ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2023

ஏறுக்கு மாறாகச் சொல்லிச் சொல்லித் தான் எனக்கு உபதேசித்தார்

குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.

குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.

குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.

பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.

கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!

ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.

அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.

அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.

அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.

ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்

ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!

துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.

1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.

சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவ அடிபடுகின்றான்

ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்...!”

வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.

ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.

யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.

இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.

என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!

எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!

சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.

நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்

நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.

குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்

அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.

பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”

அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!