
குருவினுடைய உதவி அவசியம் தேவை
27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துச் சூரியன் ஒளியாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. சூரியனின் ஈர்ப்பு
வட்டத்தில் தான் நட்சத்திரங்களும் வாழ்கின்றது. பிற மண்டலத்திலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள்
கொடுக்கிறது.
அது போல்…
1.நாம் இந்த உடலில் எந்தெந்த உணர்வுகளை எடுக்கின்றோமோ
இதில் எது வலுவோ (நாம் எடுக்கும்
அருள் சக்திகள்)
2.இரத்தத்திலிருந்து தசை மண்டலத்தில் இருந்து எலும்பு மண்டலத்தில் இருந்து
எல்லாவற்றையும் கொண்டு வருகின்றோம்.
3.எல்லாவற்றிலும் அந்த வலுவைச் சேர்த்துக் கொண்டு
வரும் பொழுது
4.இந்த வலுவின் தன்மை காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கின்றது… பிரித்தெடுக்கின்றது.
அதே சமயத்தில்
வேதனைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வந்து
விட்டால் எல்லாவற்றிலும் விஷம் கலந்து விடுகிறது. காற்றிலிருக்கக்கூடிய விஷத்தை எடுத்து அடிக்கடி
கவலைப்படும்படி செய்வதும் நோயாக்குவதும் வெறுப்படையச்
செய்வதும் எல்லாம் செய்கின்றது. மற்ற உயிரினங்களுக்கு இது
எல்லாம் தெரியாது.
குருநாதர் இதை எல்லாம் எனக்குள் பதிவு
செய்தார்… உணர்த்தினார். அதைத்தான்
உங்களிடமும் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் இதையெல்லாம் பக்குவப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
2.அதை வலுப்படுத்திச் செயல்படக்கூடிய சக்திகளாக வளர
வேண்டும்.
மற்றவர்கள்
என்னிடம் கஷ்டம் கவலை துயரம் நஷ்டம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இதை நான் எதிர்த்துப் போராடிச் சமாளிக்க வேண்டி
இருக்கின்றது.
ஏனென்றால் பக்தியில் நாம் வழி வழியாக அதைத் தான் தெரிந்து
வைத்திருக்கின்றோம்.
உங்களிடம் இதைப் போன்று கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால் உங்களுக்கும் அந்தக் கவலை வருகிறது அல்லவா.
ஆனால் உங்களை அந்தக்
கவலை தாக்காமல் நான் பாதுகாக்க வேண்டும்.
1.குருநாதர் எனக்கு எப்படிப்
பாதுகாப்பு கொடுத்தாரோ உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாதுகாக்க
வேண்டி இருக்கின்றது.
2.எத்தனை ஆயிரம் பேர் கூடி இருக்கின்றார்களோ அத்தனை பேருக்கும் நான் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டும்.
நீங்கள் இதை மாதிரிச்
செய்யுங்கள் நன்றாக விடும் என்று மற்ரவர்களுக்குச் சொன்னாலும்
அவருடைய கஷ்டம்… “அங்கே எப்படி
இருக்கின்றது… இங்கே இப்படி நடக்கின்றது… எல்லாம் நஷ்டமாகி விட்டது” என்று சொல்லும் போது கேட்டால் அது உங்களுக்குள் தீமையாக விளைந்து விடாது
பாதுகாக்க வேண்டும் அல்லவா.
அவர்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நாம் நல்வழி காட்ட வேண்டும்.
1.காரணம் பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கின்றது.
2.ஆகவே அந்த அருள் உணர்வுகளை வலுவாக்கி விட்டால் உங்களிடம் எதுவும் வராது.
தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் மற்ற கசடுகள் எல்லாம் ஆவியாக எப்படி
மாறுகின்றதோ அதே போல உங்களுக்குள் அந்தச் சக்தி அதிகமான பின்
மற்ற தீமைகளை மாற்றிவிடும்.
அது வரையிலும் குருவினுடைய உதவி அவசியம் தேவை.
1.எனக்கு குருநாதர் எவ்வளவு நாள் உதவியாக இருந்து வழி
காட்டினாரோ அதே போல
2.அந்தக் குருவின் தன்மையை
வளர்க்க வளர்க்க உங்களை அது பாதுகாக்கும்.
மற்றவர்கள் அனைவரும் உடலுக்குத் தான் சொல்கிறார்கள். உடலுக்குப் பின்
என்ன…? என்பதை யாரும் சொல்லவில்லை. நாம் இந்த வாழ்க்கையில் நம் எண்ணங்களைப்
பரிசுத்தப்படுத்தி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… கடைசி நிலை,
அது தான் விஜயதசமி… உயிர் விண்ணுலகம் செல்ல வேண்டும் என்பதை
நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபதேசங்களும்
கொடுக்கின்றோம். எல்லோருக்கும் அந்த உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு செல்கின்றோம்.
ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு
உடலும் கோவில். மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்திகள் காக்கப்பட வேண்டும்.
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அதைச்
சொல்லும் பொழுது
2.அது உங்களில் வளர்ந்தால் எனக்கும்
கிடைக்கின்றது… மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.
அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.