காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.
விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.
முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது...
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி...
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்
4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ... எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ...
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.
உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்... அச்சம்... நாணம்... என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.
எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ... அவ்வுணர்வின் குணமும்... செயலும்... கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.
அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக...
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்... வாழ்க்கையின் செயலுக்கும்...
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.