இயேசு கிருஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றாம் நாளில் எப்படி வெளிப்பட்டார்...? முன் பாட நிலைப்படி அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்...! என்று செப்பியுள்ளேன்.
அவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.
இவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.
எப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவாசித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.
அம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.
இந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.
ஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே... இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்...
1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது
2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.
ஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.
பல ஜெபங்கள் செய்கின்றனர்... வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப...!
1.ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.
2.பக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடி பணியும் நிலை உள்ளது.
3.அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.
இன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்... காம இச்சையின் நிலையும்... பேராசையின் நாகரிக நிலையும்... “அதி வேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன...!”
இந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.
ஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.
1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது
2.வழிப்படுத்திடத் தக்க “குரு…” இல்லை.
மற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது. இக் கறையுடன் கறையைச் சேர்த்து ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை…!
சக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.
மாபெரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது…!
செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).