ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2026

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்


யாகத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். உண்மையான யாகம் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
1.ஒவ்வொரு உயிரும் சிறு துளி சிறு நெருப்பு.
2.சிறு துளி சிறு நெருப்பாக இருந்து… நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரும் நெருப்பாக…”
3.யாம் உபதேசிக்கும் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எல்லோரும் சுவாசித்து
4.சுவாசித்த உணர்வலைகள் இந்தக் கூட்டுத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் முழுவதற்கும் படர்ந்து.
5.அப்படிப் படரும் நிலை தான் யாகம்… “யாக வேள்வி…” என்பது.  
 
யாகத் தீயில் எந்தப் பொருளைப் போடுகின்றமோ அதனின்ம் வருகின்றது. இதைப்போல நம் உயிருக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப்ரச் செய்து உடலுக்குள் ந்த யாகக் குண்டத்திற்குள் படரும்படி செய்கிறோம்.
 
அவ்வாறு படர்ந்து… நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.அவ்வாறு வெளிப்படும் ந்த யாக உணர்வுகள் எல்லோருடைய உணர்வுக்குள்ளும் ஊடுருவிப் படர்ந்து
2.நாம் இருக்கக்கூடிய இடம் கல் மண் தாவர இனங்கள் அதில் இருக்கக்கூடிய காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்து
3.அதிலே மெய்ஞானிகள் உணர்வுகளை பச் செய்வதுதான் யாக வேள்வி என்பது.
 
இது உண்மையான யாக வேள்வி.
 
யாகத் தீயில் நெய்யை விடுகின்றோம். அதனின் உட்பொருள் என்ன…?
 
ந்த மனித வாழ்க்கையில் உயர்ந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்…
1.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் அவர்களின் உணர்வின் எண்ணங்களை இயக்கி
2.நம் அனைவரது உயிருக்குள்ளும் யாகக் குண்டத்திற்குள் (உடலுக்குள்)
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உள் செலுத்துவது தான் நெய் ஊற்றுவது என்பது.
 
இந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதும் படர்ந்து பேச்சால் மூச்சால் பார்வையால் சொல்லால் செயலால் இது அனைத்தும் வெளியிலே படர்ந்து கேட்போர் உணர்வுகளை மகிழ்ச்சியைத் தூண்டும் உணர்வாக அமைகின்றது…!”
 
யாகக் குண்டமான உடலில் நம் உயிரான நெருப்பில் போடப்பட்ட
1.அந்த மகரிஷிகள் உணர்வு தான் எல்லோருக்குள்ளும் படர்ந்து
2.நாம் இட்ட மூச்சலைகள் அனைத்தும் நம் வீட்டில் தெருவிலும் ஊரிலும் நாட்டிலும் படர்ந்து உலகம் முழுவதும் “ஊடுருவிப் படர்கின்றது…”
 
இதைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் கூடி நின்று ஆசீர்வாதம் செய்தார்கள்…” என்று காட்டப்பட்டது.
 
ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்த்து உணர்வின் எண்ணங்களைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவு செய்யும் பொழுது
1.இந்தப் பதிவே ஊக்கச் சக்தியாக இருந்து
2.மெய்ஞானத்தின் தொடராக எல்லா இடங்களிலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.
 
அதற்குத் தான் கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்… எல்லோரும் அதிலே கலந்து கொள்ளுங்கள்…. அருள் ஞானக் கூட்டமைப்பை உருவாக்குங்கள்.