தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?
இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.
ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.
பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.
இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.
ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!
மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.
இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.
இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?
மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.
இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?
மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”
ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.
இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?
இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.
1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”
சிறு வயதில்… தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)
பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.
(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)
எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.