1.இராவணன் யார்…? அவன் சிவ பக்தன்… (மனித உடல்).
2.இராமனோ விஷ்ணு பக்தன் உயிரின் இயக்கத்தைக் கொண்டவன்.
இராவணன் இந்த உடலின் இச்சைக்குச் சகலத்தையும் கற்று உணர்ந்தவன். சகோதரி சூர்ப்பணகையின் பாசத்தால் “என்னை அவமதித்து விட்டானே…” என்று அந்த சாம்ராஜ்யத்தில் வெறுப்பின் தன்மை வளருகின்றது.
பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் பொழுது மனிதன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு பத்தாவது நிலை அடையக்கூடிய தன்மை வந்தாலும்
1.நான் என்ற அகம் வரப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை இல்லாது போய் விடுகின்றது.
2.நான் என்று அகம் வரப்படும் பொழுது தன் சகோதரனாக இருக்கும் அதாவது இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தூங்குகின்றது (கும்பகர்ணன்).
இராவணவன் எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் இந்த உடலின் இச்சைக்குச் செயல்படுபவன் என்று தான் அவனைக் காட்டுகின்றார்கள்.
எதனின் சுவையின் தன்மை கொண்டானோ சூர்ப்பணகையினால் வந்த வினையை… தன் சகோதரி மேல் இருக்கும் பாசம் என்ற அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது… தனக்கென்று அகம் கொண்ட செயலின் தன்மை வரப்படும் போதுதான் அங்கே அழிவின் தன்மை வருகின்றது.
1.இங்கே இராவணனைக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படும்போது சிந்தனை (கும்பகர்ணன்) இல்லை
2.அங்கே அவமதிக்கும் தன்மை வரும் பொழுது இதே உணர்வுகள் எதிரியின் தன்மையாக (இலட்சுமணன் – சூர்ப்பணகை) வாழ்க்கையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத்தான்
3.இந்த உடலுக்குள் எண்ணிய சக்திகள் இயக்கமும்
4.அதே சமயத்தில் தசரதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிர் சக்கரவர்த்தியாக இயக்குகின்றது என்ற நிலையும்
5.இந்த இரண்டு பிரிவையும் காட்டியுள்ளார்கள்.
குருநாதர் இதை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார்…!
இராவணன் எங்கே இருக்கின்றான்…? என்றால்
1.எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற இச்சை கொண்ட நம் உடல் தான்.
2.முடிவின் தன்மையில் இருக்கப்படும் போது அகம் என்ற நிலையில் தேய்பிறையாகி விடுகின்றது.
பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தச் சக்திக்கு எது அருவமோ அதனின் உணர்வின் தன்மை கொண்டு இங்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் இது அதற்குள் இயங்கி (உயிர் உடலுக்குள்) எவ்வாறு வருகிறது…? என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகின்றது.
இதற்காக வேண்டி இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் (ஞானகுரு). ஆனால் நேரமில்லை...!
1.பலரும் பல விதமாக எழுதி இருக்கின்றார்கள்
2.அதற்குள் நீ எதற்காகப் போகின்றாய்…? நான் சொல்வதை மட்டும் புரிந்து கொள்…! என்று சொன்னார் குருநாதர்.