
எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்
1.உங்களையெல்லாம் யாம் எங்கே
கொண்டு போகின்றோம்…?
2.அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம்.
3.குருநாதர் என்னை இப்படித்தான்
கொண்டு சென்றார்.
அவர் காட்டிய நிலைகளில் தான்
யாம் உங்களையும் அங்கே இணைக்க முடியும்.
ஒவ்வொன்றையும் சேர்த்து உங்கள்
உடலில் எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும் அதனுடன் இணைத்து இணைத்து அதனின் உணர்வை
உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்.
உங்கள் கண்ணின் நினைவு உடலிலுள்ள
ஒவ்வொரு அணுக்களுக்கும் இதைச் சேர்க்கும்.
1.அப்படிச் சேர்க்கும் பொழுது
நம் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.
2.அதை ஏற்கக்கூடிய பருவத்தைச்
செய்தால் தான் ஈர்க்கும்… இல்லையென்றால் எடுக்காது.
அதனால் தான் அந்த உணர்ச்சியின்
தன்மை கொண்டு நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில் இதை உங்களிடம் சேர்க்கின்றோம்.
இதைப் பக்குவப்படுத்துதல் உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஆனாலும் உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.
வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா”
என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்… உற்சாகம்
ஊட்டும்.
குழந்தைகள் ஏதாவது குறும்புத்தனம்
செய்தால் இதே போல ஆத்ம சுத்தி
செய்து விட்டு… என் பிள்ளை ஞானியாக
வேண்டும்…. அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள்
என்றால் உடனே “ஈஸ்வரா” என்று எண்ணி அதைத் தடுத்துவிடுங்கள்.
1.அவர்கள் பொருளறிந்து செயல்படும்
சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும்
3.அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள்.
இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
ஏனென்றால்… “ஈஸ்வரா” என்று எண்ணி நம் உடலுக்குள் பெறச் செய்து விட்டு அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்)
இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது… வலுவாகிறது.
அப்பொழுது இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும். அவன் திருந்தும் நிலை வரும்.
1.அவன் திருந்த எண்ணினால்
அவனுக்கு நல்லதாகிறது.
2.நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.
இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே
வரவேண்டும்.
பல விதமான குழம்பு வைக்கிறோம், பல விதமான பலகாரம் செய்கின்றோம். அதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வைச் சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.
இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்கின்றது. “கொஞ்சம் இதில் பொறுமை தேவை…”
ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி
விட்டால் ரோட்டில் போகும் பொழுது
பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக்
கொள்கின்றோம்.
இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை
நாம் பார்த்து விடுகின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
ஒருவன் சாபம் விடுகின்றான்… அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே
இருப்பான். அவனைப் பார்த்தவுடன்
பதிவு செய்து விடுகின்றோம். இந்த சாப அலைகள் அடுத்து நமக்குள்
எதை எடுத்தாலும் தீமை செய்யும் அணுக்களாக வளர்ச்சி பெறுகின்றது.
அந்த மாதிரி உணர்வுகள் வரும்
பொழுது
1.அந்தக் கணமே “ஈஸ்வரா”என்று துருவ நட்சத்திரத்தின்
உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண
வேண்டும்.
நம் வாழ் நாளில் இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு
செய்து அந்தத் தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப்
பழக வேண்டும்..
ஒருவர் திட்டினார் என்று வைத்துக்
கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே
போகிறது.
அப்படி உங்களை நினைக்கும்போது அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிட வேண்டும்.
அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களுக்குள் அறியாது
சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது இந்த உணர்வு நமக்குள் வருகிறது.
3.அவர்கள் உணர்வு பதிவாகிறது…
இதனுடன் கலந்து அதை நாம் மாற்றி விடுகின்றோம்.
அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து
விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது.
இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா…!
அது கலந்தவுடன் இதை மாற்றிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
1.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
2.ஒன்றில்லாது ஒன்றில்லை…! எதுவுமே ஒன்று இணைந்தால் தான் அது வளரும்.
வட துருவத்தில் இருப்பது இழுக்கும்.
தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்
1.தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது.
2.வட துருவம் மேலே இருந்து
இழுக்கிறது.
3.அதாவது காந்தத்தில் மற்றொரு
காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.
இதைப் போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
1.நம் உடலில் உள்ள இரத்தத்தில்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்,
2.நம் உடலை உருவாக்கிய அனைத்து
அணுக்களிலும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
அந்த மகரிஷிகள் சென்றடைந்த
எல்லையை நாம் அடைய வேண்டும், அதற்குத் தான் இதை
உணர்த்துகின்றோம்.