து விடுகின்றது.

அது மட்டுமல்ல…!
1.யுத்த காலங்களில் பார்த்தோம் என்றால் மழை பெய்தாலே செடி கொடிகள் கருகும்.
2.காரணம்... பகைமை கொண்டு ஒருவனுக்கு ஒருவன் கொன்றிடும் உணர்வுகள் அங்கே படரப் படும் பொழுது அவ்வாறு ஆகிறது.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் அனைவரும் காக்கும் சக்தியாக துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வலுவாகப் பெருக்கி இந்த உணர்வினை மேகக் கூட்டங்களிலே படரச் செய்யும் போது நல்ல மழை நீராகப் பெய்யும்.

நாம் பார்ப்போர் அனைவரையும் நம் ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் தூய்மைப்படுத்த இது உதவும். "ஒவ்வொருவரும் நாம் இதைச் செய்ய வேண்டும்...”

1.யுத்த காலங்களில் நம்மைப் பாதுகாக்கவும் உற்றார் உறவினர் நண்பர்களைப் பாதுகாக்கவும் இந்தச் சக்தி நமக்கு உதவியாக இருக்கும்.
2.எந்த நிலையில் நாம் உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.