அம்மா தன் பையனைக் கூப்பிட்டு கடைக்குச் சென்று எண்ணெய் சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லுகின்றது அம்மா சொன்னதை தட்டாதபடி குடு..குடு… என்று கடைக்கு ஓடி வருகின்றான்.
அடுப்பில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கின்றது… அது தீரப் போகிறது… அதனால் உடனடியாக எண்ணெய் வாங்கி வா…! என்று தன் பையனிடம் அந்த அம்மா சொல்கின்றது.
அதே வேக உணர்வுடன் இவன் கடைக்கு வந்த பின் புஷ்..புஷ் புஷ்…புஷ் என்று அம்மா சொன்ன வேகத்தில் வந்து “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…” என்று கடைக்காரரை அவசரப்படுத்துகின்றான்.
கடைக்காரர்… “ஏண்டா முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்படுகின்றாய் இருடா…!” என்று சொல்கின்றார். காரணம் இவன் வேக உணர்வு கொண்டு ஒலியை எழுப்பப்படும் பொழுது அவனுக்கு இவருடைய உணர்வைச் செவி சாய்க்க முடியவில்லை.
ஆனால் இவனும் அம்மா திட்டுமே… அம்மா திட்டுமே…! என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்… சந்தர்ப்பம்…! ஆனால் பையன் தவறு செய்யவில்லை… தன் அம்மா சொன்ன வேலையைத்தான் அவன் செய்கின்றான்.
அம்மா திட்டுமே… அம்மா திட்டுமே…! என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் போது ஏண்டா அவசரப்படுகிறாய்…? என்று கடைக்காரன் இதையே சொல்கின்றான்… எண்ணெய் கொடுக்க மாட்டேன் என்கிறான்.
உங்கள் அனுபவத்தில் நீங்களும் கடைக்குச் சென்று இது போன்று அவசரமாகக் கேட்டு பாருங்கள். அவர்கள் இருங்க… கொஞ்சம் இருங்க…! என்று தான் சொல்வார்கள்.
நீங்கள் பஸ்ஸிலேயே அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஏறி “டிக்கெட் கொடுங்கள்… டிக்கெட் கொடுங்கள்...” என்று கேட்டால் அவன் உடனடியாகக் கொடுக்க மாட்டான்.
1.ஏனென்றால் நாம் அல்ல..
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் வேகங்கள் அதை அவர்கள் செவிகளில் கேட்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அதைக் கொடுக்கக்கூடிய மனதை மாற்றி விடுகின்றது.
3.அவனிடம் குறை இல்லை… “நம்முடைய எண்ணம் தான்” அவனை அவ்வாறு செயல்படுத்தச் செய்கிறது…! என்பதை யாருமே நினைப்பதில்லை.
அது போல் தான் “எண்ணெய் கொடுங்கள் அவசரம்…” என்று பதட்டத்தில் கேட்கின்றான். கடையில் நிதானமாகச் செயல்படுத்துபவன் இவன் கேட்ட வேகத்தில் எண்ணெயை ஊற்றிக் கொடுக்க முடியுமா…? முடியாது…!
அம்மாவோ சீக்கிரம் வாடா…! என்று சொல்லி அனுப்பியது. கடைசியில் எப்படியோ வாங்கிக் கொண்டு இந்த இடத்தைக் கடந்த பின் “நேரம் ஆகிவிட்டதே… கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டானே…!” என்ற இந்த வெறுப்பிலேயே பையன் போகின்றான்.
கவனம் அங்கே இருப்பதால் நடக்கும் போது ரோட்டிலே கீழே தட்டி எண்ணெய் வாங்கிய பாட்டிலைக் கீழே போட்டு விடுகின்றான். ஐய்யய்யோ…! எண்ணெய் சிந்தி விட்டதே… எல்லாம் போய்விட்டதே…! என்று அந்த வருத்தத்தில் அப்படியே அவன் சென்று விடுகின்றான்.
உடைந்த பாட்டிலை அவனால் அப்புறப்படுத்த முடியவில்லை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான்.
வீட்டிற்குச் சென்றவுடன் தாய் என்ன சொல்கின்றது…? தொலைந்து போகின்றவனே…! எனக்கு அப்பொழுதே தெரியும்… தொலைந்து போகின்றவனே…! என்று இரண்டு திட்டு திட்டுகின்றது.
தாய் சொன்ன கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்த அவசர எண்ணத்துடன் தான் செய்தான். ஆஅனால் அங்கே இரண்டு திட்டு கிடைக்கிறது.
1.பெரும் பகுதி தாய் எல்லாம் இப்படித்தான் பேசுகின்றது…!
2.முதலிலே பாசமாக என் கண்ணே… மணியே…! என்பார்கள்.
3.ஏதாவது தொலைந்து விட்டால் பொருள் வீணாகி விட்டால் அல்லது உடைந்து விட்டால் “தொலைந்து போடா…!” என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.
தன் பிள்ளைக்கு வாக்கை இப்படித்தான் கொடுக்கின்றோம்…!
சரி போனால் போகிறது… தன் பையன் அடுத்து நல்லது செய்ய வேண்டும்… நல்லது செய்வானா என்று பார்ப்போம்…! என்று எண்ணுவதில்லை.
ஏனென்றால் எண்ணெய் வாங்கி வர நேரம் ஆக ஆக என்ன செய்யும்…?
எப்பொழுது பார்த்தாலும் இவன் இப்படித்தான் செய்கின்றான்.. எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் செய்கின்றான்… என்று
1.பையன் மேல் உள்ள தாயின் இந்த எண்ணம் கிராஸ் ஆகி அவனை இயக்குகின்றது.
2.இங்கே பையனும் அவசரத்தில்… பதட்டம் பயத்துடன் எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் பையனை இயக்கத் தொடங்குகிறது.
விஞ்ஞான அறிவுப்படி 50 டன் 100 டன் எடை உள்ள ஒரு இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தொலை தூரத்திற்கு அனுப்புவதாக இருந்தாலும் இராக்கெட்டின் முகப்பிலே பதிவு செய்து அதை வைத்து இயக்குகின்றான்.
எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்களுக்கு அதை அனுப்புகின்றான்.
1.தொடர்பு கொள்வதற்கு ஏதும் கம்பியா (WIRE) வைத்திருக்கின்றான்…? இல்லை.
2.இவன் கம்ப்யூட்டர் மூலம் வெளிப்படுத்தக்கூடிய அந்த அலைகளைத் தான் அதற்குள் திணித்து இயக்கச் செய்கின்றான்.
அதே மாதிரித் தான் தாய் உடலில் வளர்ந்த உணர்வுகள்
1.எந்த வேட்கையின் உணர்வைப் பதிவு செய்ததோ
2.தன் பையனை எண்ணும் பொழுது அது எதைப் பதிவு செய்ததோ
3.அந்தப் பையன் பின்னாடி அது கவர் பண்ணிக் கொண்டே இருக்கும்.
லேட் ஆக ஆரம்பித்தபின் படபடா… படபடா…. என்று அடிக்கும்.
1.ஆக இந்த உணர்வு பாய்ந்துதான் அவனைத் தவறாகச் செய்யும்படி செய்கின்றது
2.தப்பு எப்படி உருவாகிறது…? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த உணர்வுகள் பாய்ந்தவுடன் எண்ணை வாங்கிய பாட்டிலை இடைவெளியில் ரோட்டிலே தவற விட்டு விடுகின்றான். காரணம் அந்த உணர்வுகள் அவனை இருளச் செய்து சிந்தனை இழக்கும்படி செய்கின்றது.
பாட்டில் உடைந்து விடுகின்றது எண்ணெயும் போய்விடுகிறது காசும் போய்விடுகின்றது வீட்டிற்கு வந்தாள் தாய் திட்டுகின்றது “தொலைந்து போகிறவன்,..” என்று…!
அவனைக் காப்பாற்றுவதற்குத் தான் இத்தனை வேலையும் தாய் செய்கின்றது. ஆனால் தொலைந்து போ…! என்று சொன்னால் காக்க முடியுமா…? இது தான் அங்கே பதிவாகின்றது.
அப்பொழுது தாயைப் பார்க்கும் பொழுதெல்லாம் பையனுக்குள் பயம் வரும். பயமும் அதற்குப்பின் வரக்கூடிய பதட்டமும் சேரும் பொழுது அவன் உடலில் நோய்.
1.படபடா…! என்று இயக்கி அது உற்பத்தியாகி அந்த உணர்வு இயக்கச் சக்கியாக மாறி
2.அவனுக்குள் அந்தச் சந்தர்ப்பம் தவறான செயல்களைச் செயல்படுத்தும்படி ஆக்கி விடுகிறது
காரணம்… இன்று நாம் உணவாக உட்கொள்ளக் கூடிய அனைத்திலும் விஞ்ஞான அறிவினால் பூச்சிக் கொல்லி மருந்துகளும் உரங்களும் கலந்துள்ளது. அந்த உணவைத்தான் உட்கொள்கிறோம்.
சாப்பிடும் சாப்பாட்டிற்குள் கெமிக்கல் கலந்த நிலை இருப்பதால் அந்த விஷத்தினுடைய துடிப்பு அதிகம். எந்த எண்ணத்தின் தன்மை எடுக்கின்றோமோ இந்த உணர்ச்சியைத் தூண்டி அதிலே தான் இயக்கம் இருக்கும்... மற்றதைச் சிந்திக்க விடாது…!
விஞ்ஞான அறிவிலே செயல்படுத்தப்பட்ட இத்தகைய நிலையால் நாம் அனைவரும் சீராகச் சிந்திக்க முடியாத நிலைகளில் தான் இன்று சென்று கொண்டிருக்கின்றோம்.
1.மனிதன் சிந்தனை இழக்கச் செய்யும்
2.அத்தகைய உணர்வின் பொறிகளே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.