
தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை
‘’ஓங்காரக்காளி’’
என்று நாம் சொன்ன ஓசோன் திரையையும் அணு குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால் விஷத்தன்மைகள் பூமியில் வந்து
படர்ந்து கொண்டிருக்கின்றது.
விஞ்ஞானக் கருவி கொண்டு விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக்
கொண்டிருக்கிறார்கள்.
1.விண்ணிலே பாய்ச்சினால் இங்கே பாதிக்காது
என்பது அவர்களுடைய எண்ணம்.
2.ஆனால் விண்ணிலே விஷத் துகள்கள்
பரப்பப்படும்போது புவியின் ஈர்ப்புக்குள்
3.”சுழற்சியில் வரப்படும்போது” அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.
அப்படி அலைகள் வரப்படும்போது தான் விஷத்தின் தன்மையை
முறியடிக்கக் கூடிய சக்தி அதற்கு
இருந்தாலும் மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்டது அந்த ஒசோன் திரையைக் கிழித்து விடுகின்றது.
விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள் துரித நிலைகளில் நம்
பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
1.அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே மனிதனுடைய
சிந்தனைகள் குறைக்கப்பட்டு விட்டது.
2.நாம் ஆனந்தமாக இருக்க
வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
3.ஆனால் உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக்
கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம்
செய்ய வேண்டிய ஒரே முறை அந்த மெய் ஞானியரின் அருளை நமக்குள் பெருக்குவது தான்.
ஓசோன் திரை எப்படிக் கிழிந்து
வருகிறதோ
அதைப் போன்று மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும்
தன்மை நாம் பெற வேண்டும்.
1.நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண
வேண்டாம்.
2.நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான்… பணம் வசதி உள்ளவர்கள்
யாருமில்லை.
3.எண்ணத்தின் வலுவை நாம்
பெற்று மெய் ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.
அதனின் வலுக்கொண்டு தீயசக்திகள்
நம்மை அணுகாது நாம் பாதுகாக்க வேண்டும். அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற வேண்டும்… நமக்குள்
பெருக்க வேண்டும்.
எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனரோ அதைப் போல அந்த மெய் ஞானியரின் அருள் ஒளியை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி “இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். ..”
அப்படிப் பழகுவதற்குத்தான்
ஆத்ம சுத்தியும் பயிற்சியும் கொடுத்தது.
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மெய் ஞானியரின் அலைவரிசையின்
தொடர் கொண்டு
2.நமக்குள்ளும் இந்த உலகிற்குள்ளும் வரும் எத்தகைய தீமைகளையும்
நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.